சிறகடிக்க ஆசை: ரோகிணி மீது மனோஜுக்கு வந்த சந்தேகம்! விஜயா கண்டுபிடித்த உண்மை.. பார்வதி வீட்டில் பஞ்சாயத்து
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஜனவரி 28ஆம் தேதிக்கான எபிசோடில் ரோகிணிக்கு பேய் பிடித்திருக்கிறது என்று மனோஜ் சந்தேகப்படுகிறார். அதனால் பார்வதி வீட்டில் வைத்து ரோகிணிக்கு பேய் ஓட்ட போகிறார்கள்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ரோகிணியை மீனா பேய் ரூபத்தில் அடிப்பது போல கனவு கண்டதால் ரோகிணி என்னை விட்டுவிடு என்று பேய் பிடித்தது போல ஆடுகிறார். இதனால் பயத்தில் நெருங்கிய மனோஜ் விஜயாவுக்கு போன் போட்டு ரூமுக்கு வர சொல்கிறார்.

ரோகிணியை பார்த்ததும் விஜயாவும் பயந்து போய் என்னடா என்ன ஆச்சு என்று கேட்க, அம்மா எனக்கு ரொம்ப பயமா இருக்கு என்று மனோஜ் சொல்கிறார். உடனே ரோகிணி பக்கத்தில் சென்று விஜயா ரோகிணி என்று உலுக்க ரோகிணி நிதானமாகிறார். பிறகு கெட்ட கனவு ஆண்டி என்று சொல்ல கனவுக்கா இப்படி பயப்படுற? இரு நான் போய் விபூதி எடுத்துட்டு வரேன் என்று விஜயா பூஜை ரூமுக்கு போக, மனோஜ் வெளியில் ஓடிவந்து ரோகிணிக்கு பேய் புடிச்சிருக்குன்னு எனக்கு பயமா இருக்குமா என்று சொல்கிறார்.
அதற்கு அதெல்லாம் ஒன்னும் இருக்காது அவ தான் கனவு கண்டேன்னு சொல்றாளே என்று விஜயா சொல்ல அதற்கு மனோஜ் அவங்க அப்பா இறந்ததிலிருந்து தான் இவ இப்படி பண்ணிக்கிட்டு இருக்கா. ஒரு வேளை அவங்க அப்பாவோட ஆவி புடிச்சிருக்குமான்னு எனக்கு பயமா இருக்கு என்று சொல்ல, சரி நான் பார்வதி கிட்ட இது பற்றி விசாரிக்கிறேன் நீ போய் படு இந்த விபுதியை வச்சிக்க என்று சொல்கிறார்.

அதற்கு மனோஜ் நீ என் கூட வந்து படுமா என்று சொல்கிறார். அதற்கு விஜயா மனோஜை திட்டி அனுப்புகிறார். மறுபக்கத்தில் ரூமில் தனியாக இருக்கும் ரோகிணி இந்த மீனா வேற என் கனவில் அடிக்கடி வந்து மிரட்டிக்கொண்டு இருக்கா என்று யோசித்து கொண்டு இருக்கிறார். அப்போது மனோஜ் விபூதியை வச்சி விட்டு கீழே படுக்கப் போகிறார்.
சிறகடிக்க ஆசை: ரோகிணி பற்றி மொத்த உண்மையையும் உளறிய வித்யா! முத்துக்கு கிடைத்த அதிர்ச்சி! செம சம்பவம்
அதற்கு ரோகிணி எனக்கு கனவு தான் வந்தது. நான் இப்போ நல்லா ஆகிட்டேன். நீ வந்து மேல படு என்று கூப்பிடுகிறார். அதற்கு மனோஜ் சரிவரேன் என்று பெட் மேல் விபுதியை தூவி விட்டு பயந்து கொண்டே படுக்கிறார். அடுத்ததாக ஸ்ருதியிடம் ரவி வேலைக்கு போகலையா? என்று கேட்க, போகணும் என்று சொல்கிறார்.

நம்ம யோகா கிளாஸ்க்கு போகலாமா என்று ரவி கேட்க, ஏன் போகணும்? எதுக்கு போகணும்? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்க ஒரு கட்டத்தில் ரவியை பார்த்து பயந்து ஓடிப் போகிறார். அப்போது அங்கு வந்த மீனா என்ன ஆச்சு ஸ்ருதி ரவி இப்படி ஓடுறாரு என்று கேட்க, சும்மாதான் நான் வேணும்னு தான் இப்படி பண்ணினேன். எப்பவும் ஒரே மாதிரி இருந்தா போர் அடிக்கும் நீங்களும் இதை ட்ரை பண்ணி பாருங்க என்று சொல்ல மீனா யோசிக்கிறார்.
அந்த நேரத்தில் முத்து கிச்சனுக்கு வந்து டீ கேட்கிறார் அதற்கு பால் இல்லை என்று மீனா சொல்ல, அப்போ பிளாக் டீ போடு என்று சொல்ல, அதற்கு சர்க்கரை இல்லை என்று ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டே இருக்க கடைசியில் கடுப்பான முத்து எனக்கு எதுவும் வேண்டாம் என்று வெளியே கிளம்பி போகிறார்.
உடனே ஓடி வந்த மீனா நான் சும்மா ஜாலிக்கு தான் இப்படி பண்ணினேன். இதற்கு ஐடியா ஸ்ருதி தான் கொடுத்தாங்க. எப்பவும் ஒரே மாதிரியா இருந்தா நல்லா இருக்காதுன்னு சொன்னாங்க அதான் ட்ரை பண்ணி பார்த்தேன் என்று சொல்ல, முத்து இதுவும் நல்லாதான் இருக்கு ஆனா கண்டிப்பா ஒரு நாள் நான் உன்கிட்ட இதை ட்ரை பண்ணுவேன் என்று சொல்லுகிறார்.

மறுபக்கத்தில் மனோஜ், ரோகிணி, விஜயா மூன்று பேரும் பார்வதி வீட்டிற்கு வருகின்றனர். அங்கு ரோகிணிக்கு பேய் ஓட்டுவதற்காக பார்வதி ஏற்கனவே ஏற்பாடு செய்து வைத்திருக்கின்றார். அப்போது அங்கு ஒரு சாமியார் வருகிறார். சாமியாரை பார்த்ததும் மனோஜ், விஜயா, ரோகிணி அதிர்ச்சி ஆகின்றனர். பிறகு சாமியார் வீட்டிற்குள் வருகிறார். அவருக்கு சாமி அருள் வந்தது போல ஆட அதை பார்த்து எல்லோரும் பயத்தில் இருக்கிறார்கள். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம் எப்போது ரிலீஸ்? ஜெயிப்பாரா இந்த ஜூனியர்? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications