சிறகடிக்க ஆசை: விஜயா வீட்டுக்கு வந்த போலீஸ்.. முத்து கண்டுபிடித்த உண்மை.. ரோகிணியை மிரட்டும் மீனா!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஜனவரி 23ஆம் தேதிக்கான எபிசோடில், அப்பா இறந்துவிட்டார் என்று ரோகிணி நாடகம் போடுகிறார். அதே நேரத்தில் விஜயா வீட்டுக்கு போலீஸ் வந்திருக்கின்றனர். அதுபோல ரோகிணி பற்றிய உண்மை மீனாவிற்கு தெரிய வருகிறது.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் அண்ணாமலையை தேடி போலீஸ்காரர் ஒருவர் வீட்டிற்கு வருகிறார். இதனால் விஜயா முத்து என்ன தப்பு செஞ்சானோ என்று பதறுகிறார். ஆனால் அந்த போலீஸ் நான் பாஸ்போர்ட்டுக்கு அப்ளை பண்ணி இருப்பதால் அது பற்றி விசாரிக்க விபரங்களை எடுப்பதற்காக வந்துள்ளேன் என்று சொல்கிறார்.

பிறகு அவர் விசாரித்துக் கொண்டிருக்கும் போது போலீஸை பார்த்ததும் அவர் பதறுகிறார். அப்போது போலீஸ் இவர் யார் என்று கேட்க, அதற்கு அவர் பதில் சொல்ல முடியாமல் இருக்கிறார். அதற்கு ரோகிணி இது என்னுடைய மாமா தான் என்று உள்ளே கூப்பிடுகிறார்.
போலீஸ்காரர் போனதும் பிரவுன் மணி தன்னுடைய நாடகத்தை தொடங்குகிறார். ரோகிணியின் அப்பாவை ஜெயிலுக்குள் வைத்து அவருடைய பிசினஸ் எதிரிகள் கொன்னுட்டாங்க என்று ரோகிணி சொன்னது போலவே சொல்கிறார். இதை கேட்டு ரோகிணி அழுது புலம்பி நாடகம் போடுகிறார். அப்போது உங்க அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்து அவர் ஜெயிலிலேயே இறந்ததால் அங்கேயே எல்லா காரியத்தையும் முடித்து விட்டார்கள்.
நீங்க அவருடைய முகத்தை கூட பார்க்க முடியாத நிலை ஆகிடுச்சு என்று சொன்னதும், நான் மலேசியாவுக்கு போகவேண்டும் அப்பாவை பார்க்க வேண்டும் என்று ரோகிணி நாடகமாடுகிறார். இதையெல்லாம் உண்மை என நம்பி விஜயாவும் அழுகிறார். அப்போது பிரவுன் மணி நீ அங்க வர முடியாது மலேசியாவில் உன்ன உங்க அப்பாவின் பிசினஸ் எதிரிகள் பார்த்தால் உன்னையும் ஏதாவது பண்ணிடுவாங்க என்று சொல்கிறார்.
அதனால் அண்ணாமலை மலேசிய ட்ரிப்பை கேன்சல் பண்ண சொல்கிறார். இதைத்தொடர்ந்து மீனா முத்துவிடம் ரோகிணி விஷயத்தில் ஏதோ பெரிய மர்மம் இருக்கிறது. நாம மலேசியா போகனும் என்று சொன்ன இரண்டாவது நாளே அவருடைய அப்பா இறந்துவிட்டார் என்று சொல்கிறார்கள் என்று சொல்ல, அதற்கு முத்து ஆமா பார்லர் அம்மா ஏதோ ஒரு பெரிய உண்மையை மறைக்குது என்று சொல்கிறார்.
மறுபக்கத்தில் விஜயா பார்வதியிடம் சென்று வீட்டில் நடந்த விஷயங்களை எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அங்கு மீனாவின் எதிரியான சிந்தாமணி விஜயாவிடம் டான்ஸ் பழகுவதற்கு வருகிறார். மேலும் விஜயாவை புகழ்ந்து பேசி அவரிடம் பரதநாட்டியம் ஆடி காட்டுகிறார். இதனால் விஜயா அவரை டான்ஸ் கிளாஸில் சேர்ப்பதாக சொல்கிறார்.
மேலும் நான் திருமண மண்டபத்தில் அலங்காரம் செய்யும் வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்ல, மீனா பற்றிய விஷயத்தை பார்வதியும் சொல்கிறார். அப்போது மீனாவை விஜயா அவமானப்படுத்தி பேசிக் கொண்டிருப்பதை பார்த்து விஜயாவுக்கு மீனா பிடிக்காது என்பதை தெரிந்து கொள்கிறார்.
இதனால் விஜயாவை வைத்து மீனாவை பழிவாங்க சிந்தாமணி திட்டம் போடுகிறார். இதை தொடர்ந்து ரோகிணியின் கனவில் மீனாவுக்கு எல்லா விஷயமும் தெரிந்து அவர் வீட்டில் சொல்ல வருவது போலவும், அப்போது ரோகிணி கத்தியை எடுத்து மீனாவை மிரட்ட இறுதியில் மீனா அவரிடம் இருந்து கத்தியை பிடுங்கி ரோகிணியின் கழுத்தில் வைத்து மிரட்டுவது போலவும் கனவு கண்டு கதற அருகில் இருந்த மனோஜ் அவரை எழுப்பி தண்ணீர் குடுக்கிறார்.
பிறகு உங்க அப்பா தான் கனவில் வந்திருப்பாரு என்று கட்டிலுக்கு அருகில் செருப்பை வைத்து தூங்குகிறார். கடைசியாக வித்யாவிடம் தான் கண்ட கனவு குறித்து ரோகிணி சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் அம்மா ரோகிணி கேட்டது போலவே அவருடைய உண்மையான அப்பாவின் புகைப்படத்தை கொண்டு வருகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications