சிறகடிக்க ஆசை: ரோகிணி மலேசியாவில் இருந்து வரல.. முத்து போட்ட போடு! ஸ்ருதி செய்த சம்பவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஜனவரி 16ம் தேதிக்கான எபிசோடில் ரோகிணி மலேசியாவில் இருந்து வரவில்லை என்ற உண்மையை முத்து கண்டுபிடிக்கிறார். அதே நேரத்தில் ரோகினி நடிப்பதால் அவருக்கு புதிய பிரச்சனையும் வருகிறது.
இன்றைய எபிசோடு ஏமாற்றத்தை கொடுத்தது என்று சொல்லலாம். முத்துவும் மீனாவும் மலேசியாவில் இருந்து வந்த முதியவர்களை வீட்டிற்கு கூட்டிட்டு வந்து இருந்தபோது அவர்களிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக ரோகிணி எனக்கு பல் வலிக்கிறது என்று ஏமாற்றி ஹாஸ்பிடலுக்கு போக முயற்சி செய்தார். அப்போது ஸ்ருதி நானும் வரேன் என்று ஹாஸ்பிடலுக்கு போயிருக்கிறார்.

பிறகு முத்துவும் மீனாவும் பேசிக் கொண்டிருக்கும்போது எனக்கு ரோகிணி செய்வதை பார்த்தால் சந்தேகமாய் இருக்கிறது. கண்டிப்பா அந்த பார்லம்மா மலேசியாவில் இருந்து வரல. ஏதோ பெருசா ஏமாத்திட்டு இருக்குது சீக்கிரமா அதை கண்டுபிடிக்கணும் என்று சொல்ல, அதற்கு மீனா ஆமாங்க காலையில் தான் அவங்க வந்து தேங்காயை எடுத்து அனில் மாதிரி கொறிச்சிட்டு போனாங்க. இப்போ பல் வலிக்கிறதுன்னு சொல்லுறாங்க. இது என்னாலையும் நம்ப முடியல.
ஆனாலும் ஸ்ருதி போயிருக்காங்க என்ன நடக்குதுன்னு பார்க்கலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்ததாக மலேசியாவில் இருந்து வந்தவர்கள் குடும்பத்தினர் எல்லாரிடமும் சொல்லிவிட்டு கிளம்புகின்றனர். அப்போது மனோஜ் வருகிறார் அவர்களைப் பார்த்ததும் மலேசியக்காரர்கள் இவர்தான் மலேசியா மாப்பிள்ளையா என்று கேட்க விஜயா சந்தோஷப்படுகிறார்.

அப்போது மனோஜ் ரோகிணியை எங்கே என்று கேட்க, ரோகிணி ஹாஸ்பிடல் போயிருக்கிறாள் அவளுக்கு பல்வலி என்று விஜயா சொல்ல அதைக் கேட்டு மனோஜ் அதிர்ச்சி அடையார். என்கிட்ட கூட சொல்லலையே என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். பிறகு மலேசியக்காரர்கள் கிளம்பி போகிறார்கள். அடுத்ததாக மறுபக்கத்தில் ரோகிணி ஹாஸ்பிடலில் ஸ்ருதியை வீட்டிற்கு போக சொல்கிறார்.
ஆனால் ஸ்ருதி உங்க கூடவே இருக்கிறேன் என்று சொல்லிவிடுகிறார். பிறகு டாக்டர் வந்து செக் பண்ணினால் நம்ம நிலைமை என்ன ஆகும் என்று ரோகிணி பயந்து கொண்டே இருக்கிறார். அப்போது டாக்டர் வந்து உங்களுக்கு ஒரு பல்லில் சொத்தை இருக்கிறது. அதனால் தான் வலி வந்திருக்கிறது அதனால் அதை ரிமூவ் பண்ணனும் என்று பல்லை பிடுங்க சொல்கிறார்.

அதற்கு ரோகிணி வேண்டாம் என்று மறுக்கிறார். ஆனாலும் ஸ்ருதி பிடித்து வைத்து பிடுங்க சொல்கிறார். பிறகு டாக்டர் பல்லை பிடுங்கி விடுகிறார். அடுத்ததாக ரோகிணி வீட்டிற்கு வருகிறார். அப்போது ஸ்ருதி ஐஸ்கிரீம் வாங்கிட்டு வந்து எல்லாருக்கும் கொடுக்கிறார். அப்போது விஜயா இன்னும் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வந்து இருக்கலாம் உங்க ஊரு காரங்க கிட்ட நீ ஏதாவது பேசி இருக்கலாம் என்று சொல்ல அதற்கு தானே நான் போனேன் என்று ரோகினி மனதுக்குள் நினைத்துக் கொள்கிறார்.
அப்போது முத்து மீனாவிடம் ரோகிணி பற்றிய உண்மைகளை சீக்கிரமா கண்டுபிடிக்கணும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக ரவி ரெஸ்டாரண்டில் பாஸ் மகளோடு மீட்டிங்கில் இருக்கிறார். அப்போது ஸ்ருதி போன் செய்து கொண்டே இருக்க ரவி போனை எடுக்காமல் இருக்கிறார். இதனால் ஸ்ருதி கோபப்படுகிறார்.

கடைசியாக முத்து செட்டில் நண்பர்களோடு பேசிக் கொண்டிருக்கிறார். அங்கு நண்பர் ஒருவர் வந்து எனக்கு துபாயில் வேலை கிடைத்திருக்கிறது என்று சொல்லிவிட்டு எல்லோருக்கும் சரக்கு பாட்டி வைக்கிறேன் என்று முதலில் சொன்னதும் அந்த நபர் குடிக்க சொல்லி வற்புறுத்துகிறார். உடனே மீனாவுக்கு போன் செய்து நான் குடிக்கட்டுமா என்று பர்மிஷன் கேட்கிறார். அதற்கு மீனா முடியாது என்று சொல்கிறார் இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications