சிறகடிக்க ஆசை: முத்துவை எதிர்க்கும் மீனா.. பல நாள் இழுவைக்கு முற்றுப்புள்ளி.. பார்வதியால் சிக்கும் விஜயா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஜூன் மூன்றாம் தேதிக்கான எபிசோடில் சீதா கல்யாணத்தில் முத்துவுக்கு எதிராக மீனா முக்கிய முடிவு எடுத்திருக்கிறார். அதே நேரத்தில் விஜயா தன்னுடைய ரகசியங்களை பார்வதியிடம் சொல்லி சிக்குகிறார்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் சீதா வீட்டிற்கு வரும் அருணுடைய அம்மா இந்த கல்யாணத்திற்காக முத்துவிடம் பேச சொல்கிறார். சீதாவை என்னுடைய பையன் நல்லபடியா பார்த்துப்பான், எனக்கு உடம்பு சரியில்லாமல் போன பிறகு சீதா என்னை வந்து பார்த்துகிட்டா அப்பவே அவள்தான் எனக்கு மருமகளா வரணும் என்று நான் ஆசைப்படுகிறேன் என்று அவர் சொல்கிறார். அதற்கு மீனா அவரை சமாதானம் செய்து அனுப்பி வைக்கிறார்.

நண்பரின் அட்வைஸ்
மறுபக்கத்தில் மனோஜ் ஷோரூமில் கவலையாக உட்கார்ந்திருக்கும்போது அவருடைய பார்க் நண்பர் அங்கு வருகிறார். அவரிடம் ரோகிணி அடிக்கடி மகேஷ் என்பவரிடம் பேசிக் கொண்டிருப்பதாகவும், நீங்க சொன்ன கதை என்னுடைய வாழ்க்கையில் நடந்திடுமோன்னு பயமாயிருக்கு என்று மனோஜ் புலம்பி கொண்டிருக்கிறார். அதோடு ரோகிணியின் போனிலிருந்து ஆட்டைய போட்ட நம்பருக்கு கால் செய்ய எதிர்பக்கத்தில் ஒரு ஆண் குரல் கேட்கிறது.
குழப்பம்
அவரிடம் நீங்கள் யார் என்று மனோஜ் கேட்டதும் நான் மகேஷ் என்று அந்த நபர் சொல்கிறார். உடனே போனை கட் செய்யும் மனோஜ் இந்த நம்பருக்கு தான் ரோகிணி அடிக்கடி பேசுற என்று சொல்கிறார். அதற்கு பார்க் நண்பர் நீ இப்படி செஞ்சிட்டு இருந்தா உன் வாழ்க்கையில் தான் சிக்கல் வரும் என்று மனோஜ்க்கு இன்னும் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டு செல்கிறார். பிறகு ஒரு பெண் ரோகினிக்கு போன் செய்து சொன்ன மாதிரியே உன்னுடைய புருஷன் நம்பரில் இருந்து எனக்கு போன் வந்தது, நானும் என்னுடைய கணவரிடம் கொடுத்து மகேஷ் என்று சொல்ல சொன்னேன் உடனே கட் பண்ணிட்டாரு என்று சொன்னதும் இதுதான் எனக்கு வேணும் இன்னும் அவனுக்கு சந்தேகம் வரணும் என்று ரோகிணி சொல்லிக் கொண்டிருக்கிறார்.
கோபத்தில் மனோஜ்
அடுத்ததாக மனோஜ் வீட்டிற்கு வரும்போது ரோகிணி பழையபடி போனில் மகேஷ் என்று கொஞ்சி கொஞ்சி பேசிக் கொண்டிருக்கிறார். இதனால் மனோஜ் கோபமாகி யார் என்று கேட்க எனக்கு நெருக்கமானவர், சிலரை மாதிரி நான் பேசுவதை விரும்பாமல் இருக்க மாட்டாரு என்று சொன்னதும் மனோஜ் அதிர்ச்சியாகி நிற்கிறார். மறுபக்கத்தில் பார்வதி வீட்டிற்கு வந்த விஜயா நீத்துவை தன்னுடைய மகன் மனோஜ்க்கு இரண்டாவது கல்யாணம் பண்ணி வைப்பது பற்றி சொன்னதும் பார்வதி அதிர்ச்சியாகி உட்கார்ந்து இருக்கிறார்.

விஜயாவின் பிளான்
அதற்கு எதற்கு இப்படி வாயை பொளக்குற என்று விஜயா கேட்க, நீ சொல்ற கதையை கேட்டாலே எனக்கு அதிர்ச்சியா இருக்கு என்று பார்வதி சொன்னதும், நீத்து என் பையனுக்கு சரியான பொண்ணு. அழகா இருக்கா, படிச்சிருக்கா என்று விஜயா சொல்ல, அது பணக்கார பொண்ணுனு சொல்லு என்று பார்வதி விஜயாவிற்கு பதில் கொடுக்கிறார். அதோடு முதல் பொண்டாட்டி உயிரோடு இருக்கும்போது இன்னொரு கல்யாணம் செஞ்சா உன் மருமகள் உன்னை சும்மா இருக்க மாட்டா என்று சொன்னதும், அதை நான் பார்த்துக்கிறேன், அவளை முறைப்படி விவாகரத்து செய்து அனுப்பி விட்டு தான் நான் என்னுடைய மகன் மனோஜ்க்கு கல்யாணம் செய்வேன். அதுவரைக்கும் நீ இதை பற்றி யாரிடமும் சொல்லாதே என்று சொல்லிவிடுகிறார்.
அதிர்ச்சியில் முத்து
அடுத்ததாக முத்துவும் மீனாவும் சீதாவில் கல்யாணம் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது சீதா மாமாவுக்காக இந்த கல்யாணம் வேண்டாமே சொல்லிவிட்டாள் என்று மீனா சொல்ல, அதற்கு முத்து சந்தோஷப்படுகிறார். அதற்கு மீனா, நீங்க அவளுக்காக இந்த காதலுக்கு சம்மதம் சொல்ல மாட்டீங்களா என்று கேட்கிறார்கள். அதற்கு முத்து நீ சொல்றதுல நியாயம் இல்ல, தப்பா இருக்குற விஷயத்தை இந்த முத்து என்னைக்குமே செய்ய மாட்டான் என்று முத்து சொன்னதும் உங்க சம்மதம் இல்லாமல் இந்த கல்யாணம் நடந்தா... என்று மீனா கேட்டதும் முத்து அதிர்ச்சியாகி பார்க்கிறார்.

முத்துவின் முடிவு
எங்க அம்மாவை அருண் வீட்டில் சம்மதிக்க வச்சிட்டா என்ன பண்ணுவீங்க என்று கேட்டதும், என்னால் என்ன செய்ய முடியும்? அந்த குடும்பத்தோடு சேரகூடாது, நீயும் அந்த குடும்பத்தோடு சேரக்கூடாது என்று சொல்கிறார். இதனால் மீனா அதிர்ச்சியாக இருக்கிறார். அதற்கு தேவையில்லாமல் ஏன் பேசிட்டு சீதாவிற்க்கு நல்ல மாப்பிள்ளை நான் பார்க்கிறேன் என்று முத்து சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications