சிறகடிக்க ஆசை: மனம் மாறும் முத்துவுக்கு அதிர்ச்சி கொடுத்த அருண் அம்மா.. மீண்டும் சொதப்பல் முடிவு எடுத்த மீனா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஜூன் 30-ம் தேதிக்கான எபிசோடில் சீதா, அருண் கல்யாணத்தில் மறுப்பு தெரிவித்து வந்த முத்துவிற்கு மனம் மாறுகிறது. அதே நேரத்தில் கோவிலில் சீதாவிடம் மீனா முக்கிய விஷயத்தை சொல்லி இருக்கிறார். இனி என்ன நடக்கப்போகிறது என்று விரிவாக பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் இரண்டு வாரங்களுக்கு மேலாக நடந்த சீதா மற்றும் அருண் கல்யாண கதை தான் இழுவையோ இழுவையாக இழுத்துக் கொண்டு இருக்கிறது. ஆனால் ஒரு வழியாக இன்றைய எபிசோடில் முத்துவின் மனது மாறும் வகையில் சில சம்பவங்கள் நடந்து இருக்கிறது. ஆரம்பத்தில் செல்வமும் முத்துவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது மீனா எனக்கு போன் பண்ணாங்க நீ ரொம்ப கோவமா இருக்கேன்னு சொன்னாங்க. இப்ப எப்படி இருக்க? என்று விசாரித்தார்கள் என்று சொல்ல, முத்து கோபத்தில் பேசிக் கொண்டிருக்கிறார்.

அப்போது அருணுடைய அம்மா முத்துவை பார்க்க வருகிறார். அவரைப் பார்த்து முதலில் பேச மறுக்கும் முத்து பிறகு என்னவென்று கேட்கிறார். அப்போது தன்னுடைய அம்மா முத்துவிடம் என்னுடைய பையன் ரொம்ப நல்லவன் தான், சீதாவை நல்லபடியா பாத்துக்குவான். ஒரு வேளை சீதாவின் அப்பா இருந்தா கண்டிப்பா என் பையனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருப்பாரு. உங்க ரெண்டு பேருக்கும் என்ன பிரச்சனைன்னு எனக்கு தெரியல, அதனாலதான் நீங்க ரெண்டு பேரும் அடிக்கடி முட்டிக்கிட்டீங்க.
சீதா என் வீட்டுக்கு மருமகளா வந்தா நான் அவளை நல்லபடியா பார்த்துக்குவேன் என்று சொல்ல, அதற்கு முத்து இந்த கல்யாணம் நடக்காது என்று சொல்லி அருணுடைய அம்மாவை அனுப்புகிறார். அடுத்த கட்டத்தில் முத்துவை காப்பாற்றிய பெண் வீட்டிற்கு முத்து வருகிறார். அங்கு மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த பெண்ணிற்கு அவர் காதலித்த காதலனையே அவருடைய குடும்பத்தினர் கல்யாணம் செய்து வைத்திருக்கிறார்கள்.
அப்போது அந்த பெண்ணின் அப்பா முதலில் நாங்க இருந்த மாப்பிள்ளை பற்றி தெரியாமல் கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டோம். அப்புறம் அவரு கிட்ட பேசுன பிறகு தான் அவருடைய நல்ல குணங்களுக்கு புரிஞ்சது என்று சொல்லி, நீங்க ஒரு சகோதரனா இவங்களை வாழ்த்தி வழி அனுப்பி வச்சிடுங்க என்று அனுப்பி வைக்கின்றனர். பிறகு தம்பதிகள் இருவரும் முத்துவின் காரில் சந்தோஷமாக பேசிக்கொண்டு வருகிறார்கள். இதை பார்த்ததும் முத்துவின் மனதில் சின்னதாக மாற்றம் வருகிறது.
அடுத்த கட்டத்தில் ரோகிணி பணத்தைக் கொண்டு வந்து விஜயாவிடம் கொடுக்க இது கள்ளப் பணமா? அல்லது யார்கிட்டேயும் இருந்து திருடிட்டு வந்தியா? என்று விஜயா கேட்க ரோகிணி கோபப்பட்டு ரூமிற்கு வந்து அழுது கொண்டிருக்கிறார். அப்போது மனோஜ் உனக்கு பணம் எப்படி கிடைத்தது? என்று கேட்க, வித்யா கொடுத்தா என்று மீண்டும் பொய் சொல்கிறார். வித்யாவிடம் நீ சண்டை என்று சொன்னியே என்று கேட்க நாங்கள் சமாதானம் ஆகிட்டோம். என்று சொன்னதும் இதை என்னால நம்ப முடியவில்லை என்று மனோஜ் சொல்கிறார். அதற்கு ரோகிணி கோபப்பட்டு அழுது கொண்டிருக்கிறார்.
மறுபக்கத்தில் சீதாவும் மீனாவும் கோவிலில் இருக்கின்றனர் அப்போது நீ அருணை நெனச்சி தான் மாப்பிள்ளை பார்க்க சொன்னாங்கிறதை கூட உங்க மாமாவால ஏத்துக்க முடியல. ஆனா நாம கல்யாணம் பண்ணுன விஷயத்தையே மறைத்து வைத்திருக்கிறோம். உன் மேல அவருக்கு ரொம்ப நம்பிக்கை இருக்கு எப்படியாவது அவரிடம் உண்மையை சொல்லிடலாம்னு இருக்கேன் என்று மீனா சொல்கிறார். பிறகு சிறிது யோசித்து நான் உனக்கு கல்யாணம் நடக்கணுமா? வேண்டாமான்னு? கோவிலில் சீட்டு எழுதி போட்ட மாதிரி இப்போ அவரிடம் உண்மையை சொல்லவா வேண்டான்னு சீட்டு எழுதி போடுறன் என்று கோவிலில் சீட்டு எழுதி போடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications