சிறகடிக்க ஆசையின் வெற்றி! விஜய் டிவியில் அடுத்த சீரியலில் கமிட்டான நடிகை! அதுவும் இப்படி ஒரு கேரக்டர்!
சென்னை: விஜய் டிவியில் கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கும் மேலாக பல ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டு, டி.ஆர்.பி-யில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கின்றது 'சிறகடிக்க ஆசை' சீரியல். வெற்றி வசந்த் ஹீரோவாகவும், கோமதி ப்ரியா நாயகியாகவும், ஆர். சுந்தர்ராஜன், அனிலா குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வரும் இந்த தொடரின் வெற்றிக்கு காரணம், அதன் வலுவானக் கதைக்களமும், ஒவ்வொரு நடிகரின் எதார்த்தமான நடிப்பும் தான்.

வெற்றிக்கு கிடைத்த அங்கீகாரம்
'சிறகடிக்க ஆசை'யில் நடிக்கும் நடிகர்கள் பலருக்கும் இது ஒருத் திருப்புமுனையாக அமைந்த நிலையில், இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஒரு நடிகைக்கு புதிய ஹிட் சீரியலில் வாய்ப்பு கிடைத்துள்ளது, அவருக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.
'சிறகடிக்க ஆசை' சீரியலில், மனோஜின் மனைவி ரோகிணியின் அம்மாவாக நடித்து வரும் நடிகை சுதா புஷ்பா, இப்போது விஜய் டிவியின் மற்றொரு ஹிட் தொடரில் இணையவிருக்கிறார். அவர், சமீபத்தில் துவங்கப்பட்ட 'சக்தி வேல்' சீரியலின் இரண்டாம் பாகத்தில் நுழைகிறார். முதல் பாகத்தில் அன்பு செழியன் அம்மாவாக நடித்து வந்தவர் விலகியதால், அவருக்குப் பதிலாக சுதா புஷ்பா நடிக்க உள்ளார்.
பொதுவாக ஒரு கதாபாத்திரத்தை மாற்றுவதென்றால், அதே அளவுத் திறமையும், ஆழமும் கொண்ட நடிகரை தான் தயாரிப்பு நிறுவனம் தேர்ந்தெடுக்கும். அந்த வகையில், சுதா புஷ்பாவின் நடிப்புத் திறமைக்கு கிடைத்த மற்றொருக் கௌரவம் இது என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்!.
மற்ற நடிகைகளின் பங்களிப்பு
பொதுவாக, ஒரு சீரியல் பெரிய அளவில் வெற்றியடைந்தால், அந்த சீரியலில் நடிப்பவர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல பிரபலம் கிடைத்து விடுகிறது. அதனால் அதில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகளுக்கு மற்ற சீரியல்களிலும் வாய்ப்பு கிடைக்கிறது. 'சிறகடிக்க ஆசை'யில் உள்ள பல நடிகைகள் ஏற்கனவே பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கின்றனர்
கோமதி ப்ரியா (மீனா)
நாயகி கோமதி ப்ரியா, ஏற்கனவே விஜய் டிவியில் பல சீரியல் களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர். இவருக்குக் கிடைத்த வரவேற்பு, இவர் மற்ற சீரியல்களில் இருந்து கொண்டு வந்த அனுபவத்தின் வெளிப்பாடே. அதேபோல இந்த சீரியலில் இளைய மருமகளான ஸ்ருதி கதாபாத்திரத்தில் நடிக்கும் ப்ரீத்தா ரெட்டி, இதற்கு முன்பு சன் டிவி உட்பட பல சீரியல்களிலும் மாடலிங்கிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
இந்த சீரியலில் நடிக்கும் ஆர். சுந்தர்ராஜன், அனிலா குமார் போன்ற அனுபவம் வாய்ந்த நடிகர்களின் பங்கு தான், இந்த சீரியலை அனைத்து தரப்பினரையும் ரசிக்க வைத்திருக்கிறது. அதோடு இந்த சீரியலில் ரோகிணி விஜயாவிடம் எப்படி செய்யப போகிறார் என்று எதிர்பார்ப்போடு இருக்கும் நிலையில் இப்போது அதிரடியாக கதை நகர்ந்து வருகிறது.
பொதுவாக வெற்றி பெறும் சீரியல்கள் இரண்டாம் பாகமாக வருவது, மற்ற சீரியல்களுக்கு புதிய நடிகர்களை கொடுப்பது என பலப் பாராட்டுகளை விஜய் டிவி செய்து வந்தாலும், திறமையான நடிகர்களுக்கு புதிய வாய்ப்புகளை கொடுப்பதில் 'சிறகடிக்க ஆசை' முக்கிய பங்காற்றுகிறது என்பதே ரசிகர்களின் கருத்து! நடிகை சுதா புஷ்பாவின் இந்த புதிய அத்தியாயம் வெற்றி பெற ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.
-
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
பாண்டியன் ஸ்டோர் 2: கோமதியால் கதறி அழுத பாண்டியன்.. காந்திமதி சொன்ன விஷயம்! உடைந்த குடும்பம் -
Pandian Stores 2 serial update: பாண்டியன் செய்த முட்டாள்தனம்.. உயிருக்கு போராடும் கோமதி.. அரசி கேட்ட கேள்வி! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications