சிறகடிக்க ஆசை: முத்து பற்றிய ஜெயில் ரகசியத்தை உடைத்த மனோஜ்.. சிந்தாமணி கொடுத்த அதிர்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 மார்ச் 17ஆம் தேதிக்கான எபிசோடில் முத்து மற்றும் மனோஜ் இருவருக்கும் இடையே சண்டை ஏற்படுகிறது. அப்போது முத்து ஏற்கனவே ஜெயிலுக்கு போயிட்டு வந்தவன் தானே என்று மனோஜ் திட்டுகிறார். இதனால் மீனாவிற்கு சந்தேகம் வருகிறது. அதே நேரத்தில் முத்து மற்றும் மீனாவிடம் சிந்தாமணி வந்து சிக்குகிறார்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் செல்வமும் அவருடைய மனைவியும் முத்து வீட்டிற்கு வருகிறார்கள். அவர்களிடம் முத்து பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அம்மாவும் அப்பாவும் காசிக்கு போனதாகவும் அவர்கள் கொடுத்த பிரசாதத்தை கொடுக்க வந்திருப்பதாகவும் சொல்லிக் கொண்டிருக்கிறார். பிறகு அவர் கிளம்பும்போது மீனாவும் முத்துவும் அவர்களை சாப்பிட சொல்கிறார்கள்.

மனோஜின் திமிர்
இருவரும் முதலில் வேண்டாம் என்றும் மறுக்க மீனா கட்டாயப்படுத்தியதால் சாப்பிட உட்காருகின்றனர். அந்த நேரத்தில் ரோகிணி வந்து மனோஜ்க்கு டைம் ஆகுது மீட்டிங் போகணும் டிபன் ரெடியா என்று கேட்க, பத்து நிமிஷம் இருங்க இவங்க திடீர்னு வந்துட்டாங்க அவங்க சாப்பிட்டதும் உடனே நீங்க சாப்பிட்டுக்கலாம் என்று சொல்ல, ரோகிணி ரூமுக்கு சென்று ஏற்கனவே ஒருத்தங்க சாப்பிட்டு இருக்காங்க நீ வெயிட் பண்ணு என்று சொல்கிறார்.
அதற்கு மனோஜ் கண்ட கண்டவங்களுக்காக நான் வெயிட் பண்ணிட்டு இருக்கனுமா எனக்கு மீட்டிங் டைம் ஆகுது என்று கத்தி கொண்டு இருக்க, அதை கேட்டு செல்வமும் அவருடைய மனைவியும் சாப்பிடாமல் எழுந்து சென்று விடுகிறார்கள். அப்போது மீனா மற்றும் ரவி இருவரும் சாப்பிட்டுவிட்டு போக சொல்ல அவர்கள் கேட்காமல் போய்விட முத்து மனோஜிடம் பொறுமையாக பேச சொல்ல அதற்கு மனோஜ் கத்தி கொண்டு இருக்கிறார்.
அசிங்கப்படும் செல்வம்
இதனால் முத்து செல்வத்தை வந்து சமாதானப்படுத்த வர அவர் ஏற்கனவே கிளம்பி போய் விடுகிறார். அவர்கள் போய்விட்டதை தெரிந்ததும் மனோஜ் நான் சாப்பிட போறேன் என்று திமிராக வர முத்து உனக்கு இப்போ சாப்பிடணும் அவ்வளவுதானே என்று டைனிங் டேபிளில் உட்கார வைத்து தோசையை எடுத்து வாயில் அமுத்தி விட ரோகிணி எதுக்கு இப்படி பண்ணுறீங்க என்று கத்துகிறார்.
அதற்கு ஸ்ருதி உங்க ஹஸ்பண்ட் பேசுனது மட்டும் தப்பு இல்லையா? அவரால்தான் பிரச்சனை ஸ்டார்ட் ஆச்சு என்று முத்துக்கு சப்போர்ட் பண்ண, மனோஜ் உனக்கு என்னடா இப்ப என்னை கொல்லனுமா ஏற்கனவே நீ ஜெயிலுக்கு போயிட்டு வந்தவன்தானே என்று சொன்னதும் முத்து கோபப்பட்டு அலமாரியில் இருந்து கத்தி எடுத்துக்கொண்டு மனோஜ் குத்த ஓடுகிறார். அந்த நேரத்தில் ஸ்ருதியின் அம்மா வந்து இதை பார்த்து அதிர்ச்சியாகி கத்துகிறார்.
இன்றும் ஏமாற்றம்தான்
அதற்கு ஸ்ருதி ஒரு வழியாக அவருடைய அம்மாவை சமாளித்து அனுப்புகிறார். அடுத்ததாக ரவியும் ஸ்ருதியும் உங்க ரெண்டு பேரும் மேலயுமே தப்பு இருக்கு ரெண்டு பேரும் சாரி சொல்லுங்க என்று சொல்ல வேறு வழியில்லாமல் இருவரும் சாரி சொல்லிட்டு கிளம்புறாங்க. பிறகு முத்து கோபமாக யோசித்துக் கொண்டே இருக்க அப்போது மீனா முத்துவிடம் அவர் எதுக்கு நீங்க ஜெயிலுக்கு போனவர் என்று சொல்லுறாரு என்று கேட்க, ஏதாவது சின்ன சின்ன கேசுக்காக போறேன் இல்ல அதை வச்சு சொல்லுறான் என்று சமாளித்துவிட்டு போகிறார்.
மறுபக்கத்தில் கிச்சனில் மீனா வேலை பார்த்துக் கொண்டிருக்க ஸ்ருதி போன் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார். அப்போது ஸ்ருதியிடம் எதுக்காக சிரிச்சிட்டு இருக்கீங்க என்று ரோகிணி கேட்கிறார். இது ஒரு ஃபன் கேம் என்று ஸ்ருதி சொல்ல, ரோகிணி இங்கே பல பேர் ஃபன் பண்ணிட்டு இருக்காங்க என்று மீனாவை ஜாடைமாடையாக சொல்ல அதனால் மீனா கோபப்படுகிறார்.
சொதப்பிய மனோஜ்
அப்போது ஸ்ருதி மீனா மற்றும் ரோகினியை சமாதானம் செய்கிறார். பிறகு நம்ம ஒரு கேம் விளையாடலாம் என்று ரவி ஒரு ஸ்டைலை மனோஜிடம் செய்து காண்பிக்க மனோஜ் அதை ரோகிணியிடம் வேறுவிதமாக செய்து காண்பிக்கிறார். பிறகு வரிசையாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக செய்து காட்ட முத்து கடைசியாக வேறு விதமாக செய்கிறார். பிறகு எல்லாரும் செய்ததுக்கும் ரவி சொன்னதுக்கும் சம்பந்தம் இல்லை என்று தெரியும்போது இப்படித்தான் ஒருத்தங்களை மாதிரி இன்னொரு தங்களால் இருக்க முடியாது ஒவ்வொருத்தங்களும் வித்தியாசமா இருக்காங்க என்று முத்து சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் வீட்டுக்கு வெளியே ஒரு நபர் வந்து நின்று வீட்டில் யாராவது இருக்கீங்களா எங்க அக்காவுக்கு டிரைவிங் சொல்லிக் கொடுக்கணும் அதுக்காக வந்திருக்கோம் என்று சொன்னதும் முத்து கீழே வந்து பார்க்கிறார். அங்கு சிந்தாமணி காரில் இருக்கிறார். பிறகு மீனாவே கீழே வரச் சொல்லி முத்துவும் மீனாவும் சிந்தாமணியிடம் பேச வருகிறார்கள்.
சிந்தாமணிக்கு மிரட்டல்
சிந்தாமணி இவர்கள் இருவரையும் பார்த்ததும் அதிர்ச்சி அடைகிறார். இவங்ககிட்ட ஒரு நல்ல டிரைவிங் ஸ்கூல் எங்க இருக்குன்னு கண்டுபிடினு சொன்னதுக்கு இங்கே கூட்டிட்டு வந்துட்டாங்க என்று சிந்தாமணி அலட்டிக்கொள்ள, முத்து நீங்க எதுக்காக எங்க அம்மா கிட்ட டான்சுக்கு சேர்ந்தீங்கன்னு எனக்கு தெரியும் இப்போ நீங்க என்கிட்டயும் பிளான் இல்லாம வந்து சேர்ந்திருக்க மாட்டீங்க அதுவும் எனக்கு தெரியும். ஆனா நீங்க என்கிட்ட ஸ்டூடண்டா வந்தா உங்களுக்கு நல்லபடியா கார் ஓட்டி தர சொல்லி தர வேண்டியது என்னுடைய பொறுப்பு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications