சிறகடிக்க ஆசையில் என்ட்ரியான புது நபர்.. இனி கதையே மாற போகுது! ரோகிணிக்கு சிக்கல் இருக்கு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் புது கேரக்டர் ஒருவர் அறிமுகம் ஆகி இருக்கிறார். அதனால் சீரியலில் இனி என்ன நடக்கப்போகிறது என்று இந்த செய்தியில் பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து மற்றும் மீனாவிற்கு மட்டும் எப்போதும் பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது என்று புலம்பிக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஆறுதல் கொடுக்கும் வகையில் கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. ரோகிணி பற்றிய ரகசியங்கள் சீரியலில் தெரிய வந்தால் சீரியலே அவ்வளவுதான்.. முடிக்க வேண்டிய சூழ்நிலைதான்.

சீரியலில் பெரிய திருப்பம் ஏற்படுத்துவதே ரோகிணி பற்றிய ரகசியங்கள் தான். அதனால் அதை இப்போது தெரிய வைப்பதற்கு வாய்ப்பில்லை. ஆனால் ரசிகர்களின் மனதிற்கு பிடித்தது போல ரோகிணிக்கு பிரச்சனை வருவது போன்று கதை கொண்டு போகப் போகிறார்கள்.
அதாவது ரோகிணி தன்னுடைய அம்மாவை ஊரில் வைத்திருந்தால் முத்துவும் மீனாவும் அடிக்கடி சென்று தொந்தரவு செய்கிறார்கள் என்று சென்னைக்கு கூட்டிக்கொண்டு வந்திருக்கிறார். அங்கு தன்னுடைய மகனை ஒரு ஸ்கூலில் படிக்க வைக்கிறார். அதே ஸ்கூலில் அண்ணாமலையும் வேலைக்கு செல்கிறார்.
அண்ணாமலை இனி வாரத்தில் இரண்டு நாட்கள் அந்த ஸ்கூலுக்கு வேலைக்கு போகப் போகிறார். அப்போது ரோகிணியின் மகன் அண்ணாமலையின் கண்ணில் சிக்க வாய்ப்பு இருக்கிறது. ரோகிணியின் மகன் கிரிஷ் பள்ளியில் அவருடைய அம்மா என்று ரோகிணி தான் பெயர் கொடுத்திருக்கிறார். இதனால் அண்ணாமலையிடம் ரோகிணி சிக்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
அதே நேரத்தில் முத்துவின் செல்போனை வித்யா கடலில் கொண்டு போட போறேன் என்று கொண்டு போய்க் கொண்டிருக்கும் போது அவருடைய செருப்பு அறுந்து போனதால் அந்த செருப்பை தைத்து விட்டு, ஒரு ஆட்டோவில் ஏறிப் போகிறார். அப்போது போன் தவறி கீழே விழுந்து விடுகிறது. அந்த போனை ஏற்கனவே முத்து மற்றும் மீனாவிற்கு பழக்கமான செருப்பு தைப்பவர்கள் தான் எடுத்து வைத்து இருக்கிறார்கள்.'
இந்த போனை முத்துவோ அல்லது மீனாவோ பார்க்கும்போது இது யார் தவறவிட்டது என்று விசாரணையை தொடங்குவார்கள். அப்போது வித்யா சிக்குவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இந்த பிரச்சனை ரோகிணிக்கு எதிராக வந்து கொண்டிருக்கும் நிலையில் முத்து மற்றும் மீனாவிற்கு இடையே பூகம்பத்தை ஏற்படுத்தும் வகையில் புது கேரக்டர் ஒருவர் அறிமுகம் ஆகி இருக்கிறார்.
அவர் நேற்றைய எபிசோடில் மீனாவை பின்தொடர்ந்து வருகிறார். மீனா அவரிடம் தப்பிப்பதற்காக வித்யா வீட்டிற்கு செல்கிறார். பிறகு அங்கிருந்து அந்த நபர் கிளம்பி வந்து முத்துவிடம் நான் ஒரு பெண்ணை லவ் பண்ணுகிறேன்.. அந்த பெண்ணை ஒருநாள் தான் பார்த்தேன். பார்த்ததும் எனக்கு பிடித்து விட்டது. அந்த பெண்ணை பார்த்துவிட்டு ஆபீஸ்க்கு போன இடத்தில் எனக்கு நல்லதாகவே நடந்தது என்று பேசிக் கொண்டிருக்கிறார்.
முத்துவும் அது மீனாவை தான் சொல்கிறார் என்று தெரியாமலேயே அவருக்கு காதல் பண்ணுவதற்கு டிப்ஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இதனால் இதை வைத்து ஒரு பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து இனி எதிர்பாராத பல திருப்பங்கள் நடக்க இருக்கிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications