சிறகடிக்க ஆசை சீரியல் செய்த சாதனை.. எல்லா இடத்திலும் No. 1.. காரணம் எதிர்நீச்சல் சீரியலா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சீரியல்களின் டிஆர்பி முடிவுகள் ஒவ்வொரு வியாழக்கிழமையும் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இன்று வெளியான டி.ஆர்.பியின் முடிவுகள் படி சிறகடிக்க ஆசை சீரியல் கிராமப்புறங்கள் மற்றும் நகரப்புறங்களில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

பொதுவாக சீரியல்கள் டிஆர்பியின் அடிப்படையில் தான் அது மக்கள் மத்தியில் எந்த அளவிற்கு விரும்பப்பட்டிருக்கிறது என்று அளவிடப்படுகிறது. என்னதான் சீரியல்கள் கதை விறுவிறுப்பாக இருந்தாலும் சில சீரியல்களின் கதை மக்கள் மத்தியில் ஏனோ எடுபடாமல் போய்விடுகிறது. ஒரு சில சீரியலுக்கு மக்கள் மத்தியில் அமோகமான வரவேற்பு ஏற்பட அந்த சீரியலுக்கு டிஆர்பியும் எகிறி விடுகிறது.

Television Siragadikka aasai serial

அதுபோல கிராமப்புறங்களில் மற்றும் நகரப்புறங்களில் மக்கள் தொலைக்காட்சியில் சீரியலை பார்க்கும் நேரத்தை அடிப்படையாகக் கொண்டு டிஆர்பி அளவிடப்படுகிறது. அதில் அதிகமான நேரங்கள் சன் டிவி சீரியல்கள் தான் இடம் பிடித்து வரும். சன் டிவி சீரியலுக்குத்தான் அதிகமான வரவேற்பு கிராமப்புறங்களில் மற்றும் நகரப்புறங்களில் இருந்து வருகிறது. அதிலும் சன் டிவியில் ப்ரைம் டைம் சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஜீ தமிழில் ஒளிபரப்பான கார்த்திகை தீபம் சீரியல் சன் டிவி சீரியல்களை பின்னுக்கு தள்ளி முதல் இடத்திற்கு வந்தது. அதற்கு பிறகு அதிகமாக சன் டிவி சீரியல்கள் தான் முதலிடத்தில் இருந்து வருகிறது. ஆனால் இந்த வார தகவலின்படி டிஆர்பியில் சிறகடிக்க ஆசை சீரியல் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

சிறகடிக்க ஆசை சீரியல் இரவு 9 மணி நேரத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. அதே நேரத்தில் சன் டிவியில் ஆரம்பத்தில் எதிர்நீச்சல் சீரியல் ஒளிபரப்பாகி வந்தது. அப்போது இரண்டு சீரியலுக்கும் அதிகமான போட்டி இருந்த நிலையில் சிறகடிக்க ஆசை சீரியலை விட எதிர்நீச்சல் சீரியல்தான் எப்போதும் முன்னணியில் இருந்தது.

ஆனால் எதிர்நீச்சல் சீரியல் இப்போது முடிவுக்கு வந்ததை தொடர்ந்து சிங்க பெண்ணே சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வந்ததால்தான் சிறகடிக்க ஆசை சீரியல் டிஆர்பியில் முன்னேறி இருக்கிறதா என்றும் கேள்விகள் வருகிறது.

ஆனாலும் டிஆர்பியில் தொடர்ச்சியாக சிங்க பெண்ணே சீரியல் அல்லது கயல் சீரியல் தான் முதல் இடத்தை இதுவரைக்கும் பிடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் 8.38 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை பிடித்திருக்கிறது. அதிலும் கடந்த வாரத்தில் பெரிய அளவில் எதுவும் உண்மை தெரியவில்லை.

பாட்டியின் பிறந்தநாள் பங்க்ஷன் மட்டும் தான் சிறகடிக்க ஆசை சீரியலில் கொண்டாடப்பட்டது. அந்த நேரத்திலேயே இவ்வளவு டிஆர்பி கிடைத்திருக்கிறது என்றால் இந்த வாரத்தில் கவரிங் நகை பற்றிய உண்மை தெரிய வர இருக்கும் நிலையில் அடுத்த வாரம் இதைவிட அதிகமான டிஆர்பி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நேற்று சிறகடிக்க ஆசை சீரியலின் 10ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ யூடியூபில் வெளியாகி இருந்தது. அது வீடியோ வெளியாகி சில மணி நேரத்திலேயே youtube-ல் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+