சிறகடிக்க ஆசை: முத்துவுக்காக விஜயாவை கிழித்து தொங்க விட்ட மீனா.. அண்ணாமலை செய்த உருப்படியான செயல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 மே 14-ஆம் தேதிக்கான எபிசோடில் முத்துவுக்கு எதிராக மொத்த குடும்பத்தினரும் முத்துவை திட்டிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் மீனா தன்னுடைய கணவருக்காக அனைவரிடமும் வாக்குவாதம் செய்கிறார். கடைசியில் அண்ணாமலை எதிர்பார்க்காத செயலை செய்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

Siragadikka aasai serial vijay tv

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் முத்துவும் மீனாவும் வீட்டிற்கு வந்தவுடன் எல்லோரும் முத்துவை திட்டிக் கொண்டிருக்கிறார்கள். குடும்ப மானம் போய்விட்டது என்று திட்டிக் கொண்டிருக்கும் போது ஒரு கட்டத்தில் கோபமான மீனா எல்லாரும் இவரை ஒரு குற்றவாளி மாதிரி பேசிக்கிட்டு இருக்கிறீங்க என்ன நடந்துச்சு தெரியுமா என்று கேட்டதும் சொல்லுங்க மீனா என்று ஸ்ருதி சொல்ல, என்னங்க சொல்றது இவருக்கு காரில் பிரேக் பிடிக்காம போயிருக்கிறது.

மீனா சொன்ன உண்மை

எதிரில் ஸ்கூல் பிள்ளைகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோ வந்து இருக்கு, அந்த ஆட்டோவில் இடிக்க கூடாது என்பதற்காகத்தான் அவர் தன் உயிரையும் மதிக்காம இன்னொரு பக்கமா போய் இருக்காரு. அந்த இடத்தில் அந்த போலீஸ்காரர் அருளுடைய பைக் இருந்திருக்கு. அவருக்கு அருண் அங்க நிக்கிறாருனு எப்படி தெரியும்? அந்த அருணுக்கு ஏற்கனவே இவரு மேல கோபம் எப்போதும் அவரிடம் பிரச்சனை பண்ணிக்கிட்டே இருக்காரு.

கோபத்தில் அண்ணாமலை

ஆனால் அங்க என்ன நடந்தது என்று தெரியாமலே யாரோ அறிவில்லாதவங்க வீடியோ எடுத்து இப்படி அனுப்பி இருக்காங்க என்று சொன்னதும் அனைவரும் ஸ்ருதியின் அம்மாவை பார்க்கின்றனர். இதனால் மீனா ஸ்ருதியிடம் நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க ஸ்ருதி இந்த வீட்ல நடக்கிற சின்ன பிரச்சனைக்கு உங்க அம்மா வந்துடுறாங்க அதுபோல எப்போதுமே இவரு மேல தான் குற்றம் சுமத்துறாங்க என்று ஃபீல் பண்ணி பேசுகிறார்.

அண்ணாமலை செய்த செயல்

அதற்கு மனோஜ் இவன் குடிச்சிட்டு வண்டி ஓட்டிருப்பான் என்று சொன்னதும் அண்ணாமலை கோபப்பட்டு இன்னும் ஒரு வார்த்தை பேசினா அறைஞ்சிடுவேன் என்று சொன்னதும் தப்பு பண்ணுனது அவன், இவனை எதுக்கு சொல்றீங்க என்று விஜயா கோபப்பட நீ வாய மூடு உன் பையன் தானே கார்ல பிரேக் பிடிக்கலைன்னு சொல்றாங்க அவனுக்கு ஏதாவது அடிபட்டு இருக்கான்னு ஒரு வார்த்தை கூட கேட்க மாட்டியா என்று விஜயாவை அடக்குகிறார்.

ஸ்ருதி அம்மாவுக்கு பதிலடி

பிறகு ஸ்ருதி அம்மாவிடம் உங்க பொண்ணு இந்த வீட்ல நல்லா தான் இருக்கா. ஒரு நாளாவது இந்த வீட்ல எனக்கு சந்தோஷம் இல்லைன்னு வந்து உங்ககிட்ட சொல்லி இருக்காளா? அப்படி சொல்ல மாட்டா. நீங்க எல்லாம் பண்றது எல்லாம் பார்த்தா மீனா சொல்ற மாதிரி தான் தெரியுது என்று சொன்னதும் ஸ்ருதி தன்னுடைய அம்மாவை அழைத்து மலையாளத்தில் திட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது விஜயா இதெல்லாம் பார்த்து இவங்க என்ன மொழி பேசுறாங்க என்று குழப்பத்தில் இருக்கிறார்.

விஜயாவுக்கு அவமானம்

பிறகு இந்த வீட்டு குடும்ப விஷயத்தில் தலையிடக்கூடாது என்று திட்டுறா என்று ஸ்ருதி அம்மா சொல்ல, விஜயா அப்படி எல்லாம் இல்ல சம்மந்தி இந்த வீட்டில மரியாதையான சம்மந்தி நீங்கதான் இருக்கீங்க. ஏற்கனவே பணக்காரன்னு சொல்லிட்டு இருந்தவரு எப்போ செத்துப்போனாருன்னு தெரியல நீங்க இந்த குடும்ப விஷயத்தில் எப்ப வேணாலும் என்ன கருத்து சொல்லலாம் என்று சொன்னதும் அண்ணாமலை கோபப்படுகிறார். அதனால் ஸ்ருதி அம்மா அங்கிருந்து சென்று விடுகிறார்.

மன்னிப்பு கேட்ட ஸ்ருதி

பிறகு அண்ணாமலை முத்து மீனாவிடம் கார் பற்றி கேட்கிறார். அப்போது கார் வந்துடும் ஆனால் லைசென்ஸ் கேன்சல் பண்ணிட்டாங்க என்று சொன்னதும் விஜயா வேலையும் போச்சா என்று நக்கல் செய்ய அண்ணாமலை முறைத்ததும் அங்கிருந்து போய் விடுகிறார். பிறகு எல்லாம் சரியா போயிடும் பாத்துக்கலாம் என்று சொல்லிவிட ஸ்ருதி முத்து மீனாவிடம் மன்னிப்பு கேட்கிறார். மறுபக்கத்தில் சிட்டி இடம் ஒருவர் வந்து முத்துவுக்கு எதுவும் ஆகல என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

சிட்டி ப்ளான்

அந்த நேரத்தில் ஒருவர் வந்து திருட்டு நகையை சிட்டியிடம் கொடுத்து இதற்கு பணம் வாங்கி தர வேண்டும் என்று சொல்கிறார். அவர் போனதும் சிட்டியும் ரோகிணியின் பழைய பிஏவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது இந்த நகையை ரோகிணியிடம் தான் கொடுத்து பணத்தை வாங்கணும் என்று பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். மறுபக்கத்தில் முத்துவும் மீனாவும் இன்ஸ்பெக்டரிடம் சென்று நடந்த விஷயத்தை சொல்கிறார்கள்.

இன்ஸ்பெக்டர் அட்வைஸ்

அதற்கு இன்ஸ்பெக்டர் உனக்கும் அருணுக்கும் என்னதான் பிரச்சனைனு தெரியல. மீண்டும் மீண்டும் முட்டிக்கிட்டே நிக்கிறீங்க. நீ அவனை வீடியோ எடுத்து போட்டதால் அவனுடைய வேலை போயிடுச்சு அந்த கோபத்தில் தான் அவன் இப்படி பண்ணுறான் என்று நினைக்கிறேன். இனி அருண்கிட்ட எந்த பிரச்சனையும் பண்ணிக்காத. நான் உனக்காக மேலிடத்தில் பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+