சிறகடிக்க ஆசை: உருப்படியாக ரோகிணி செய்த செயல்.. முத்துவோடு வந்த மீனா.. விஜயா பாடு திண்டாட்டம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஜூலை 15ம் தேதிக்கான எபிசோடில் மீனா முத்து உடன் காரில் வருகிறார். இருவரும் வாக்குவாதம் செய்தாலும் இருவருக்குள் இருக்கும் காதலும் வெளிப்படுகிறது. அதே நேரத்தில் விஜயா மற்றும் அண்ணாமலை குடும்பத்திற்காக ரோகிணி ஒரு முக்கியமான முடிவெடுத்திருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மீனா முத்துவுக்காக கொடுத்த சாப்பாடை பார்த்து யோசித்துக் கொண்டிருக்கிறார். அப்போது மீனா பக்கத்தில் இருப்பது போன்று முத்துவுக்கு தெரிகிறது. பிறகு மீனா இல்லாததை பார்த்து முத்து ஃபீல் பண்ணுகிறார். அந்த நேரத்தில் செல்வம் வந்து என்னாச்சு என்று கேட்க, முத்து சமாளிக்கிறார். அதற்கு நீ தங்கச்சி இல்லாத சோகத்தில் இருக்கிற, நீதானே வீட்டை விட்டு போக சொன்ன நீயே போன் பண்ணி கூப்பிடு என்று சொல்லிவிட்டு போகிறார்.

அடுத்ததாக மீனா அவருடைய தோழிகளுடன் பேசிக் கொண்டிருக்கிறார். பூ வாங்க போக வேண்டும் என்று எல்லோரும் சேர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது முத்து அங்கு காரில் வருகிறார். அப்போது பூக்கட்டும் பெண் அண்ணனோட கார் வந்துருச்சு என்று சொல்லி சவாரி ஏதாவது போறீங்களா என்று கேட்க, இப்போதான் முடிச்சுட்டு வரேன் என்று சொல்கிறார். அப்போ எங்களை கோயம்பேட்டில் கொண்டு விட்டுடுவீங்களா என்று அவர்கள் கேட்டதும் அவ்வளவுதானா? வாங்க என்று சொல்கிறார். ஆனால் முத்துவும் மீனாவும் இருவரும் பேசிக்கொள்ளாமல் மாறி மாறி பார்த்துக் கொண்டே இருக்க, அங்கிருந்திருந்தவர்கள் உங்களுக்குள்ள சண்டையா? என்று கேட்கின்றனர்.
அப்போது மீனா வர தயங்குவதால் பிறகு பூ கட்டுபவர்கள் அவரை கட்டாயப்படுத்திக் கூட்டிக் கொண்டு போகின்றனர். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர் ஆனால் பேசாமல் இருப்பதை பார்த்ததும் பூ கட்டுபவர்கள் புருஷன் பொண்டாட்டிக்குள்ள சண்டை இருந்தா தான் காதல் அதிகரிக்கும் என்று கிண்டல் செய்து கொண்டு வருகிறார்கள். பிறகு மீனா இறங்கியதும் அமைதியாக முத்துவும் மீனாவும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
அப்போது மீனா வீட்டுக்கு வா என்று ஒரு வார்த்தை சொன்னால் ஓடி வந்துருவேன் என்று யோசிக்க, நான் வரேன்னு ஒரு வார்த்தை சொன்னால் தூக்கிட்டு போயிடுவேன் என்று முத்துவும் மனதிற்குள்ளேயே பேசிவிட்டு கிளம்புகிறார். மறுபக்கத்தில் ரோகிணியும் மனோஜும் ரெஸ்டாரண்டில் ஒரே இளநீரில் இரண்டு ஸ்ட்ரா போட்டு குடித்துக் கொண்டிருக்கின்றனர். அதை அங்கிருந்த எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
அப்போது இரண்டு பேர் வந்து வேலை கேட்கின்றனர். கணவன் மனைவி இருவருக்கும் இங்கே வேலை கொடுக்க முடியாது யாராவது ஒருவருக்கு தான் வேலை கொடுக்க முடியும் என்று மனோஜ் சொன்னதும் அவர்கள் இரண்டு பேரும் ஒரே இடத்தில் வேலை பார்க்கணும் நாங்க வீட்டை விட்டு வந்துட்டோம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ரோகிணி அந்த பெண்ணை தன்னுடைய வீட்டில் சமையல் செய்வதற்காக கூட்டிக்கொண்டு போவதற்கு முடிவு எடுக்கிறார். பிறகு அந்த பெண்ணும் சம்மதம் சொல்ல, வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வருகிறார். விஜயாவிடம் நடந்ததை சொல்லிவிட்டு அந்த பெண்ணை சமைக்க சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த பெண்ணும் விதவிதமாக சமைத்துக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications