சிறகடிக்க ஆசை: முத்துவுக்கு தெரிய வந்த உண்மை, கதறி அழுத விஜயா.. மீனா காட்டிய அதிரடி, இது பலருக்கு பாடம்
சென்னை: விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 மே ஐந்தாம் தேதிக்கான எபிசோடில் விஜயா வந்த தாயத்தை அண்ணாமலை கட்டியிருப்பதை பார்த்து பதறிப்போன விஜயாவிற்கு கடைசியில் மனோஜ் அதிர்ச்சி கொடுக்கிறார். அதே நேரத்தில் முத்து மற்றும் மீனாவிற்கு பெரிய உண்மையும் தெரிய வந்திருக்கிறது.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மனோஜுக்கு வாங்கி வந்த தாயத்தை அண்ணாமலை கட்டி இருப்பதை பார்த்து பதறிப்போன விஜயா அதை கழட்ட சொல்லி பிரச்சனை செய்கிறார். இதனால் முத்து என்ன ஆச்சு எதுக்காக வாங்கிட்டு வந்தீங்க என்று கேட்க, மனோஜுக்கு குழந்தை பிறக்கனும்னு தான் வாங்கிட்டு வந்தேன் என்று சொன்னதும் அண்ணாமலை பதறிப்போய் கழட்டுகிறார். மீனா சிரித்துக்கொண்டிருக்க விஜயா கடுப்பாகி மீனாவை திட்டிக்கொண்டு கழட்டி அந்த நேரத்தில் வரும் மனோஜுக்கு கட்டி விடுகிறார்.

விஜயாவின் பிளான்
அதோடு இந்த தாயத்தை கழட்டக்கூடாது இது உன்னுடைய பிசினஸ்க்காக கட்டியது என்று சொன்னதும் மனோஜ் சரி என்று சொல்கிறார். அந்த நேரத்தில் வந்து ரோகிணி மற்றொரு கையில் அவர் வாங்கி வந்த தாயத்தை கட்டி விடுகிறார். மறுபக்கத்தில் முருகன் முத்துவை அழைத்துக் கொண்டு வீடு பார்க்க வந்த வீட்டை சுற்றி காட்டி கொண்டிருக்கிறார்.
மீனா முத்துவுக்கு தெரிந்த உண்மை
அந்த நேரத்தில் மீனாவும் வித்யாவுடன் அங்கு வருகிறார் பிறகு எல்லோரும் பார்த்துக் கொள்கிறார்கள். அப்போதுதான் வித்யா முருகன் காதலுக்கு உதவியது மீனா முத்து என்று தெரிகிறது. முத்து இந்த பொண்ணு வேண்டாம் இதோட பிரண்டு சரியான ஏமாத்துக்காரி இந்த பொண்ணு அதை எங்க கிட்ட சொல்லல அதனால இந்த பொண்ணும் ஏமாற்றுக்காரிதான்னு சொல்ல, அதற்கு மீனா உங்க பிரண்டு மட்டும் சரியா? அவர் என்னை ஃபாலோ பண்ணி எங்க வீட்டுக்கு வந்து பொண்ணு கேட்டு வந்தார்னு சொன்னதும் வித்யா அதிர்ச்சியாகிறார்.
திட்டிய மனோஜ்
பிறகு சரி இவர்களுக்குள் மனசு ஒத்துப் போச்சு அதனால் பழைய கதை எல்லாம் பேச வேண்டாம் என்று மீனா சொல்ல, முருகன் மற்றும் வித்யா இருவரும் நீங்கதான் எங்க கல்யாணத்தை முன் நின்று நடத்தணும் என்று முத்துவிடம் சொல்கிறார்கள். மறுபக்கத்தில் ரோகிணி அயன் பண்ண போகிறார். அப்போது டிரஸ் எடுப்பதற்காக உள்ளே போன நேரத்தில் மனோஜ் வந்து அதில் கை வைத்து விட, அதனால் சூடில் மனோஜ் கத்திக் கொண்டிருக்கிறார்.
கதறி அழுத விஜயா
அந்த நேரத்தில் இதை எல்லாம் வெளியே நின்று கேட்டுக் கொண்டிருந்த விஜயா சந்தோஷப்படுகிறார். பிறகு ரூமுக்குள் வந்து ரோகிணியை திட்டிக் கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் கோபமான மனோஜ் நீங்க எதுக்கு இந்த வந்தீங்க அதான் நான் பேசிட்டு இருக்கேனே நீங்க வெளியே போங்க என்று சொல்ல, இதனால் விஜயா கண்கலங்கி அழுது கொண்டு வெளியே வர ரோகிணி பார்த்து சந்தோஷப்படுகிறார்.
குடும்பத்தினர் சமாதானம்
விஜயா வெளியே உட்கார்ந்து அழுது கொண்டிருப்பதை பார்த்து மீனா முத்துவிடம் உங்க அத்தை அழுதுட்டு இருக்காங்கன்னு சொல்ல, அவங்க அழ மாட்டாங்க அவங்க அடுத்தவங்களை தான் அழ வைப்பாங்கன்னு வந்து பார்க்கும்போது அழுது கொண்டிருக்கிறார். அப்போது அவரிடம் குடும்பத்தினர் எல்லோரும் என்ன ஆச்சு என்று விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications