சிறகடிக்க ஆசை சீரியல் மீனாவிற்கு ஏற்பட்ட திடீர் விபத்து.. சூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபரீதம்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகி மீனாவாக நடிகை கோமதி பிரியா நடித்து வருகிறார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என பழமொழிகளிலும் சீரியலில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவருக்கு மலையாள சீரியலில் நடிக்கும் போது திடீர் விபத்து ஏற்பட்டு இருக்கிறது.
அதாவது சூட்டிங் ஸ்பாட்டில் நடிகை கோமதிப்பிரியா பைக் ஓட்டுவது போன்று காட்சிகள் இருந்திருக்கிறது. ஆனால் அந்த பைக் பிரேக் பிடிக்காததால் கோமதி பிரியாவும் அவரோடு இருந்த நடிகையும் விபத்தில் சிக்கி இருக்கின்றனர். அது குறித்து கோமதி பிரியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களின் மத்தியில் இப்போது நல்ல இடத்தை பிடித்துக் கொண்டிருக்கிறது. அதனாலையே விஜய் டிவியில் தொடர்ச்சியாக அந்த சீரியல் தான் டிஆர்பியில் முதலிடத்தில் இருக்கிறது. அதோடு இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்களின் மத்தியில் பிரபலமாகி இருக்கின்றனர். அந்த வகையில் இந்த சீரியலில் கதாநாயகி மீனாவாக ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருக்கும் கோமதி பிரியாவிற்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர்.
இவருடைய சாந்தமான முகம் இவருக்கு மேலும் ஸ்பெஷலாக அமைந்திருக்கிறது. அதோடு கோமதி பிரியா முதல் முதலாக கலர்ஸ் தமிழில் ஓவியா என்ற சீரியல் மூலமாக சின்னத்திரையில் அறிமுகம் ஆகி இருந்தாலும் இவருக்கு வேலைக்காரன் சீரியல் மூலம் தான் பெரிய அளவில் பிரபலம் கிடைத்தது. அதைவிட இப்போது சிறகடிக்க ஆசை சீரியல் மூலமாக ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

அதன் காரணமாகவே தொடர்ச்சியாக கோமதி பிரியாவுக்கு பல மொழிகளில் இருந்தும் சீரியல் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் சிறகடிக்க ஆசை சீரியலின் மலையாள வெர்ஷனில் இவர்தான் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்த சீரியலில் கோமதி பிரியா நடித்துக் கொண்டிருக்கும் போது தான் அவருக்கு விபத்து ஏற்பட்டு இருக்கிறது. அதாவது அந்த சீரியலில் காட்சிப்படி கோமதி பிரியா பைக் ஓட்டுவது போல காட்சிகள் இருக்கிறது.
அப்போது இவரும் இவருடைய தோழியாக அந்த சீரியலில் நடிக்கும் நடிகையும் பைக்கில் போய்க்கொண்டிருக்கின்றனர். அப்போது வீட்டு பக்கத்தில் அந்த பைக்கில் பிரேக் பிடிக்காததால் அங்கிருக்கும் கம்பியில் இடித்ததால் கோமதி பிரியாவின் காலில் சிறு காயம் ஏற்பட்டிருக்கிறது. நல்ல வேளையாக பெரிய அளவில் அடிப்படைவில்லை. ஆனாலும் அந்த வீடியோவை வெளியிட்ட கோமதி பிரியா சீரியலில் எனக்கு ஏற்பட்ட முதல் ஆக்சிடென்ட் என்று அந்த வீடியோவுக்கு கேப்ஷன் கொடுத்திருக்கிறார்.

இதனால் பதறிப்போன ரசிகர்கள் ஐயோ கோமதி பிரியா பார்த்து கவனமா வேலை பாருங்க. முதலில் நம்ம ஆரோக்கியம் முக்கியம் என்று அவருக்கு அட்வைஸ் கொடுத்து கொண்டு இருக்கின்றனர். அதே நேரத்தில் அதைத் தொடர்ந்து இன்னொரு பதிவு வெளியிட்டிருக்கிறார். அதாவது சிறகடிக்க ஆசை சீரியலில் கிராமத்தில் பாட்டி வீட்டில் இருக்கும் கிச்சன் போல இருக்கிறது அங்கு ஒரு பாத்திரத்தில் பூவை கொட்டி அதை சோறு கிண்டுவது போல கிண்டி கொண்டிருக்கிறார்.
இதனால் சூட்டிங் ஸ்பாட்டில் நாங்கள் இப்படித்தான் சமையல் செய்து உங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லாமல் கோமதி பிரியா சொல்லிக் கொண்டிருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இத்தனை நாட்களும் முத்து மற்றும் மீனா இருவரும் சந்தோஷமாக இருந்த நிலையில் சத்யா தான் விஜயாவின் பணத்தை திருடிவிட்டு போனது என்ற உண்மை முத்துவுக்கு தெரிய வந்திருப்பதால் இனி முத்து மீனாவோடு சேர்ந்து வாழ்வாரா இல்லை மீனாவை வீட்டை விட்டு விரட்டி விடுவாரா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இனி என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications