சிறகடிக்க ஆசை: அசிங்கப்பட்ட விஜயா, ரோகிணி.. அண்ணாமலை சொன்ன வார்த்தை! சந்தோஷத்தில் முத்து, மீனா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 மார்ச் எட்டாம் தேதிக்கான எபிசோடில் முத்து மற்றும் மீனாவை பற்றி அண்ணாமலை சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது பிரச்சனை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்த ரோகிணி மற்றும் விஜயாவிற்கு ஏமாற்றம் கிடைத்திருக்கிறது.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மீனாவிற்கு பெரிய ஆர்டர் கிடைத்த விஷயத்தை எல்லோரும் சொன்னதும் அண்ணாமலை அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அப்போது உனக்கு நல்ல மனசு நல்ல எண்ணமாக இருந்தால் நீ மேலும் வேற லெவலில் உயர்ந்து போகலாம் என்று சொல்ல, விஜயா இப்பதானே ஆர்டர் கிடைச்சிருக்கு அதை முடிக்கல அதுக்குள்ள இவ்வளவு பில்டப் பண்ணாதீங்க என்று சலிப்பாக சொல்கிறார்.

அசிங்கப்படுத்திய முத்து
அதற்கு ஏன் முதல் தடவை கெடுத்த மாதிரி இப்பவும் கெடுக்கணும்னு நினைக்கிறீங்களா? யாருக்கு என்ன ஆனாலும் சரி மீனா இந்த தடவை வேலையை செஞ்சு ஆகணும். இவங்க கழுத்து இழுத்துக்கிட்டாலும் சரி, வாய் கோணிக்கிட்டு போனாலும் சரி என்று சொல்ல, அதை கேட்டு விஜயா கோபப்படுகிறார். உங்க பையன் என்னை பார்த்து வாய் கோணிட்டு போகட்டும்னு சொல்லுறான் என்று சொல்ல, அண்ணாமலை விஜயாவை திட்டுகிறார்.
பல்பு வாங்கிய ரோகிணி
அப்போது ரோகிணி ஸ்ருதியிடம் மீனா கொஞ்சம் கொஞ்சமாக டெவலப் ஆகிட்டே போய் இருக்காங்க. உங்களை விட அதிகமா சம்பாதிச்சுடுவாங்க போல என்று சொல்ல, அதற்கு ஸ்ருதி சம்பாதிக்கட்டும் அதுவும் நல்லது தானே என்று சொல்லவும் ரோகிணியின் முகம் சுருங்கி போகிறது. அதை பார்த்து முத்து கொளுத்தி போட்டது வீணா போயிடுச்சு என்று கிண்டல் செய்ய ரோகிணி போய்விடுகிறார்.
முத்து மீனா ரொமான்ஸ்
அப்போது ரவி அண்ணி ஸ்வீட் எதுவும் இல்லையா என்று கேட்க, நீங்க போயிட்டு வாங்க நான் சமைத்து வைக்கிறேன் என்று சொல்கிறார். பிறகு எல்லோரும் கிளம்பியதும் மீனாவும் முத்துவும் கிச்சனில் சந்தோஷமாக கட்டிப்பிடித்துக்கொண்டு ரொமான்ஸ் செய்தபடியே பேசிக் கொண்டிருக்கிறார்கள். பிறகு மீனா இந்த ஆர்டருக்கு நம்ம கையில ஒன்றரை லட்சம் தேவைப்படுது என்று சொல்ல, என்கிட்ட கொஞ்சம் காசு இருக்கு எப்படியாவது ரெடி பண்ணலாம் என்று முத்து சொல்கிறார்.

சிந்தாமணி சொன்ன விஷயம்
ஆனால் மீனா வேணாம் என்னால முடிஞ்ச அளவுக்கு நான் ரெடி பண்ணுறேன். தேவைப்பட்டால் உங்ககிட்ட கேட்கிறேன் என்று சொல்கிறார். அதற்கு முத்துவும் சரி என்று சொல்கிறார். அதைத் தொடர்ந்து விஜயா ரூமில் யோசித்துக் கொண்டிருக்க அப்போது சிந்தாமணி போன் பண்ணுகிறார். எங்க இருக்கீங்க மாஸ்டர் என்று கேட்க, வீட்ல தான் இருக்கேன் என்று விஜயா சொல்கிறார்.
இந்த மீனாவுக்கு ஏதோ பெரிய ஆர்டர் கிடைச்சது என்று சொல்லிட்டு இருக்கா என்று விஜயா சொல்ல, செஞ்சிட்டு போகட்டும் விடுங்க என்று சொல்கிறார். நீங்களே இப்படி சொன்னால் எப்படி? உங்களுடைய தொழிலுக்கு தானே போட்டியா மேல வளர்ந்து வந்துட்டு இருக்கா? என்று சொல்ல, நீண்ட ஆர்டர் மீனாவுக்கு கிடைத்ததற்கு காரணமே நான் தான் என்று சொன்னதும் விஜயா அதிர்ச்சி அடைகிறார்.
விஜயாவின் கனவு
என்ன சொல்லுறீங்க எனக்கு புரியல என்று சொல்ல, இதுதான் மீனா எடுக்கிற கடைசி ஆர்டர் இதை பண்ணிட்டு அவர் தொழிலுக்கே வரமாட்டா இனி பிளவர் என்ற பெயருக்கு இடமில்லை வீட்டில் உட்கார்ந்து காலிபிளவர் வேணா செய்யலாம் என்று சொல்லிவிட்டு போனை வைக்கிறார். கொஞ்ச நேரத்தில் விஜயா காலிஃப்ளவர் வாங்கிக் கொண்டு வந்து மீனாவிடம் கொடுத்து இதை சமைச்சு வை என்று சொல்லிவிட்டு மனதிற்குள் சிந்தாமணி சொன்ன மாதிரி நினைத்துப் பார்க்கிறார்.
கறி குழம்பு ரெடி
அடுத்ததாக முத்துவும் அண்ணாமலையும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது பரசு வருகிறார். கல்யாண வேலை எல்லாம் எப்படி இருக்கு என்று கேட்க எல்லாம் நல்லபடியா போய்ட்டு இருக்கு என்று சொல்லி, கொண்டு வந்த பாத்திரத்தை மீனாவிடம் கொடுக்கிறார். இதுல என்ன இருக்குன்னு கேட்க மாப்பிள்ளை ம்மா என்னை பாக்க வீட்டுக்கு வந்து இருந்தாரு அப்போ நாலு கிலோ கறி எடுத்துட்டு வந்தாரு. அதனால உங்களுக்கு இரண்டு கிலோ கொண்டு எடுத்துட்டேன் என்று சொல்ல,
விஜயா குழம்பு வச்சுட்டு கொஞ்சம் வறுத்துரு என்று மீனாவிடம் சொல்கிறார். அப்போது பணம் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது இன்னும் ஒரு லட்சம் தேவைப்படுகிறது என்று சொல்ல, அண்ணாமலை என்கிட்ட உனக்கு கேக்கணும் தோணலையா? மனோஜ் காலேஜ் செலவுக்கு நான் உன்கிட்ட எத்தனையோ தடவை வாங்கி இருக்கிறேன். உனக்கு தேவைப்படுற ஒரு லட்சம் பணத்தை எப்படியாவது அரேஞ்ச் பண்ணி தரேன் என்று சொல்கிறார்.

பரசு சொன்ன விஷயம்
பிறகு அவர் போனதும் விஜயா 2 கிலோ கறியை கொடுத்துட்டு ஒரு லட்சம் பணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டு போறாரு என்று மனசுக்குள் நினைக்கிறார். மறுபக்கத்தில் முத்து கார் ஸ்டாண்டுக்கு போகிறார். அப்போது ஒரு நண்பர் ஒரு பெரிய சவாரி இருக்கு போறியா என்று கேட்க, என்ன சவாரி என்று கேட்டது லண்டன் சவாரி தமிழ்நாட்டில் இருக்கிற கோவிலை சுத்தி காட்டணும்னு சொல்றாங்க எங்களுக்கு இங்கிலீஷ் தெரியாது, நீயாவது கொஞ்சம் சமாளிச்சு விடுவ என்று சொல்கிறார்கள்.
முத்துவின் திறமை
அப்போது லண்டன் காரர்களிடம் முத்து இங்கிலீஷில் பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் மீனா அங்கு வந்து அதை பார்த்துக் கொண்டிருக்கிறார். பிறகு மீனா முத்துவிடம் நீங்க நல்லா படிச்சு இருக்கலாம் என்று சொல்ல, நான் படிச்சிருந்தா எனக்கு நீ கிடைச்சிருக்க மாட்டியே என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications