சிறகடிக்க ஆசை: க்ரிஷை வைத்து ரோகிணியை மிரட்டும் அம்மா.. சாமியார் சொன்ன விஷயம், விஜயாவை அடித்த மீனா
சென்னை: விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025ல் மே ஏழாம் தேதிக்கான எபிசோடில் மீனா விஜயாவை அடித்திருக்கிறார். அதே நேரத்தில் கிறிஸ் பற்றிய உண்மைகளை சொல்ல சொல்லி ரோகிணியை அவருடைய அம்மா மிரட்டுகிறார் என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் சீதா மீனாவிடம் பேசிவிட்டு வேலைக்கு கிளம்ப அப்போது மீனாவின் அம்மா வருகிறார். அவரும் மீனாவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். சீதாவிற்கு முத்து போல நல்ல மாப்பிள்ளை கிடைக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பிறகு மீனா அங்கிருந்து போகும்போது கால் தடுக்குகிறது. அப்போது அங்கு இருக்கும் ஒரு பெண் சாமியார் கவனிக்கிறார்.

கோவிலில் நடந்த சம்பவம்
பிறகு மீனா பூசாரியிடம் கொடுத்துவிட்டு திரும்பி வரும்போது அங்கிருந்த பெண் சாமியார் மீனாவை கூப்பிடுகிறார். அவரிடம் என்னம்மா ஏதாவது சாப்பிட்டீங்களா என்று கேட்டதும், அந்த பெண் சாமியார் நான் யாருன்னே தெரியாது ஆனால் சாப்பிடீங்களா என்று அக்கறையா கேட்கிற இந்த நல்ல மனசுக்கு எல்லாம் நல்லாதா தான் நடக்கும். நான் இதற்கு முன்பு அருள்வாக்கு சொல்லிக்கிட்டு இருந்தேன் இப்போ உன்னை பார்த்ததும் அந்த அம்மா ஒரு விஷயத்தை சொல்ல சொல்லுறா என்று சொல்ல, மீனா என்னவென்று கேட்கிறார்.
கிண்டல் செய்த முத்து
உன்னுடைய புருஷனுக்கு ஒரு பிரச்சனை வரப்போகிறது. ஒரு பிரச்சனை உன் புருஷன் காலை சுற்றிக்கொண்டு இருக்கிறது. நீ எப்போதும் போல எல்லோருக்கும் நல்ல விஷயங்கள் பண்ணனும் அப்போது ஒருத்தர் வந்து நீ நல்லா இருப்பமான்னு சொன்னா உன் புருஷனுக்கு மலை போல வர பிரச்சனை பனி போல விலகிடும் என்று சொன்னதும் மீனா குழப்பத்தில் வீட்டிற்கு வருகிறார். பிறகு வீட்டிற்கு வந்து முத்துவிடம் கோவிலில் நடந்த விஷயத்தை சொன்னதும் அவர் கிண்டல் பண்ணுகிறார்.
முத்து- மீனா வாக்குவாதம்
அதற்கு மீனா கோபப்பட, எனக்கு எப்போதான் பிரச்சனை இல்லாம இருந்திருக்கு? ஒரு வேலை பண்ணலாம் எனக்கு பிரச்சனை வரக்கூடாது என்றால் நான் சரக்கு அடிச்சிட்டு படுத்து தூங்கினா தான் பிரச்சனை வராமல் இருக்கும் என்று சொன்னதும் மீனா கோவப்பட்டு அங்கிருந்த தலையணையை எடுத்து முத்துவை அடிக்கிறார். அப்போது முத்து விலகிவிட அந்த நேரத்தில் வீட்டு வாசலில் வந்து நின்ற விஜயாவின் மீது விழுகிறது.
மீனா செய்த செயல்
இதனால் விஜயா வழக்கம்போல கத்திக் கொண்டிருக்கிறார். நீ வேணும்னு தான் அடிச்ச என்று சொல்லிக் கொண்டிருக்க, அதற்கு முத்து நாங்க ரெண்டு பேரும் விளையாடிட்டு இருந்தோம் நீங்கதான் குறுக்க வந்துட்டீங்க என்று சொல்கிறார், இந்த வயசில் உங்களுக்கு விளையாட்டு தேவையா என்று விஜயா கேட்க, நீங்க வேணா அப்பா கூட விளையாடுங்க என்று முத்து சொல்லிக் கொண்டிருக்கும்போது அண்ணாமலை வந்து என்ன விளையாட்டு என்று கேட்கிறார்.
விஜயாவுக்கு விழுந்த அடி
அப்பொழுது வீட்டில் நடந்த விஷயத்தை முத்து சொன்னதும் சரி விடு என்று விஜயாவிடம் அண்ணாமலை சமாதானம் செய்கிறார். அதற்கு விஜயா மீண்டும் திட்டிக்கொண்டு இருக்க, இப்போ என்ன உங்களுக்கு நான் அடிச்சது வருத்தமா இருந்தா என்னை திருப்பி அடிச்சிடுங்க என்று சொல்ல, விஜயா அந்த பில்லோவை தூக்கி போடும்போது முத்து மீனாவை பிடித்து இழுத்து விடுகிறார். அதனால் அந்த நேரம் அங்கு வந்த மனோஜ் தலையில் விழுந்து விடுகிறது. உடனே மனோஜ் கத்திவிடுகிறார்.
சாமியார் சொன்ன விஷயம்
பிறகு முத்து மனோஜ் கிண்டல் செய்கிறார். பிறகு அண்ணாமலை என்னடா நடக்குது என்று முத்துவிடம் திட்ட, அதற்கு முத்து மீனாவிடம் கோவிலில் வைத்து யாரோ ஒரு பெண் சாமியார் எனக்கு ஏதோ கெட்டது நடக்கப் போகுதுன்னு சொன்னாங்களாம் என்று சொல்ல, அதற்கு விஜயா இவனால தான் எல்லாருக்கும் கெட்டது நடக்கும் இவனுக்கு யாராலும் கெட்டது நடக்காது என்று சொன்னதும் அண்ணாமலை விஜயாவை திட்டுகிறார்.
அண்ணாமலை பதிலடி
முத்துவும் உன்னுடைய மகன்தான் எப்ப பார்த்தாலும் அவனை குறை சொல்லிக்கிட்டே இருக்க என்று விஜயா அண்ணாமலையை திட்ட விஜயா முதலில் இவளுக்கு ஒரு தாயத்து வாங்கிட்டு வந்து இவளை விரட்டி விடனும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் முருகன் வித்யாவை பார்க்க வர ரோகிணி இருக்கிறார். ரோகிணியிடம் வித்யா முருகனை அறிமுகப்படுத்துகிறார். அப்போது முருகன் எங்க கல்யாணத்துக்கு நீங்கதான் முன் நின்று நடத்தணும் என்று சொல்லிவிட்டு கிளம்பி போகிறார்.

அம்மா சொன்ன விஷயம்
அதைத்தொடர்ந்து ரோகிணியின் அம்மா அங்கு வருகிறார். அவர் முதலில் நலம் விசாரித்து விட்டு க்ரிஷ் தினமும் உன் மாமனாரிடம் பேசிட்டு தான் ஸ்கூலுக்கு போறான். அவரும் அவன் எங்கே இருக்கிறான் என்று பார்த்து வந்து பேசுறாரு, எனக்கு பயமாயிருக்கு. இப்ப ஏற்கனவே நீ பணக்கார பொண்ணு இல்லைன்னு தெரிஞ்சதுக்கே உன் மாமியார் பெரிய பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்காங்க இன்னும் குழந்தை விஷயமும் தெரிஞ்சா என்ன பண்ணுவாங்கன்னு தெரியல, அதனால க்ரிஷ் பற்றி முத்து மீனாவிடம் சொல்வது தான் சரின்னு தோணுது என்று சொல்ல ரோகிணி கோபப்படுகிறார்.
பீல் பண்ணும் அம்மா
என்னை பற்றி வீட்டில் எப்போதும் போட்டு கொடுத்து கொண்டு இருப்பதே அவங்க தான், அவங்க கிட்ட போய் சொல்ல சொல்லுறியா? என் வாழ்க்கையை என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும் என்று திட்டிக் விட்டு அங்கிருந்து கிளம்புகிறார். அதனால் ரோகிணியின் அம்மா பீல் பண்ணிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications