சிறகடிக்க ஆசை: க்ரிஷை அனாதை என திட்டிய விஜயா.. ரோகிணி சொன்ன வார்த்தை! முத்து பிடித்த பாயிண்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் "சிறகடிக்க ஆசை" தொடரின் இன்றைய எபிசோடில், கிருஷ் பாட்டிக்கு அடிபட்டு இருப்பதால் முத்து க்ரிஷை வீட்டிற்கு அழைத்து வர அதை பார்த்து ரோகிணி அதிர்ச்சியில் இருக்கிறார். அப்போது விஜயா சொன்ன வார்த்தையை கேட்டு ரோகிணிக்கு கோபம் வருகிறது. அப்போது க்ரிஷ்க்காக ரோகிணி மனோஜிடம் சொன்ன வார்த்தையை கேட்டு முத்துக்கு சந்தேகம் வருகிறது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில், ரோகிணி ஷோரூமில் வேலை செய்து கொண்டிருக்கிறார். அப்போது ராணி, ரோகிணியை தனியாக அழைத்து, வசிய லேகியம் ஒன்றை கொடுக்கிறார். ராணி ரோகிணியிடம், "இது எங்க ஊர்ல ரொம்ப பேமஸ். இதை நைட்ல ஒரு டம்ளர் சாருக்கு கலக்கி கொடுத்தீங்கன்னா, உங்களை விட்டு பிரியவே மாட்டார்" என்று கூறுகிறார். ரோகிணி அதன் விலை எவ்வளவு என்று கேட்க, ராணி ஆயிரம் ரூபாய் என்று சொல்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

விலை அதிகமாக இருப்பதாக ரோகிணி சொல்ல, வசியம் லேகியம் இல்ல, அதனால தான் என ராணி கூறுகிறார். ரோகிணி பணத்தை கொடுத்துவிட்டு அந்த லேகியத்தை வாங்கிக் கொள்கிறார். பின்னர், மனோஜை நினைத்து ரோகிணி தனக்குள்ளே சிரித்துக் கொள்கிறார். வீட்டில், மனோஜ் ரோகிணியுடன் சந்தோஷமாக இருப்பது போல் நினைத்து சிரித்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரம் பார்த்து மனோஜ் அறைக்கு வருகிறார். ரோகிணி அவரிடம் பால் எடுத்து வரட்டுமா என்று கேட்க, மனோஜ் தனக்கு வயிறு ஃபுல்லாக இருப்பதாக சொல்கிறார்.

இருந்தாலும் ஒரு டம்ளர் குடித்தால் நல்லது என்று ரோகிணி வற்புறுத்துகிறார். மனோஜ் வேண்டாம் என்று மறுக்க, ரோகிணி கோபப்படுகிறார். "உங்க அம்மா சொல்றத மட்டும் கேப்பீங்க, நான் சொன்னா கேக்க மாட்டீங்களா?" என்று கேட்கிறார். சரி பால் தானே, எடுத்துட்டு வா குடிக்கிறேன் என்று மனோஜ் சமாதானம் சொல்கிறார். சமையலறைக்கு சென்ற ரோகிணி மீனாவிடம் பால் கேட்கிறார். மீனா பால் இல்லை என்று கூறுகிறார். "சரி நான் இப்ப வாங்கிட்டு வரேன்" என்று கூறிவிட்டு, அறைக்கு வரும்போது க்ரிஷ் வந்து நிற்கிறார்.

க்ரிஷை பார்த்ததும் ரோகிணி அதிர்ச்சியுடன் நிற்கிறார். 'என்னவா இருக்கும்? ஒருவேளை விஷயம் தெரிஞ்சி இருக்குமா?' என பயப்படுகிறார். முத்து குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் கூப்பிட்டு பாட்டிக்கு அடிபட்டிருக்கும் விஷயத்தை சொல்லி, "கொஞ்ச நாள் க்ரிஷ் இங்கதான் இருப்பான்" என்கிறார். அதற்கு விஜயா, "அதுதான் அவங்க அம்மா இருக்கா இல்ல கூட்டிட்டு போய் விடு" என்று சொல்கிறார். அதற்கு முத்து, "அவங்க திரும்பியும் வெளிநாட்டுக்கு போயிட்டாங்கனு சொன்னாங்க" என்கிறார். விஜயா அந்த பையனை தங்க வைக்க மறுக்கிறார்.

அதனால் அண்ணாமலை, முத்து என அனைவரும் பேசி விஜயாவை சம்மதிக்க வைக்கின்றனர். ரோகிணி மனோஜ் பக்கத்தில் சென்று, "அந்த பையன பார்த்தா பாவமா இருக்கு. இங்கே தங்க சொல்லலாம்" என்று சொல்லுமாறு கூறுகிறார். மனோஜ் விஜயாவிடம் அதே விஷயத்தை சொல்கிறார். உடனே முத்து, "யாரெல்லாம் க்ரிஷ் இங்க இருக்கனும்னு சொல்றீங்க கையை தூக்குங்க" என்று கேட்கிறார். விஜயா தவிர மற்ற அனைவரும் கைத்தூக்குகின்றனர். "இதனால என் பேச்சை இங்க யாரும் கேட்க போறீங்க" என்று சொல்லிவிட்டு விஜயா செல்கிறார்.

மறுபக்கம் ரோகிணி மருத்துவமனைக்கு வந்து அம்மாவை பார்த்தவுடன் கோபப்படுகிறார். "உனக்கு ஒழுங்கா வரத் தெரியாதா? என்று கேட்கிறார். அதற்கு ரோகிணியின் அம்மா, "வந்தவுடனே எப்படி இருக்குன்னு கூட கேட்க மாட்டேங்கிற? உன்னோட பிரச்சனை பத்தி மட்டும்தான் பேசுற" என்கிறார். மேலும், "பைக் இடிச்சு நான் ஒரு அடியா போய் சேர்ந்திருந்தா என்ன பண்ணி இருப்பாங்க? அந்த நேரத்துல க்ரிஷ் பத்தி எனக்கு தோணுச்சு? அவன் அனாதையா விட்டுட கூடாதுன்னு தோணுச்சு" என்று சொல்லி கண்கலங்குகிறார். "அது எப்படிம்மா நான் அவனை விட்டுடுவேன்" என ரோகிணி கூறுகிறார். "அதுக்காக தான் இப்பவே சொல்றேன், நீ உன் குடும்பத்தில் உண்மையை சொல்லிடு. அவங்க கொஞ்ச நாள் கோவப்படுவாங்க அப்புறம் சரியாயிடுவாங்க" என்று அம்மா அறிவுரை கூறுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+