Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எனக்கு இன்று பிறந்தநாள்! ஆனால், உருக்கமாக பதிவு வெளியிட்ட "சிறகடிக்க ஆசை" கோமதி பிரியா! குவியும் கமெண்ட்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் மூன்று வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் மீனா என்ற கேரக்டரில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை கோமதி ப்ரியா. இந்த சீரியல் மூலம் தான் கோமதி ப்ரியாவுக்கு பெரிய அளவில் ரீச் கிடைத்தது. இதற்கு முன் விஜய் டிவியில் 'வேலைக்காரன்' சீரியலில் நடித்திருந்தாலும், 'சிறகடிக்க ஆசை' சீரியல் தான் அவரை வீட்டுக்குள் பிரபலமாக்கியது என்று சொல்லலாம்.

தற்போது தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் சீரியல்களுக்கு கமிட்டாகி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் கோமதி ப்ரியா. தமிழில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'மகாநதி' சீரியலின் மலையாள ரீமேக்கில் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் புதிதாக நடிக்கத் தொடங்கியிருக்கிறார். இதனால், மூன்று மொழிகளிலும் தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டே இருப்பதால், கோமதி ப்ரியாவின் கேரியர் நல்ல வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது.

Siragadikka Aasai serial Gomathi Priya Vijay TV Serial Tamil TV Actress

இந்த நிலையில், தனது பிறந்தநாளை கோமதி ப்ரியா மலையாள சீரியல் படப்பிடிப்பு நடைபெறும் இடத்திலேயே கோலாகலமாக கொண்டாடியிருக்கிறார். சக நடிகர்கள், டெக்னீஷியன்கள் எல்லாரும் சேர்ந்து கேக் வெட்டி, பூங்கொத்து கொடுத்து, அவரை சர்ப்ரைஸ் செய்திருக்கிறார்கள். அந்த சந்தோஷமான தருணங்களின் புகைப்படங்களை அவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் "மீனா சூப்பர்", "சீரியலில் போலவே ரியலிலும் பாசம் நிறைந்தவர்" என்று வாழ்த்துகளை குவித்து வருகிறார்கள்.

குறிப்பாக, கோமதி ப்ரியா தனது பிறந்தநாள் குறித்து இன்ஸ்டாகிராமில் ஒரு உணர்ச்சிபூர்வமான பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், "இந்த வருட பிறந்தநாள் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். எதிர்பாராத சர்ப்ரைஸ்கள், உண்மையான அன்பு, அக்கறை எல்லாம் சேர்ந்து மனசு நிறைந்த சந்தோஷம் கிடைச்சிருக்கு. பரிசுகள் கிடைத்தது ஒரு விஷயம் தான். அதைவிட, என்னை உண்மையிலேயே புரிந்து பார்த்த மாதிரி உணர்ந்தது தான் எனக்கு பெரிய விஷயம். மனசு முழுக்க நன்றியோட நிறைந்திருக்கேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Siragadikka Aasai serial Gomathi Priya Vijay TV Serial Tamil TV Actress

மேலும், பிப்ரவரி மாதம் தன் வாழ்க்கையில் ஒரு புதிய தொடக்கத்துக்கான மாதமாக மாறியிருக்கிறது என்றும், இந்த மாதம் தன்னை உள்ளார்ந்த அமைதி, ஆன்மிக வளர்ச்சி, புதிய ஐடியாக்கள், வாழ்க்கை குறிக்கோளுக்கு அருகில் போகும் உணர்வு ஆகியவற்றோடு இணைத்திருக்கிறது என்றும் அவர் பதிவில் தெரிவித்துள்ளார்.

"நான் என்னுடைய வாழ்க்கையின் சிறந்த பதிப்பாக மாறிக்கொண்டிருக்கிறேன். இதெல்லாம் இப்போ தான் தொடக்கம். 2026 சாதாரண வருடம் இல்லை... இது என் வருடம்" என்று அவர் நம்பிக்கையோடு எழுதியுள்ள வார்த்தைகள் ரசிகர்களை கவர்ந்துள்ளன.

Siragadikka Aasai serial Gomathi Priya Vijay TV Serial Tamil TV Actress

தொடர்ந்து சீரியல்களில் ஸ்ட்ராங்கான கேரக்டர் கிடைத்து, பல மொழிகளில் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கோமதி ப்ரியா இப்படிப் பாசிட்டிவ் மனநிலையோடு வாழ்க்கையை பார்க்கிறது அவருடைய ரசிகர்களுக்கும் ஒரு ஊக்கம் தான். 'சிறகடிக்க ஆசை' சீரியலில் மீனாவாக தினமும் டிவியில் பார்க்கும் கோமதி ப்ரியாவை, இப்படி ரியல் லைஃபில் சந்தோஷமாக, நம்பிக்கையோடு பார்க்கும் போது, ரசிகர்கள் மத்தியில் அவருக்கான ஆதரவு இன்னும் அதிகமாகி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+