சிறகடிக்க ஆசை: மீனாக்கும் ரோகிணிக்கும் சரியான போட்டி! முத்துவுக்கு கிரிஷ் கொடுத்த செருப்படி! இது பலருக்கும் பாடம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 ஜனவரி 17ஆம் தேதிக்கான எபிசோடில், மீனா மீது கோபத்தில் இருக்கும் முத்துவுக்கு கிரிஷ் மூலமாக சரியான பதிலடி கிடைத்திருக்கிறது. அதே நேரத்தில் சிந்தாமணி விஜயா குடும்பத்திற்குள் சூழ்ச்சி செய்து கொண்டிருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் விஜயா வீட்டிற்கு வந்த சிந்தாமணி விஜயாவிடம் உங்க பையனுக்கு அந்த பொண்ணு செட் ஆகாது, அதனால டைவர்ஸ் கேஸ் போடுங்க அதுக்கு இந்த பணத்தை வச்சுக்கோங்க என்று கொஞ்சம் பணத்தை கொடுக்க, விஜயா வேண்டாம் என்றாலும் நீங்க வச்சுக்கோங்க நீங்க கஷ்டப்படுவதை என்னால பார்க்க முடியவில்லை என்று சொல்லிவிட்டு உங்களுக்கு என்ன உதவினாலும் கேளுங்க என்று ஐஸ் வைத்துவிட்டு கிளம்புகிறார்.

ஏற்கனவே ரோகிணியிடம் நைசாக பேசி குடும்பத்திற்கு எதிராக திருப்பி விடுகிறார். இப்போது விஜயாவையும் ரோகிணிக்கு எதிராக திரும்புகிறார். ஊரு ரெண்டு படடா கூத்தாடிக்கு சந்தோசம் என்று ஒரு பழமொழி சொல்லுவாங்க அதே போல ஒரே வீட்டுக்குள் இருப்பவர்களை பிரிச்சு வச்சா எதிரிக்கு சந்தோஷம் என்று நிரூபித்திருக்கிறார்.
அடுத்ததாக கிரிஷ் ஊரில் இருந்து வர அவனை பாட்டி வந்து பிக்கப் செய்ய வருகிறார். உடனே கிரிஷ் ஏன் முத்து அங்கிள் வரல, மீனா ஆன்ட்டி வரலையா என்று கேட்க, அதற்கு பாட்டி இனிமேல் அவங்க வர மாட்டாங்க நம்ம வீட்டுக்கு போகலாம் என்று சொல்ல, ஏன் பாட்டி அப்போ மீனா ஆன்ட்டி அம்மா பத்தி எல்லாத்தையும் சொல்லிட்டாங்களா என்று கேட்கிறான்.
அதற்கு கிரிஷ் பாட்டி ஆமா என்று என்று சொல்லி இனி நாம அவங்க வீட்டுக்கு போக முடியாது வா நம்ம ஊருக்கே போயிடலாம் என்று ஆட்டோவில் கூட்டிக்கொண்டு வருகிறார். மறுபக்கத்தில் முத்து கார் செட்டில் தன்னுடைய நண்பர்களிடம் வீட்டில் நடந்த விஷயத்தை பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அண்ணாமலை அங்கு வந்து வீட்டில் நடந்த விஷயத்தை பற்றி பாட்டியிடம் சொல்ல வேண்டாம் அவங்க தாங்கிக்கொள்ள மாட்டார் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அப்போது ஆட்டோவில் சென்று கொண்டிருந்த கிரிஷ் முத்துவை பார்த்ததும் ஆட்டோவை நிறுத்த சொல்லி, அதிலிருந்து இறங்கி ஓடி வந்து முத்துவை கட்டி அணைத்து கொள்கிறார். அப்போது முத்துவுக்கு என்ன செல்வது என்று தெரியாமல் அமைதியாக இருக்கிறார். உங்களுக்கு எங்க அம்மா தான் ரோகினி என்று தெரிந்திடுச்சாமே? அப்போ இனிமே உங்க கூடவே இருக்கலாமா? எங்க அம்மாவையும் என்னையும் வீட்டிலேயே வச்சுக்கோங்க என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது கிரிஷ் பாட்டி அண்ணாமலை காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார்.
என் பொண்ணு வாழ்க்கையை நானே கெடுத்துட்டேன். அதனாலதான் இந்த வாழ்க்கையை அவ காப்பாத்திக்கணும்னு நினைச்சு மறைச்சோம். இனி அவ தலை எழுத்து என்னமோ அதுபோல நடக்கட்டும் என்று சொல்லிவிட்டு போகிறார். அப்போது அண்ணாமலை இதே போல தானே இந்த பையனுக்காக மீனாவும் உண்மையை நம்மகிட்ட சொல்லாம மறைச்சிருப்பா.. அவளும் பாவம்தான் என்று சொன்னதும் முத்துவும் பீல் பண்ணி கொண்டிருக்கிறார்.
அப்போதான் மீனா பக்கம் இருக்கும் நியாயமும் முத்துவுக்கு புரிக்கிறது. அடுத்ததாக மீனா ஸ்ருதி ரெஸ்டாரண்டுக்கு பூ கொடுத்த போகிறார். அங்கு சாப்பிட்டு போகலாம் என்று சொல்லிக் ஸ்ருதி சொல்லி கொண்டிருக்கும் நேரத்தில் ரோகிணி அங்கு வருகிறார். ரோகிணியை பார்த்ததும் மீனா கோபப்படுகிறார்.
ஆனால் ரோகிணி மீனாவிடம் நீங்க எனக்கு ஏழு நாள் டைம் கொடுத்துட்டு எதுக்காக முத்து விடம் சொல்லி கொடுத்தீங்க என்று கேட்க, உன்ன பத்தி சொல்லணும்னா எப்பவோ சொல்லியிருப்பேன். நான் உனக்கு டைம் கொடுத்துட்டு சொல்ல வேண்டிய அவசியமே இல்ல, அவருக்கு உன்னுடைய புருசனின் அண்ணன் மூலமாக தெரிய வந்திருக்கு என்று உண்மையை சொல்ல ரோகிணி நீங்கதான் எனக்கு உதவி செய்யணும் என்று மீனா மற்றும் ஸ்ருதியிடம் கேட்கிறார்.
அதற்கு மீனா உனக்கு ஏற்கனவே செஞ்ச உதவியாள் தான் இங்கு இருக்கிறேன். நீ போற போக்குல என்னை மாட்டி விட்டுட்டு போயிட்ட, உன்னால இப்ப நான் குற்றவாளியா இருக்கிறேன். இதே போல ஸ்ருதியும் வாழ்க்கையை இழக்கணுமா என்று கேட்க, அதற்கு ரோகினி என்ன இருந்தாலும் உங்க புருஷன் கூட தான நீங்க வாழ்ந்துட்டு இருக்கீங்க.
எனக்கு மனோஜ் வேணும், அதற்காக நீங்க தான் உதவி பண்ணனும் என்று கேட்க, நீயே உன் புருஷன் கூட வாழு, இல்ல வாழாம போ அதுக்காக எங்களால் உதவி பண்ண முடியாது என்று மீனா சொல்லிவிடுகிறார். அதற்கு ரோகிணி உங்களுக்கு ரோகிணியாக இருந்தால் தான் என் கஷ்டம் தெரியும். நீங்க மட்டும் இப்படியே வா உங்க புருஷன் கூட சந்தோஷமா வாழ்ந்துட போறீங்க என்று பழி வாங்குற மாதிரி குத்தலாக பேசுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications