சிறகடிக்க ஆசை: அடுத்தடுத்து ரோகிணி பற்றிய உண்மை தெரிய காரணமே இதுதானா? அப்போ இனிமே ஆட்டம் வேற லெவல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி பற்றிய உண்மைகள் குடும்பத்திற்கு அடுத்தடுத்து தெரியவர இருக்கிறது. அதே நேரத்தில் இந்த மாற்றம் வருவதற்கு என்ன காரணம் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அது பற்றி பார்க்கலாம்.

தற்போதைய சூழ்நிலையில் சின்னத்திரையில் பல சேனல்களில் புதியது புதியதாக சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் அதிகமான சீரியல்களில் ஒரே கதை தான் ரிப்பீட் மோடில் வந்து கொண்டிருக்கிறது. கதாநாயகன் பணக்காரன வீட்டு பையனாகவும், கதாநாயகி ஏழை குடும்பத்து பெண்ணாகவும் இருக்கும்.

television siragadikka aasai serial vijay tv

எதிர்பாராத சூழ்நிலையில் இவர்களுடைய திருமணம் நடைபெறும். திருமணத்திற்கு பிறகு கணவரின் குடும்பத்திற்காக கதாநாயகி பல தியாகங்களை செய்கிறார். இதுதான் பல சீரியல்களில் காப்பி பேஸ்ட் ஆக இருக்கிறது. சில சீரியல்களில் அதை கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்க்கிறார்கள். சில சீரியல்களில் யார் என்னதான் ட்ரோல் செய்தாலும் கண்டுகொள்ளாமல் அப்படியே திரைப்படங்களையும், மற்ற சீரியல்களையும் காப்பி அடிக்கிறார்கள்.

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் கொஞ்சம் வித்தியாசமானது. ஆனால் கதாநாயகி மீனாவுக்கும் முத்துவுக்கும் எதிர்பாராத சூழ்நிலையில் தான் திருமணம் நடைபெற்றது. ஆனால் மீனா அவருடைய கணவர் முத்துவை காதலிக்க தொடங்கி இப்போது பல போராட்டங்களுக்கு மத்தியில் கணவரோடு மகிழ்ச்சியாக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

television siragadikka aasai serial vijay tv

அதே நேரத்தில் அந்த வீட்டில் மூத்த மருமகளாக இருக்கும் ரோகிணி பல்வேறு டுபாக்கூர் வேலைகள் செய்கிறார். ஏற்கனவே திருமணம் முடிந்து ஒரு குழந்தை இருக்கும் ரோகிணி அதை மறைத்து மனோஜை கல்யாணம் செய்கிறார். அதோடு தான் பெரிய பணக்காரர் வீட்டு பொண்ணு என்று ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். இப்படியான சூழ்நிலையில் ரோகிணி பற்றிய உண்மைகள் எப்போது வெளியே தெரியவரும் என்று எதிர்பார்ப்பில் காத்திருந்த ரசிகர்களுக்கு பல மாதங்களாக ஏமாற்றம் மட்டும் தான் கிடைக்கிறது.

பொதுவாக ஒரு டயலாக் சொல்வார்கள் "நான் எதிர்பார்த்தது ஒன்று ஆனால் கிடைச்சது இன்னொன்று" என்று, அதுபோலத்தான் ரசிகர்கள் எதிர்பார்ப்பது ரோகிணி மாட்ட வேண்டும் என்று, ஆனால் பிரச்சனை முத்து மற்றும் மீனாவிற்கு தான் வந்து கொண்டே இருக்கிறது.

இதனால் ரசிகர்கள் இயக்குனர் உட்பட சீரியல் தரப்பினரை வசைப்பாடி வருவதை பார்க்க முடிகிறது. இந்த பிரச்சனைகளுக்கு மத்தியில் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு டிஆர்பியின் டப் கொடுப்பது எதிர்நீச்சல் சீரியல்தான். இந்த இரண்டு சீரியல்களுக்கும் இடையே தான் அதிகமான போட்டி இருந்தது. ஆனால் சில மாதங்களுக்கு முன்பு எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வந்துவிட்டது.

television siragadikka aasai serial vijay tv

அதற்கு பிறகும் சிறகடிக்க ஆசை சீரியல் பெரிய அளவில் டிஆர்பியில் முன்னேறவில்லை. ஆனால் இப்போது எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் இன்று முதல் தொடங்க இருக்கிறது. இதனால் சிறகடிக்க ஆசை சீரியலில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே ரோகிணி சிக்குவது போன்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

இது ரசிகர்கள் மத்தியில் அதிக பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. ரோகிணி பற்றிய உண்மைகள் தெரிய வரும்போது விஜயாவின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்பதுதான் பலருடைய விருப்பம். ஆனால் இப்போதைக்கு ரோகிணி பற்றிய முழு உண்மையும் தெரியப்போவதில்லை. ஜீவாவிடம் ரோகிணியும் மனோஜும் பணத்தை வாங்கிய விஷயம் மட்டும்தான் தெரிய வருகிறது.

அதுபோல மனோஜ் புதியதாக பெரிய பங்களா ஒன்றை வாங்க போறேன் என்று ஏமாந்து போன விஷயமும் தெரிய வருகிறது. இன்று எதிர்நீச்சல் சீரியல் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் நாளை ரோகிணி மற்றும் மனோஜ் பற்றிய உண்மைகள் மொத்த குடும்பத்தின் முன்பும் உடைய இருக்கிறது. அதனால் இந்த இரண்டில் எந்த சீரியலின் டிஆர்பி அதிகரிக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+