சிறகடிக்க ஆசை: பிஏவால் குடும்பத்தினரிடம் சிக்கிய ரோகிணி.. அதிர்ச்சி கொடுத்த விஜயா! ஸ்ருதி பிடித்த பாயிண்ட்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஜூலை மூன்றாம் தேதிக்கான எபிசோடிலா சீதாவின் கல்யாணத்தை நடத்துவதற்காக அண்ணாமலை குடும்பத்தினர் எல்லோரும் உதவி செய்வதாக கூறுகின்றனர். அதே நேரத்தில் ரோகினியின் பழைய பிஏ போன் போட்டு மிரட்ட அதனால் ரோகிணி குடும்பத்தினரிடம் சிக்கி இருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ஸ்ருதி யோசித்துக் கொண்டிருக்கிறார். ரவி வந்ததும் பிசினஸ் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். பிறகு சீதா கல்யாணத்திற்கு என்ன பண்ண போற என்று கேட்க, ரவி நான் கல்யாணத்திற்காக சாப்பாடு பார்த்து கொள்கிறேன் இதை சொன்னால் முத்து சந்தோஷப்படுவான் ஆனா நான் சொல்றதுக்கு முன்னாடி அவன் வேற எதுவும் பிளான் பண்ணிட கூடாது என்று சொல்லிவிட்டு வேகமாக வெளியே வருகிறார். அதற்கு நான் ஒத்துக்க மாட்டேன் என்று ஸ்ருதி சொல்ல, நீ ஒத்துக்கலனாலும் நான் சொல்ல தான் போறேன்னு ரவி வெளியே வருகிறார்.

அப்போது அண்ணாமலை முத்து மீனாவை கூப்பிட வீட்டில் இருக்கும் எல்லோரும் வருகின்றனர். அப்போது அண்ணாமலை மீனா கையில் பணத்தை கொடுத்து இதில் 51,000 இருக்கிறது என்னால் முடிந்ததை கல்யாணத்துக்கு கொடுக்கிறேன் என்று சொல்ல, விஜயா எதுக்கு இவ்வளவு கொடுக்குறீங்க என்று கேட்கிறார். மீனா குடும்பமும் நம்ம குடும்பம் மாதிரி தான் என்று சொல்ல, விஜயா அதற்கு திமிராக பேசிக் கொண்டிருக்கிறார்.
உடனே ரவி முத்துவிடம் சமையல் வேலையை நான் பார்த்துக்கிறேன். என்னோட ஆளுங்களோடு வந்து சமைக்கிறேன் என்று சொன்னதும் விஜயா இன்னும் அதிர்ச்சியாகி, இந்த கல்யாணத்தோட மொத்த செலவையும் நம்ம குடும்பமே ஏத்துக்கிடுவீங்க போல என்று கத்தி கொண்டு இருக்கிறார். அதற்கு அண்ணாமலை ரவி என்னுடைய பையன் அவன் அப்படித்தான் கரெக்டா யோசிப்பான் என்று பாராட்டிக் கொண்டு ஸ்ருதியிடம் இது உனக்கு சம்மதமா என்று கேட்க ஸ்ருதி எனக்கு இதற்கு சம்மதம் இல்லை என்று சொல்கிறார்.
முத்துவும் மீனாவும் ஸ்ருதிக்கு விருப்பம் இல்லனா விடு ரவி, நாங்க பார்த்துக்கிறோம் என்று சொல்கிறார். உடனே ஸ்ருதி இவ்வளவு கம்மியா செய்ய நான் ஒத்துக்க மாட்டேன், நான் மூணு சவரன் செயின் போட போறேன் என்று சொன்னதும் விஜயா கடுப்பாகிறார். உடனே மீனாவின் குடும்பத்தை பற்றி குறைவாக பேசிக் கொண்டிருக்க அண்ணாமலை வழக்கம் போல கண்டித்துக் கொண்டிருக்கிறார். அதற்கு முத்து மீனா வேண்டாம் என்று சொல்லியும் அண்ணாமலை எதுவும் பேச வேண்டாம் என்று சொல்கிறார்.
பிறகு மனோஜ் ரோகிணி கிட்ட நீங்க என்ன பண்ண போறீங்க என்று அண்ணாமலை கேட்க, நாங்க எதுக்கு பண்ணனும் என்று மனோஜ் சொல்கிறார். ரோகிணி பொண்ணுக்கு நான் பிரைடல் மேக்கப் போடுறேன் என்று சொன்னதும் மனோஜ் அமைதியாக இருக்கிறார். உடனே அண்ணாமலை நீ மிக்ஸி, கிரைண்டர் கொடுத்துடு இங்கு சொன்னதும் அதற்கு 10 ஆயிரம் ஆகும் என்று மனோஜ் சொல்ல பரவாயில்ல கொடு நான் கணக்கு எழுதுகிறேன் என்று சொல்கிறார்.
அதற்கு விஜயா நல்ல வேலை இவளோட அப்பா ரெண்டு பொண்ணோட நிறுத்திட்டாங்க இல்லன்னா மாமனார் வீட்டிலேயே எல்லாத்தையும் புடுங்கி கல்யாணம் பண்ணி இருப்பாங்க என்று சொல்லிவிட்டு எழுந்து போகிறார். பிறகு ஸ்ருதி கிச்சனுக்கு வர அங்கு வந்த ரோகினி ஸ்ருதியிடம் அன்னைக்கு நாம் பணம் கேட்கும் போது பணத்தை கொடுக்கல ஆனால் இப்போ மீனா தங்கச்சிக்கு 3 பவுண் செய்கிறேன் என்று சொல்லி இருக்கீங்க? அப்ப எனக்கு உதவி செய்ய மாட்டீங்க, நீங்க மீனாக்கு மட்டும்தான் உதவி செய்வீங்களா? என்று கேட்கிறார்.
அதற்கு ஸ்ருதி நீங்க அவசரத்துக்காக கேட்கல பொய்யா பயந்துட்டு ஆன்ட்டியை சமாளிக்கறதுக்காக கேட்டீங்க. அதுக்காக நான் எப்படி உதவ முடியும்? அது நியாயமே இல்லையே? இப்போ மீனாவோட தங்கச்சிக்கு மீனா கொடுத்தாலும் மீனா வேணான்னு தான் சொல்லுவாங்க இது நாங்களா விருப்பப்பட்டு தான் செய்கிறோம் என்று ஸ்ருதி பதிலடி கொடுக்கிறார். பிறகு மீனா வந்து ஸ்ருதி நாங்க பார்த்துக்கிறோம் மூணு சவரன் ரொம்ப அதிகமா இருக்கு என்று சொல்ல அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல நான் ஒரு வாட்டி முடிவு எடுத்துட்டா கண்டிப்பா செஞ்சே தீருவேன் என்று சொல்லி சொல்கிறார்.
பிறகு நகை எடுக்க போக முடிவெடுக்கின்றனர். அந்த நேரத்தில் பிஏ போன் போட்டு ரோகிணி இடம் மிரட்டுகிறார். உன்னுடைய கொழுந்தன் முத்துவிடம் நான் சொல்லப்போகிறேன் என்று மிரட்டி விட்டு போனை வைக்கிறார். இதனால் நைட் ரோகிணிக்கு தூக்கம் வராமல் பிஏ மிரட்டியதை நினைத்து கொண்டு இருக்க, தூக்கத்தில் வாய் தவறி முத்து கிட்ட சொல்லிடாத உண்ணை கொன்னுடுவேன் என்று கத்துகிறார். இதை கேட்டு மனோஜ் பயந்து விடுகிறார்.
அதே போல ரோகிணி சத்தத்தை கேட்டு விஜயா, அண்ணாமலை, முத்து, மீனா, ஸ்ருதி என மொத்த குடும்பமும் வாசலில் வந்து நிற்கின்றனர். அப்போது விஜயா ரோகிணியை திட்டிக் கொண்டிருக்கிறார். மனோஜ் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications