சிறகடிக்க ஆசை: ரோகிணி பற்றி மொத்த உண்மையையும் உளறிய வித்யா! முத்துக்கு கிடைத்த அதிர்ச்சி! செம சம்பவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜனவரி 27ஆம் தேதி முதல் பிப்ரவரி இரண்டாம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் முத்துவின் செல்போனை திருடியது ரோகிணியின் ஃப்ரெண்ட் வித்யா என்று முத்து கண்டுபிடித்து விடுகிறார்.
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி தன்னுடைய வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்வதற்காக பல தில்லாலங்கடி வேலை செய்து வருகிறார். ஆனால் அதில் எல்லாம் மாட்டாமல் ஒவ்வொரு இடத்திலும் தப்பித்துக்கொண்டே இருக்கிறார்? இதனால் ரசிகர்கள் ரோகிணி எப்போது மாட்டுவார் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இந்த சீரியலுக்கான ப்ரோமோ யூடியூப்பில் வெளியானதும் கூட அதிகமான ரசிகர்கள் ரோகிணி எப்போது மாட்டுவார் என்று தான் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால் இந்த சீரியலில் ஹீரோவாக இருக்கும் முத்துவுக்கும் அவருடைய மனைவிக்கும் தான் பிரச்சனை மேல் பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. ரோகிணி இப்போது மாட்டுவார், அப்போது மாட்டுவார் என்று எதிர்பார்த்து இருக்கும் நேரத்தில் அவர் அதிலிருந்து தப்பித்துக் கொண்டே இருக்கிறார்.
இந்த நிலையில் இந்த சீரியலுக்கு அதிகமான நெகட்டிவ் கமெண்டுகள் வந்து கொண்டிருந்ததை தொடர்ந்து இப்போது ரோகிணி பற்றிய ஒவ்வொரு ரகசியமும் வீட்டிற்கு தெரிய தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே முத்துவிற்கும் மீனாவிற்கும் ரோகிணி மீது பெரிய சந்தேகம் வந்திருக்கிறது.
இதனால் மலேசியாவிற்கே சென்று விசாரிக்கலாம் என்று முத்து பிளான் போட்டார். ஆனால் அதை தடுக்கும் வகையில் தன்னுடைய அப்பா இறந்து போய்விட்டார் என்று பிரவுன் மணியை வைத்து ரோகிணி நாடகம் போட்டு விட்டார்.
இத்தோடு முத்துவிடுவார் என்று ரோகிணி எதிர்பார்த்திருக்கும் நிலையில் இன்னொரு விஷயமும் முத்துவிற்கு கிடைத்திருக்கிறது. அதாவது முத்து மற்றும் மீனா ஒரு தாத்தா பாட்டிக்கு உதவி செய்து கொண்டு இருக்கிறார்கள். அந்த தாத்தா பாட்டி செருப்பு தைக்கிறார்கள். அவர்களிடம் வித்யா ஒருமுறை செருப்பு தைக்க போய் இருந்தார்.
அப்போதுதான் முத்துவின் செல்போனை ரோகிணி எடுத்து அதில் இருக்கும் வீடியோவை சிட்டி மூலமாக லீக் செய்து விட்டு அந்த செல்போனை வித்யாவிடம் கொடுத்து கடலில் போட சொல்லி இருந்தார். ஆனால் அந்த செல்போன் தாத்தா பாட்டி இடம் செருப்பு தைத்து விட்டு போகும்போது கீழே விழுந்துவிட்டது.

அதை வித்யா கவனிக்காமல் சென்று விட்ட பிறகு செல்போன் தொலைந்து போய்விட்டது என்று தெரிந்தால் ரோகிணி சண்டை போடுவார் என்று நினைத்து நான் அந்த போனை கடலில் போட்டு விட்டேன் என்று ஏமாற்றி விடுகிறார். இந்த நிலையில் அந்த செல்போன் இப்போது தாத்தா மூலமாக மீண்டும் முத்து கைக்கு வந்து இருக்கிறது.
அதோடு அந்த செல்போனை தவறவிட்டது ஒரு பொண்ணு தான் என்று அந்த தாத்தா சொல்ல அது யார் என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று ரோகிணி மற்றும் வித்யா போட்டோவை அனுப்பி வைக்க அதை பார்த்ததும் தாத்தா வித்யா தான் என்று அடையாளம் காட்டுகிறார். இதனால் முத்து கோபமாக வித்யா வீட்டிற்கு போகிறார்.
செல்போனை எதுக்காக என்கிட்ட இருந்து திருடுன என்று கேட்க வித்யா திருதிருவென முழித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே ரோகிணியிடம் வித்யா சண்டை போட்டு பிரிந்திருக்கிறார். இதனால் ரோகிணியை வித்யா மாட்டி கொடுக்கப் போகிறாரா? என்ற கேள்விகள் வருகிறது.
இதுவரைக்கும் சப்போர்ட்டாக இருந்த வித்யா இப்போது அப்ரூவராக மாறி முத்துவிடம் மொத்த உண்மைகளை சொல்லும்போது ரோகிணி இதிலிருந்து எப்படி தப்பிப்பார்? என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது. அதே நேரத்தில் என்னிடம் பணம் வாங்கினால் அதை திருப்பி தராததால் நான் அவளிடம் சண்டை போட்டேன் அதனால் என்னை மாட்ட வைப்பதற்காக இப்படி நாடகம் போடுகிறா என்று ரோகினி சொல்லவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் இனி என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications