சிறகடிக்க ஆசை: அண்ணாமலை எடுத்த முடிவு.. சிந்தாமணியின் மாஸ்டர் பிளான்! மீனாவை வீட்டை விட்டு துரத்தும் விஜயா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial Feb 17 2026) சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 பிப்ரவரி 17ஆம் தேதிக்கான எபிசோடில் ரோகிணியின் மகன் காய்ச்சலில் இருப்பதால் ரோகிணி முத்து மீனாவிடம் வந்து தன்னுடைய மகனை பார்க்கும் படி கெஞ்சுகிறார். மறுபக்கத்தில் முத்துவையும் மீனாவையும் வீட்டை விட்டு துறத்துவதற்காக விஜயா பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் நேற்றைய எபிசோடில் கிரிஷ் காய்ச்சலில் முத்து மீனா பெயரை சொல்லிக்கொண்டு இருந்தார். அது பற்றி ரோகிணி டாக்டரிடம் விசாரிக்க அதற்கு டாக்டர் நீங்க நான் கொடுத்த டேப்லெட் கொடுத்து பாருங்க இல்லனா முத்து மீனாவை கூட்டிட்டு வந்து கிரிஷிடன் காட்டுங்க என்று சொல்லி இருக்கிறார்.

இந்த நிலையில் (Siragadikka Aasai serial today episode) இன்றைய எபிசோடிலும் கிரிஷ்க்கு காய்ச்சல் கொஞ்சம் கூட குறையவில்லை. இதனால் ரோகிணியின் அம்மா ரோகிணியிடம் மீனாவையும் முத்துவையும் கூட்டிட்டு வரும்படி சொல்கிறார். வேறு வழி இல்லாமல் ரோகியையும் பேசி பார்க்கிறேன் என்று சொல்கிறார். பிறகு ஸ்ருதியின் ரெஸ்டாரண்டுக்கு ரோகிணி வருகிறார்.
சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
அந்த நேரத்தில் மீனாவும் அங்கு வர மீனாவிடம் நான் உங்ககிட்ட ஒரு உதவிக்கு கேட்கிறேன் தயவு செய்து பண்ணுவீங்களா என்று ரோகிணி கெஞ்ச, உனக்கு ஏற்கனவே உதவி பண்ணி கெட்ட பெயர் வாங்கினது போதாதா என்று மீனா திட்டுகிறார். அப்போது ரோகிணி நான் எனக்காக எதுவும் கேட்டு வரல கிரிஷ்க்கு காய்ச்சல் அதிகமாக இருக்கிறது அவன் உங்களை பாக்கணும்னு ஆசைப்படுறான். உங்க பேரையும் முத்து பேரையும் தான் சொல்லிட்டே இருக்கிறான். நீங்க வந்து பார்த்தால் சரியாகிவிடும் என்று சொன்னதும் மீனா கொஞ்ச நேரம் யோசித்து பார்த்துவிட்டு பிறகு நான் இது பற்றிய மாமாவிடமும் என் வீட்டுக்காரரிடம் பேசிவிட்டு சொல்கிறேன் என்று சொல்கிறார்.
மறுபக்கத்தில் அண்ணாமலை ஒரு முக்கிய முடிவு எடுத்திருக்கிறார். அதை நேற்றைய எபிசோடில் கடைசியில் முத்துவும் மீனாவும் இரவில் கட்டிப்பிடித்து ரொமான்ஸ் பண்ணி கொண்டு இருக்கும்போது அண்ணாமலை வந்ததும் அவர்கள் இருவரும் தனித்தனியாக போய்விடுட்டார்கள். இதனால் அவர்களுக்கு ரூம் கொடுக்க வேண்டும் என்று அண்ணாமலை முடிவெடுத்து மனோஜ் ரூமில் இருவரையும் தங்கிக் கொள்ள சொல்கிறார்.
அண்ணாமலை எடுத்த முடிவு
அதற்கு மனோஜ் முடியாது என்று சொல்ல, நீ இப்போ சிங்கிளா தானே இருக்கிற நீ எங்க கூட வந்து படுத்துக்கோ இல்லன்னா முத்து கட்டிலில் படுத்துக்க என்று சொல்கிறார். ஆனால் விஜயா முடியாது அவன் அந்த ரூம்ல தான் படுப்பான் என்று சப்போர்ட் பண்ணுகிறார். ஆனால் அண்ணாமலை பிடிவாதமாக முத்துவுக்கும் மீனாவுக்கும் தனியாக ரூம் கொடுத்தே ஆகணும் என்று சொல்கிறார்.
வழக்கம்போல முத்துவும் மீனாவும் எங்களுக்கு வேண்டாம் என்று சொன்னதும் நான் சொன்னா கேப்பீங்களா மாட்டீங்களா என்று அண்ணாமலை அதட்டி கேட்டதும் முத்து ஓகே சொல்லி விடுகிறார். அதைத்தொடர்ந்து விஜயா பார்வதி வீட்டிற்கு போகிறார். அங்கு சிந்தாமணியை கூப்பிட்டு அவரிடம் வீட்டில் நடந்த விஷயங்களை சொல்கிறார்.
முத்து மீனாவுக்கு கிடைத்த ஆஃபர்
பிறகு மனோஜ்க்கு சீக்கிரமா கல்யாணம் பண்ணி வைக்கணும் என்று சொல்ல, அதற்கு சிந்தாமணி உங்களுக்கு எந்த மாதிரி பொண்ணு வேணும் என்று கேட்டதும், எனக்கு படிச்ச பொண்ணா இருக்கனும். நிறைய சொத்து இருக்கணும், வீட்டுக்கு ஒரே பொண்ணா இருக்கணும் என்று விஜயா லிஸ்ட்டை சொல்கிறார். அதற்கு சிந்தாமணி நீங்க கேட்ட மாதிரி ஒரு பொண்ணு இருக்கு ஆனா அதில் ஒரு சிக்கல் இருக்கு என்று சொன்னதும், என்ன சிக்கல் என்று விஜயா கேட்கிறார்.
சிந்தாமணியின் பிளான்
அதற்கு சிந்தாமணி, நீங்க பணக்கார வீட்டு பொண்ணு கேக்குறீங்க அவங்க விசாரிக்கும் போது உங்க சின்ன மகன் ரவி நல்ல படிச்சவன்னு சொல்லலாம் ஆனா ரெண்டாவது மகன் டிரைவர், அவன் பொண்டாட்டி பூ கட்டுறவா என்று சொன்னா அவங்க பொண்ணு தர மாட்டாங்க என்று சொன்னதும், விஜயா சீக்கிரமாக அவங்க ரெண்டு பேரையும் வீட்டை விட்டு துரத்திடுவேன் என்று சொல்கிறார்.
முதலில் அதை பண்ணுங்க அப்புறம் இந்த பொண்ணு சம்பந்தம் முடிஞ்சிடும் என்று சிந்தாமணி ஏத்தி விடுகிறார். பிறகு விஜயா போனதும் முத்துவும், மீனாவும் வீட்டை விட்டு போனால்தான் அந்த வீட்டை என் பேருக்கு மாற்றமுடியும் என்று சிந்தாமணி மனதிற்குள் நினைத்துக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: அஞ்சலி பற்றி பாண்டியன் கேட்ட கேள்வி! சரவணன் சொன்ன விஷயம்! மீனா கண்டுபிடித்த உண்மை -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க












Click it and Unblock the Notifications