சிறகடிக்க ஆசை: கதையில் மாற்றம்! இறந்து போன விஜயா, அண்ணாமலைக்கு அடுத்த கல்யாணம்! முத்து செய்த செயல்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 இல் அண்ணாமலைக்கு எதிர்பாராத விதமாக இரண்டாவது திருமணம் நடைபெறுகிறது. அதே நேரத்தில் முத்து சொன்ன வார்த்தையை கேட்டு மீனா கோபப்படுகிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் முத்து எமன் கெட்டப்பில் வந்து நிற்கும் போது விஜயா அவரை பார்த்து பயந்து கொண்டிருக்கிறார். அப்போது அண்ணாமலை வந்து என்ன முத்து இதெல்லாம் என்று கேட்க, என்னப்பா நீ மட்டும் எப்படி என்னை கண்டுபிடிச்சா என்று முத்து ஆச்சரியமாக கேட்கும் போது, நீ என்னுடைய பையன் உன்னை பற்றி எனக்கு தெரியாதா? என்று அவர் கேட்கிறார்.

பயந்து போன விஜயா
அதற்கு விஜயா இவன் என்னை பயமுறுத்திட்டான் என்று புலம்பி கொண்டு இருக்கிறார். பிறகு முத்து இந்த கெட்டப் எப்படி போட்டார் என்ற விஷயத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ஒருவர் வந்து முத்து போட்டு இருந்த வாடகை டிரஸை வாங்கி கொண்டு போகிறார். பிறகு மீனாவிடம் கெட்டப் எப்படி இருந்தது என்று கேட்க, அதற்கு மீனா நீங்கதான் வந்து இருக்கீங்கன்னு அப்பவே கண்டுபிடிச்சிட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
மீனா சொன்ன வார்த்தை
அதோடு நீங்க அருமையா நடிக்கிறீங்க இதை சைடு பிசினஸா கூட நீங்கள் செய்யலாம் என்று சொல்ல, எனக்கு வேண்டாம் எனக்கு டிரைவர் வேலையே போதும் என்று முத்து சொல்லிக் கொண்டிருக்கிறார். இது மட்டும் உண்மையா இருந்தா அந்த பாசகயிறை அருண் மேல தான் வீசணும்னு ஞாபகம் வந்துச்சு என்று முத்து சொன்னதும், மீனா கோபப்படுகிறார். ஒருத்தவங்களை அழிக்கணும்னு நினைக்கிறது புண்ணியம் கிடையாது பாவத்தில் வந்து சேரும் என்று மீனா திட்டி விடுகிறார்.
இறந்த விஜயா
பிறகு எல்லாரும் தூங்கிக் கொண்டிருக்கும் போது விஜயாவிற்க்கு யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்கிறது. கதவை திறந்து பார்க்கும் போது ஒரு எருமை மாடு நிற்கிறது. பக்கத்தில் எமன் நிற்பது போன்று தெரிகிறது. அப்போது எமன் விஜயா கழுத்தில் பாச கயிறை போட்டு இழுத்து விட விஜயா கீழே விழுந்து இறந்து விடுகிறார். பிறகு அவர் இறந்து ஒரு வருடம் ஆனதுபோல காட்டப்படுகிறது.

அண்ணாமலைக்கு கல்யாணம்
பிறகு பிள்ளைகள் எல்லோரும் அண்ணாமலையின் மனதை மாற்றி பரசுவின் உதவியோடு அவருக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். அப்போது விஜயா பதறி அடித்துக்கொண்டு தாலி கட்டாதீர்கள் என்று கத்த அண்ணாமலை என்ன ஆச்சு என்று கத்துகிறார்கள். விஜயாவுக்கு இது கனவு என்று தெரிய வருகிறது.
முத்துக்கு சந்தேகம்
தண்ணி குடிச்சிட்டு வந்து படு என்று அண்ணாமலை திட்ட, விஜயா சிவப்பு சேலையை எடுத்துக்கொண்டு கிச்சனுக்கு வேக வேகமாக போக மீனா முழித்து விடுகிறார். என்னை இவங்க வேகமாக போறாங்க என்று முத்துவிடம் விஜயத்தை சொல்லிக் கொண்டிருக்கும்போது விஜயா கிச்சனிலிருந்து புடவையை மாற்றிக்கொண்டு ரூமிற்கு போகிறார். இதை பார்த்தது என்ன நடந்திருக்கும் என்று முத்துவிடம் மீனா விசாரிக்க, ஏதோ விஷயம் நடந்து இருக்கு அதனால்தான் அம்மா இப்படி பயந்து போய் இருக்காங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications