சிறகடிக்க ஆசை: முத்துவிடம் நழுவிய கறிக்கடைக்காரர்.. ஆனால், மனோஜ் கண்ட காட்சி! தொடங்கிய பிரச்சனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 மார்ச் 21ஆம் தேதிக்கான எபிசோடிலும் கறிக்கடைக்காரர் அண்ணாமலை குடும்பத்திடம் சிக்காமல் நழுவி போயிருக்கிறார். அதே நேரத்தில் மனோஜ் செய்த குழப்பத்தால் புது பிரச்சனை வெடிக்கிறது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

கடந்த வாரத்திலிருந்து பரசுவின் மகள் கல்யாணத்தில் கறிக்கடைக்காரர் முத்து குடும்பத்திடம் சிக்குவது போன்றே ப்ரோமோவை காட்டி வருகிறார்கள். ஆனால் இன்றைய எபிசோடிலும் முத்து கண் முன்னாடியே போகும் கறிக்கடைக்காரரை கடைசி வரைக்கும் அவரும் பார்க்கவில்லை, மீனாவும் பார்க்கவில்லை. அதுபோல கறிக்கடைக்காரருக்கும் இது ரோகிணியின் குடும்பம் என்பது தெரியாமலேயே அவரும் அங்கு வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். சரி என்ன தான் நடந்தது என்று பார்க்கலாம்.

Siragadikka aasai serial vijay tv

சிக்கும் முத்து

இன்றைய எபிசோடில் ஆரம்பத்தில் மது குடிக்கும் இரண்டு நபர்கள் முத்துவின் மீது மோத, முத்து அவர்கள் கையில் இருந்து சரக்கு பாட்டில் கீழே விழும்போது அதைப்பிடித்து அவர்களிடம் கொடுத்துவிட்டு இங்கே குடிக்காதீங்க வெளியே போய் குடிங்க என்று அனுப்பி வைக்கிறார்.


அண்ணாமலையின் நம்பிக்கை

அந்த நேரத்தில் கையில் சரக்கு பாட்டில் மற்றும் தண்ணீரை வைத்துக்கொண்டு முத்து நிற்பதை பார்த்ததும் மனோஜ் இவன் குடிக்க ஆரம்பிச்சுட்டான் என்று நினைத்து தப்பாக புரிந்து கொண்டு விஜயாவிடம் போய் நாம இங்கிருந்து கிளம்பலாம், முத்து குடிக்க தொடங்கிட்டான்.. ஏதாவது பிரச்சனை பண்ணுவான். அது நமக்கு தான் அசிங்கம் என்று சொல்ல, விஜயா இந்த விஷயத்தை அண்ணாமலையிடம் சொல்ல அண்ணாமலை முத்து அப்படி எல்லாம் பண்ண மாட்டான் இந்த கல்யாணத்தை முத்து தான் முன்னாடி நின்னு நடத்துகிறான். அதனால அவன் கண்டிப்பா அப்படி செய்யவே மாட்டான் என்று உறுதியாக சொல்கிறார்.

குழப்பும் மனோஜ்

ஆனால் மனோஜ் தான் கண்ணால் பார்த்தேன் என்று சொன்னதும் இது பற்றி அண்ணாமலை மற்றும் விஜயா மீனாவிடம் சொல்கிறார்கள். முதலில் மீனாவும் இதை நம்ப மறுக்கிறார். ஆனாலும் கவனமா இருக்கிறது நல்லது என்று அண்ணாமலை சொன்னதும் முத்துவை மண்டபத்தில் தேடுகிறார். அப்போது ஸ்ருதி மற்றும் ரவியிடம் முத்துவை பற்றி விசாரிக்க அவர்கள் தெரியாது என்று சொல்கிறார்கள்.

தேவையில்லாத தொல்லை

ஆனாலும் ஸ்ருதி ஒரு போட்டோ எடுத்து கொள்வோம் என்று கூப்பிட்டு போட்டோ எடுத்து விடுகிறார்கள். பிறகு மீனாவுடன் சேர்ந்து ரவியும் முத்துவை தேடுகிறார். அந்த நேரத்தில் அந்த இரண்டு குடிகாரர்கள் சமையல் செய்யும் இடத்திற்கு வந்து கறிக்கடைக்காரர் மணியிடம் ஊறுகாய் கேட்கின்றனர். அவர் சரக்கு குடிக்கவா என்று கேட்டதும் ஆமா என்று சொன்னதும் சரி தரேன் ஆனால் வெளியே போய் குடிங்க என்று அவர் ஊறுகாயை கொடுத்து அனுப்புகிறார்.

சந்தேகப்படும் மீனா

அந்த நேரத்தில் அவர்கள் சரக்கு ஊத்திக் கொண்டிருக்கும்போது முத்து தெரியாமல் அவர்கள் மீது மோதிவிடுகிறார். அதனால் சரக்கு முத்துவின் சட்டையில் சிந்தி விடுகிறது. அப்போது நான் உங்களை உள்ளே வச்சு குடிக்க கூடாதுன்னு சொல்லி இருக்கேனே வெளியே போங்க என்று அனுப்பி வைக்க அந்த நேரத்தில் அந்த பக்கமாக வந்த இரண்டு பெண்கள் இப்படி சாராய வாடை வருது என்று திட்டிவிட்டு போகிறார்கள்.

உண்மையை நிரூபித்த முத்து

அவர்கள் சொன்ன திசையில் போகும்போது அங்கு முத்து நிற்கிறார். மீனாவை பார்த்தவுடன் கல்யாண வேலை எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு என்று முத்து கேட்க, நீங்க உங்க வேலையை ஆரம்பிச்சிட்டீங்களா? என்று திட்ட, முத்து நான் குடிக்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ரவியும் அங்கு வருகிறார் ரவியும் முத்து குடித்து விட்டார் என்று முத்துவை திட்டிக் கொண்டிருக்கிறார்.

மீண்டும் மீண்டும் ஏமாற்றம்

ஆனால் நான் குடிக்கவில்லை என்று முத்து சொல்லிக்கொண்டே இருக்க, இவர்கள் கேட்காமல் உங்கள் மீது வாடை வருகிறது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பிறகு இருங்க நான் வரேன் என்று முத்து தன்னுடைய காரில் போய் சட்டையை மாற்றி விட்டு வருகிறார். அப்போது முத்துவின் மீது வாடை வரவில்லை என்பதால், குடிக்கவில்லை என்று மீனா புரிந்து கொள்கிறார். இந்த கலவரம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் கறிக்கடைக்காரர் மணி முத்து பக்கத்தில் தான் இருக்கும் ஒரு பழ பெட்டியை தூக்கிக்போகொண்டு போகிறார். ஆனால் யாரும் அவரை கண்டுகொள்ளவில்லை.

ஸ்ருதி எடுத்த போட்டோ

அந்த நேரத்தில் ஸ்ருதி போட்டோ எடுத்துக் கொண்டே இருக்கிறார். (ஒருவேளை ஸ்ருதியின் போட்டோவை எப்பவாவது பார்க்கும்போது கறிக்கடைக்காரர் மணி தெரிவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும் இது எப்போது நடக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.) மறுபக்கத்தில் மணி சமையல் வேலைகளை எல்லாம் செய்து முடித்து இருப்பதை பார்த்து பரசு அண்ணாமலையிடம் மணியை பற்றி பெருமையாக பேசுகிறார்.

அண்ணாமலையின் விருப்பம்

அப்போது அண்ணாமலை நான் அவரை பாக்கணும் என்று சொன்னதும் பரசுராமன் கறிக்கடைக்காரரை வந்து கூப்பிடுகிறார். அதற்கு அவர் இப்போதைக்கு சமையல் வேலை இருக்கிறது. அதை முடிச்சுட்டு வந்து உங்க பிரண்டை பாத்துக்கிறேன் என்று சொல்லி அனுப்புகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+