செம ட்விஸ்ட்..எதிர்நீச்சல் முக்கிய நடிகர் சிறகடிக்க ஆசை சீரியலில் அறிமுகம்..ஆனா இப்படி ஒரு கேரக்டரா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் ஒன்று நடந்திருக்கிறது.
அதாவது எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனின் ஆடிட்டர் சிறகடிக்க ஆசை சீரியலில் டாக்டராக அறிமுகம் ஆகி இருக்கிறார்.

ஏற்கனவே சிறகடிக்க ஆசை சீரியலில் முக்கியமான தருணம் இருக்கும் நிலையில் இனி புது டாக்டரின் அறிமுகத்தால் என்ன மாதிரி கதை மாறப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. அதே நேரத்தில் சன் டிவியில் 9:00 மணிக்கு எதிர்நீச்சல் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் நடிகர்கள் தற்போது ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றனர். பிரபலமாகவும் இருக்கின்றனர்.

அந்த வகையில் அடிக்கடி குணசேகரனிடம் திட்டு வாங்கும் கேரக்டராக அவருடைய ஆடிட்டர் இருக்கிறார். குணசேகரன் அவருடைய வீட்டுப் பெண்களை விடவும் ஆடிட்டரை தான் அதிகமாக திட்டிக் கொண்டிருப்பார். ஆடிட்டர் இல்லாமல் எந்த இடத்திற்கும் குணசேகரன் போகாமல் சுற்றிக் கொண்டிருந்தாலும் அந்த ஆடிட்டரை குறை சொல்லாமல் இருந்த நாளில்லை.

கையில் பேக்கோடு எப்போதும் இன்பண்ணி டிப்டாப்பாக வலம்வரும் ஆடிட்டர் இப்போது சிறகடிக்க ஆசை சீரியலில் டாக்டராக அறிமுகமாகி இருக்கிறார். இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. அண்ணாமலை நெஞ்சுவலி வந்து ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி இருக்கிறார். இந்த நிலையில் அவரை பரிசோதிக்க வந்த பெரிய டாக்டர் ஆக அறிமுகமாகி இருக்கிறார்.
அத்தோடு அண்ணாமலைக்கு உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும், இன்று ஒரு நாள் மட்டும் தான் இங்கே இருப்பேன் என்றும் கூறியிருக்கிறார். ஆப்ரேஷனுக்கு 4 லட்சம் ஆகும் என்று கூறியிருக்கும் நிலையில் ஒரே நாளைக்குள் எப்படி மொத்த பணத்தையும் முத்து குடும்பத்தினர் ரெடி செய்யப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருக்கிறது.
இந்த நிலையில் மீனாவை விஜயா அண்ணாமலையை பார்க்கக் கூடாது என்று சொல்லி அவமானப்படுத்தி வெளியே அனுப்பி இருக்கிறார். இந்த நிலையில் இனி என்ன நடக்கப்போகிறது? அதுவும் புதிய டாக்டராக எதிர்நீச்சல் நடிகர் அறிமுகமாகி இருக்கும் நிலையில் அவருடைய கேரக்டர் இனி அதிக நாட்கள் இருக்குமா? அல்லது ஒரு சில நாட்களுக்கு மட்டும்தான் இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
நந்தனாவை சேரில் இருந்து விரட்டி.. உடனே ராதிகா கும்பிட்டு.. பாரதிராஜா இறுதிச் சடங்கில் என்ன நடந்தது -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம்












Click it and Unblock the Notifications