சிறகடிக்க ஆசை: கல்யாணம் முடிந்ததும் முத்துவிடம் மல்லுக்கு நிற்கும் அருண்.. மீனா கண்ட காட்சி, சீதா முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஜூன் 24ஆம் தேதிக்கான எபிசோடில் சீதா மற்றும் அருணுக்கு ரெஜிஸ்டர் மேரேஜ் முடிகிறது. அந்த இடத்திற்கு முத்து வருகிறார். ஆனால் முத்து கண்ட காட்சியை பார்த்து மீனா அதிர்ச்சியில் நிற்கிறார். அதே நேரத்தில் சீதாவிடம் திருமணம் குறித்து முத்து கேட்ட கேள்விக்கு இனி சீதா என்ன முடிவெடுக்க போகிறார் என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் சீதா மற்றும் அருண் இருவரையும் மீனா ரிஜிஸ்டர் ஆபீசுக்கு கூட்டிட்டு வருகிறார். அப்போது இருவருக்கும் மாலை மாற்றி ஐயர் வைத்து மந்திரம் சொல்ல வைத்து திருமணத்தையும் முடித்து விடுகிறார். பிறகு இவர்களின் கல்யாணத்திற்கு மீனாவே சாட்சி கையெழுத்து போட்டுவிட்டு அருண் மற்றும் சீதாவுடன் புகைப்பட எடுத்துக் கொள்கிறார்.

கல்யாணம் முடிந்தது
அந்த நேரத்தில் முருகனுடன் அதே ஆபீசுக்கு வரும் முத்து அதிகாரியை பார்க்க வேண்டும் என்று உள்ளே செல்கிறார். அங்கு ஒருவரிடம் முத்து பேசிக் கொண்டிருக்கும் போது சீதா, மீனா, அருண் மூன்று பேரும் வெளியே வருகின்றனர். அப்போது முத்துவிற்கு ஃபோன் வருகிறது. ஃபோன் பேசிக் கொண்டிருக்கும் முத்து இவர்களை கவனிக்காமல் திரும்பி நின்று கொண்டிருக்கிறார். முத்துவை கடந்து வெளியே வரும் மீனா பிறகுதான் தன்னுடைய பர்ஸை உள்ளே வைத்துவிட்டு வந்தது ஞாபகத்துக்கு வருகிறது.
ஏமாறும் முத்து
உடனே நான் போய் எடுத்துட்டு வரேன் என்று ஆபிசுக்கு வரும்போது ஆபீசுக்கு உள்ளே இருந்து முத்து வெளியே வருகிறார். மீனாவை பார்த்ததும் என்ன இங்க இருக்க என்று கேட்கிறார், பிறகு அவரே ஒருத்தருக்கு மாலை கொடுக்கணும்னு சொன்னியே அதுதானா என்று முத்து கேட்க ஆமாங்க என்று மீனா தலையை ஆட்டுகிறார். பிறகு மீனாவும் முத்துவும் உள்ளே இருந்து வெளியே வரும் நேரத்தில் அருண் சீதாவை அங்கிருக்கும் ஒரு ஆட்டோவில் அனுப்பி வைக்கிறார்.
அருண் செய்த செயல்
அருண் தன்னுடைய பைக்கை நோக்கி வரும்போது முத்து அருணை பார்க்கிறார். இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் இருவரும் பார்ப்பதை பார்த்து மீனா பதறிப் போய் இருக்கிறார். ஆனால் யாரும் மாட்டாமல் தப்பித்து விடுகிறார்கள். மறுபக்கத்தில் மீனா வீட்டில் சத்யா பாஸ் செய்ததற்காக தடபுடலாக முத்து எல்லோருக்கும் விருந்து வைக்கிறார். அப்போது மீனாவின் அம்மா இதெல்லாம் எதுக்கு என்று கேட்க லைஃப்ல ஒரு முறை தான், இதெல்லாம் அனுபவிக்கணும். மாமா இருந்திருந்தால் இப்போது சத்யா பாஸ் ஆனதுக்கு ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பாரு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
மன்னிப்பு கேட்ட மீனா
பிறகு சாப்பிட வந்தவர்கள் எல்லோரும் முத்து மாதிரி மாப்பிள்ளை கிடைச்சதுக்கு கொடுத்து வச்சிருக்கணும் என்று பாராட்டுகின்றனர். மீனா தன்னுடைய அப்பா படத்துக்கு முன்பு நாங்க தப்பு செஞ்சு இருந்தா மன்னிச்சு விடுங்கப்பா சீதாவுடைய வாழ்க்கை கெட்டுப் போயிடக் கூடாது என்று தான் நான் இப்படி செஞ்சேன் என்று சாமி கும்பிடுகிறார். அப்போது சாப்பிட வந்த ஒருவர் முத்துவிடம் நீ இந்த குடும்பத்துக்கு எல்லாம் நல்லது தான் பண்ணுற, ஆனால் சீதா விஷயத்தில் பிடிவாதம் காட்டுறீயே என்று முத்துவிடம் கேட்கிறார்.
முத்து எடுத்த முடிவு
அதற்கு முத்து அந்த அருண் அவ்வளவு நல்லவன் கிடையாது. நாம சாப்பாட்டுக்கே இவ்வளவு யோசிக்கிறோம் என்றால் வாழ்க்கைக்கு எவ்வளவு யோசிக்க வேண்டும் என்று பேசிக்கொண்டு இருக்கிறார். அப்போது சீதாவின் காதலுக்கு சம்மதம் தெரிவிக்க சொல்லி அந்த நபர் சொல்லிக் கொண்டிருக்கும் போது முத்து கோபமாகி சீதா நான் சொல்ற பையனை தான் கல்யாணம் பண்ணிப்பா என்று சீதாவை கூப்பிட்டு, உன் வாயாலயே மாமா சொல்ற பையனை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லு என்று முத்து சொல்ல சீதா அழுது கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications