சிறகடிக்க ஆசை: ரோகிணிக்கு வந்த சிக்கல்.. முத்துவை அவமானப்படுத்தும் விஜயா.. மீனா சொன்ன வார்த்தை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 பிப்ரவரி 28ஆம் தேதிக்கான எபிசோடில் விஜயா செய்த செயலால் முத்து கண்கலங்குகிறார். அதே நேரத்தில் மனோஜ்க்கு ஆக்சிடென்ட் ஆகிறது. அப்போது முத்துவுக்கு இன்னொரு பிரச்சனையும் வருகிறது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் கறிக்கடைக்காரர் ரோகிணியிடம் பேசிக் கொண்டு இருக்கும்போது அண்ணாமலையை கூட்டிக்கொண்டு முத்து ஷோரூம்க்கு வருகிறார். அப்போது கறிக்கடைக்காரர் ஹெல்மெட் போட்டுக்கொண்டு நடந்து போக முத்து அவரை கூப்பிட்டு அவருடைய போனை எடுத்துக் கொடுக்கிறார். போனை வாங்கியவர் எதுவும் பேசாமல் அமைதியாக சென்றுவிட ஒரு தேங்க்ஸ் கூட சொல்ல மாட்டேங்குறாரு என்று முத்து புலம்பிக் கொண்டிருக்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

ரோகிணி ஜஸ்ட் மிஸ்

அடுத்ததாக ரோகிணி அண்ணாமலையிடம் என்ன அங்கிள் இந்த பக்கம் என்று கேட்க, அப்பா எப்ப வேணாலும் வருவார் அவர் தானே இந்த கடைக்கு ஓனர் என்றும் முத்து சொன்னதும் ரோகிணி கோபப்படுகிறார். பிறகு அண்ணாமலை என் பிரண்டு பொண்ணுக்கு கல்யாணத்துக்கு ஏதாவது பொருள் வாங்கணும்னு தோணுச்சு. பையனோட தாய்மாமாவே எல்லா பொருளும் வாங்கறேன்னு சொல்லிட்டாராம்.

அண்ணாமலை விளக்கம்

இருந்தாலும் நம்ம ஏதாவது சின்ன பொருள் வாங்கி கொடுக்கலாம்னு கடைக்கு வந்தோம் என்று சொல்ல, இதை நீங்க வீட்டிலேயே சொல்லி இருந்தா நான் டீடைல் சொல்லியிருப்பேன் என்று ரோகிணி சொல்கிறார். அதற்கு வேண்டாமா நேரில் பார்த்தால் தான் நல்லா இருக்கும் என்று அண்ணாமலை கடையில் சுற்றி பார்க்கிறேன் என முத்துவை அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்.

மனோஜை ஏமாற்றிய கதிர்

அடுத்ததாக மனோஜ் ஃபோன் பேசிக் கொண்டே வெளியே வந்து கொண்டு இருக்கும்போது அவரிடம் வீடு விற்கிறேன் என்று ஏமாற்றிய கதிரை பார்க்கிறார். கதிர் பின்னாடியே மனோஜ் ஓடி போகிறார். அங்கு எதிரே வந்தவர்கள் மீதெல்லாம் மோதிக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் போது கடைசியில் ஒரு வண்டியில் இடித்து கீழே விழுந்து விடுகிறார்.

Siragadikka aasai serial vijay tv

விஜயா செய்த செயல்

மறுபக்கத்தில் விஜயா வீட்டில் கால் தடுக்கி கீழே விழுந்து மனோஜ் என்று கத்திக் கொண்டிருக்கிறார். அப்போதும் முத்து விஜயாவை தூக்க போக விஜயா முத்துவை தொட மறுக்கிறார். பிறகு மீனா வந்ததும் மீனாவையும் தொட விருப்பம் இல்லாமல் அப்படியே உட்கார்ந்து இருக்கிறார். அந்த நேரத்தில் ரவி வந்து விஜயாவை தூக்கி சேரில் உட்கார வைத்து காலை பிடித்து விடுகிறார்.

பாசம் காட்டும் ரவி

ரவியிடம் மட்டும் நன்றாக பேசிக் கொண்டிருக்கிறார். இதனால் முத்துவும் மீனாவும் கிச்சனுக்கு சென்று வருத்தப்படுகிறார்கள். நாய் கூட தன்னுடைய பிள்ளைகளை சமமாக பார்க்கும் ஆனா எங்க அம்மாவுக்கு நான் பிடிக்காத பையனா போயிட்டேன் என்று பீல் பண்ணி பேசுகிறார். அந்த நேரத்தில் விஜயாவுக்கு ரோகிணி போன் செய்கிறார். போனை விஜயா அட்டென்ட் செய்ததும் ரோகிணி அழுது கொண்டிருக்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

கதறி அழுத ரோகிணி

விஜயா என்ன ஆச்சு என்று பதறி கேட்கிறார். அப்போது மனோஜிக்கு ஆக்சிடென்ட் ஆச்சு ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணி இருக்காங்க என்று சொன்னதும் விஜயா அழுது கொண்டு இருக்கிறார். ரவி போனை வாங்கி விசாரித்து பிறகு ஹாஸ்பிடலுக்கு எல்லோரும் போகிறார்கள். அங்கு மனோஜ்க்கு கண்ணில் பெரிய கட்டு போட்டு இருக்கிறது.

Siragadikka aasai serial vijay tv

மனோஜ்க்கு ஆபரேஷன்

இதனால் ரோகிணி பதறிப் போய் எதற்கு இவ்வளவு பெரிய கட்டு போட்டு இருக்கீங்க என்று கேட்க அவரோட கண்ணாடி உடைந்து கண்ணு உள்ளே குத்திருக்கு என்று சொன்னதும் அப்போ கண் பார்வை இருக்குமா என்று ரோகிணி கேட்க, அது அவருக்கு கான்ஷியஸ் வந்த பிறகுதான் சொல்ல முடியும் என்று சொல்கிறார்கள். பிறகு குடும்பத்தினர் எல்லோரும் வருகிறார்கள். அனைவரும் மனோஜை பார்த்து கண்கலங்க மனோஜை வார்டுக்கு கூட்டிக்கொண்டு போகிறார்கள்.

Siragadikka aasai serial vijay tv

குடும்பத்தினர் ஆறுதல்

முத்து அண்ணாமலைக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார். ரவி விஜயாவுக்கு ஆறுதல் சொல்கிறார். அதுபோல மீனாவும் ஸ்ருதியும் ரோகிணிக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அடுத்ததாக முத்து மீனா தனியாக உட்கார்ந்து இருக்கும் போது மனோஜ் கீழே தள்ளிவிட்டு போனவர்கள் எல்லோரும் கையில் கட்டு போட்டு கொண்டு வந்து நிற்கிறார்கள். அவர்கள் முத்துவிடம் உங்க அண்ணனுக்கு இப்போ எப்படி இருக்கு என்று கேட்க, அவன் இன்னும் மயக்க நிலையில் தான் இருக்கிறான். உங்களுக்கெல்லாம் என்ன ஆச்சு என்று முத்து விசாரிக்க மனோஜ் எல்லாரையும் கீழே தள்ளிவிட்டு ஓடிப்போன விஷயத்தை சொல்கிறார். இதனால் முத்துவும் மீனாவும் அதிர்ச்சியில் நிற்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+