சிறகடிக்க ஆசை: ரோகிணி பற்றிய உண்மைகளை உளறிய வித்யா, பார்வதி.. விஜயா எடுத்த முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜனவரி 21 ஆம் தேதிக்கான எபிசோடில் ரோகிணி பற்றிய உண்மைகளை முத்துவும் மீனாவும் கண்டுபிடிப்பதற்காக முயற்சி செய்கின்றனர். அப்போது ரோகிணி பற்றி வித்யா மற்றும் பார்வதி சில விஷயங்களை உலறிவிடுகிறார்கள்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மீனா வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது முத்து வருகிறார். நான் சாப்பாடு வைக்கவா என்று கேட்க, அதற்கு முத்து மலேசியாவில் இருந்து கூட்டிட்டு வந்தவங்க நான் வேண்டாம்னு சொல்லியும் கேட்காமல் சாப்பாடு வாங்கி கொடுத்துட்டாங்க என்று சொன்னதும் மீனா நீங்க சாப்பிட்டீங்கனா எனக்கு போன் பண்ணி சொல்லி இருக்க வேண்டியதுதானே என்று திட்டிக் கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் மனோஜும் ரோகிணியும் வருகின்றனர். அப்போது முத்து மனோஜிடம் நான் மலேசியாவில் இருந்து கூட்டிட்டு வந்த ரெண்டு பேருடைய சொந்தக்காரங்க மலேசியா ஜெயில்ல ஏதோ பெரிய வேலை பாக்குறாங்க என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது நீங்க எதுக்கு இந்த வேலை எல்லாம் பாத்துட்டு இருக்கீங்க? எங்க அப்பா எப்படி போனா உங்களுக்கு என்ன? இனிமே எங்க பிரச்சனையில் நீங்க தலையிடாதீங்க என்று கோபப்பட்டு திட்டுகிறார்.
அதற்கு முத்து சரி என்று சொல்லிவிடுகிறார். பிறகு மீனா அப்பா ஜெயில்ல இருந்தாங்கன்னா அவங்களை எப்படி வெளியே எடுக்கலாம் என்று தானே யோசிப்பாங்க? ஆனா ரோகிணி எதுக்காக கோவப்படுறாங்க என்று கேட்க, எனக்கும் அதே டவுட்டு தான் இருக்கு. இப்போ இந்த டவுட்டு அதிகமாயிடுச்சு இதில் என்ன ரகசியம் இருக்கு என்று நாம கண்டுபிடிக்கணும் என்று ஜீவா கொடுத்த கண்ணாடியை போட்டுக்கொண்டு இருவரும் அங்கும் இங்கும் நடக்கின்றனர்.

பிறகு முதல் விசாரணையை பார்வதி ஆன்ட்டி வீட்டில் இருந்து தொடங்கலாம் என்று முத்து முடிவெடுக்கிறார். அடுத்த நாள் பார்வதி வீட்டுக்கு அல்வாவுடன் முத்துவும் மீனாவும் போகிறார்கள். பிறகு பார்வதியிடம் நலம் விசாரித்துவிட்டு எனக்கு தெரிஞ்ச ஒரு பையனுக்கு வெளிநாட்டு பொண்ணு வேணும்னு கேட்கிறான்.
உங்களுக்கு தெரிஞ்சவங்க வெளிநாட்டில் இருக்காங்களா? அதுவும் உங்களுக்கு மலேசியாவில் நிறைய தெரிஞ்சவங்க இருக்காங்களா? அதனால தானே ரோகிணியை எங்க வீட்டு மருமகளாக்குனீங்க என்று கேட்க, அதற்கு பார்வதி எனக்கு மலேசியாவில் யாரும் தெரியாது. எனக்கு ரோகிணியின் அப்பாவையும் தெரியாது.

ரோகிணி ஆரம்பத்தில் எனக்கு மசாஜ் பண்ணுவா. ரொம்ப பாசமா பேசுவா விஜயாவிடம் தான் ரோகிணி மலேசியா பொண்ணுன்னு சொல்லி இருக்கா. அதற்கு பிறகு தான் எனக்கே தெரியும் என்று உளறுகிறார். பிறகு இதைப்பற்றி வித்யாவிடம் விசாரிக்கணும் என்று முத்துவும் மீனாவும் முடிவெடுக்கின்றனர்.
மறுபக்கத்தில் வித்யா வீட்டிற்கு வந்த முருகன் வண்டிக்கு திருஷ்டி கயிறு வாங்கி கொடுத்து வித்யாவிடம் கல்யாணம் ஆயிடுச்சா என்று கேட்க, வித்யா இல்லை என்று சொல்கிறார். அதனால் சந்தோஷப்பட்டு நான் கிளம்புறேன் என்று முருகன் கிளம்புகிறார். அடுத்ததாக மீனா வித்யாவின் வீட்டிற்கு வந்து பூ கொடுத்து விட்டு நலம் விசாரித்து பேசிக் கொண்டிருக்கிறார்.

அப்போது முத்து மற்றும் மீனாவிற்கு இடையே இருக்கும் காதலை பற்றி வித்யா விசாரித்துக் கொண்டிருக்கிறார். அப்போது ரோகிணியும் மனோஜும் தான் லவ் பண்ணி கல்யாணம் பண்ணுனாங்க அவங்க கிட்ட கேட்கலாமே என்று கேட்க, அதை எங்க அவ கிட்ட கேட்க... அவளே ஏற்கனவே 10 லட்சம் டென்ஷன்ல இருக்கா என்று பேச ஆரம்பிக்க உடனே மீனா அதையே பிடித்துக் கொண்டு, ரோகினியை பற்றி கேள்வியை கேட்கிறார்.
ஆனால் வித்யா ரோகிணி எனக்கு காலேஜில் படிக்கும் போது தான் தெரியும் என்று சொல்கிறார். ஏற்கனவே ஒருமுறை மீனாவிடம் பேசும்போது எனக்கு ரோகினியை சின்ன வயசுல இருந்து தெரியும் என்று பேசிய வித்யா இப்போது மாற்றி பேசுகிறார். இதனால் இதை மீனா கவனிக்கிறார். அடுத்ததாக ரோகினியின் அப்பா பற்றி விசாரித்து கொண்டிருக்கிறார். இதனால் வித்யாவிற்கு சந்தேகம் வந்து மீனாவை எப்படியாவது இங்கிருந்து அனுப்ப வேண்டும் என்று சாக்கு போக்கு சொல்லி அனுப்பி விடுகிறார்.
பிறகு முத்துவும் மீனாவும் சந்தித்து பேசுகிறார்கள். அப்போது வித்யா முன்னுக்கு பின்னாக பேசுகிறார். முன்னாடி பேசியது அப்படியே இப்போ மாத்தி பேசுகிறார் என்று சொல்ல, இவங்களுக்குள் இருக்கிற விஷயத்தை சீக்கிரமா கண்டுபிடிக்கலாம் என்று முத்து சொல்கிறார்.

அடுத்ததாக மீனா வந்து விசாரித்த விஷயத்தை ரோகிணியிடம் வித்யா சொல்கிறார். நான் எதுவும் சொல்லல ஆனால் நீ கவனமா இருந்துக்க என்று சொன்னதும் ரோகிணி கோபத்தில் இருக்கிறார். அந்த நேரத்தில் மனோஜ் என்னவென்று விசாரிக்க, என் குடும்ப விஷயத்தில் மீனாவும் முத்துவும் அடிக்கடி தலையிடுறாங்க.
அவங்களுக்கு சீக்கிரமா அந்த கதிரை கண்டுபிடித்து பணத்தை வாங்கிக் கொடுத்துடனும் என்று சமாளிக்கிறார். அடுத்ததாக மீனா ஒரு இடத்திற்கு பூ கொடுக்கப் போகிறார் அப்போது அவருடைய பூ பெட்டியை சிந்தாமணியின் ஆட்கள் தூக்கிக் கொண்டு போகிறார்கள். சிந்தாமணி வீட்டிற்கு அவர்கள் போனதும் அங்கு சிந்தாமணி மீனாவை சாப்பிட சொல்லி நீ என்கூடவே வேலைக்கு வந்துரு என்று மிரட்டுகிறார்.
ஆனால் மீனா எனக்கு தன்னம்பிக்கை அதிகம். நான் உங்க கூட இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்லி விடுகிறார். அடுத்ததாக அண்ணாமலை வீட்டில் இருக்கும்போது முத்து அப்பா அப்பா என்று கத்திக்கொண்டே வர எதுக்குடா இப்படி கத்திட்டு வர என்று கேட்க, நீ இதில் கையெழுத்து போடு உனக்கு பாஸ்போர்ட் எடுக்கணும் நாம எல்லாரும் மலேசியாவுக்கு போவோம் என்று சொல்ல ரோகிணி அதிர்ச்சி ஆகி இருக்கிறார்.

ரோகினி அப்பா ஜெயலில் இருக்கிறார் நாம யாருமே போய் அவங்க கிட்ட பேசலனா அவங்க வருத்தப்பட மாட்டாங்களா? என்று கேட்க நாம அங்க போய் எங்க தங்குறது? என்று கேட்டதும், அதான் ரோகினிக்கு எப்படியும் பெரிய வீடு இருக்குமே அவங்களோட சித்தி அங்கதானே இருக்காங்க அந்த வீட்டில் நாம தங்கிக்கலாம் என்று சொல்கிறார். அதற்கு ரோகிணி வேண்டாம் என்று சொல்ல, விஜயா கண்டிப்பா போறோம் என்று சொல்லிவிடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications