சிறகடிக்க ஆசை: மனோஜால் ஜீவா கர்ப்பமா? அப்போ ரோகிணி நிலைமை? இது பெரிய ஆப்பா இருக்கே
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் கேரக்டரில் நடிக்கும் நடிகர் ஸ்ரீ தேவா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது அந்த வீடியோவில் ஜீவா கர்ப்பமாக இருக்கிறாரா? என்று கேள்வி கேட்டு மனோஜ் திரு திருவென முழிக்கிறார்.
அந்த வகையில் விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை சீரியல் தான் டிஆர்பியில் முதல் இடத்தை பிடித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு டுவிஸ்ட் வந்து அது உடனுக்குடன் முடிவிற்கு வருவது ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பாராட்டப்படுகிறது. அதே நேரத்தில் சீரியலில் ரோகிணி மட்டும் மாட்டுவது இல்லையே? அவருக்கு மட்டும் எந்த பிரச்சனையும் வருவதில்லை, அப்படியே பெரிய பிரச்சனை வந்தாலும் உடனுக்குடன் அது மட்டும் முடிந்து விடுகிறது.

ஆனால் முத்து மற்றும் மீனாவிற்கு தான் எப்போதுமே பிரச்சனை மேல் பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது என்பது ரசிகர்களின் வருத்தமாக இருக்கிறது. ஆனால் வாழ்க்கையாக இருந்தாலும் சரி சினிமாவாக இருந்தாலும் சரி அங்கே கதாநாயகன் கதாநாயகி தானே அதிகமான பிரச்சனைகள் சந்திப்பார்கள். வில்லன்கள் எப்போதுமே வில்லத்தனங்கள் செய்து கொண்டு இருந்தாலும் அவர்கள் சொகுசாகத்தான் இருக்கிறார்கள். கடைசியில் தான் அவர்களுக்கு ஆப்பு பெருசாக கிடைக்கும்.
இதுபோலத்தான் இப்போது இந்த சீரியலிலும் நடந்து கொண்டிருக்கிறது. போன வாரம் முழுக்க முத்து குடிக்காமலேயே அவரை குடிகாரனாக சிட்டி வெளியிட்ட வீடியோ பெரிய அளவில் பரபரப்பு ஏற்படுத்த, பிறகு மீனா உண்மையை கண்டுபிடித்து முத்து மீது தப்பில்லை என்பதை நிரூபித்திருக்கிறார். இந்த நிலையில் மீனா மற்றும் முத்து முதல் திருமண நாளை கொண்டாடுகின்றனர்.
அதிலும் பிரச்சனையை ஏற்படுத்துவதற்காக ஸ்ருதியின் அம்மா தங்க வளையலை கொடுத்து பிரச்சனை கிளம்ப பார்க்கிறார். ஆனால் அதிலும் மீனா சமாளித்து விட்டார். இப்போது மீனாவின் தம்பி சத்யா வீட்டிற்கு வருவதால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. இப்படியான நிலையில் இப்போது இந்த சீரியலில் மனோஜாக நடிக்கும் நடிகர் ஸ்ரீதேவா தன்னுடைய instagram பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

அதில் ஜீவாவும் மனோஜும் ரோகிணியின் பியூட்டி பார்லரில் இருக்கின்றனர். அப்போது மனோஜ் ஜீவாவை பார்த்து " என்னோட வேலை டெம்ப்ரவரி பட்.. என்னுடைய பெஸ்ட் பிரண்டு பிரகனண்ட்" என்று சொல்ல ஜீவா மனோஜை அடிக்கிறார். அதாவது பெர்மனென்ட் என்று சொல்வதற்கு பதிலாக பிரகனண்ட் என்று சொல்வது போன்று இந்த காட்சிகள் இருக்கிறது. இது பார்ப்பதற்கு காமெடியாக இருந்தாலும் சில நேரங்களில் இனி இப்படி ஒரு ட்விஸ்ட் வைத்து விடுவார்களோ என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புவதையும் பார்க்க முடிகிறது.
காரணம் ஜீவாவிற்கு ஆதரவாக போலீஸ் ஸ்டேஷனில் முத்து கையெழுத்து போட்டு கொடுத்திருக்கிறார். ஆனால் தன்னுடைய அண்ணனை ஏமாற்றியது இந்த ஜீவா தான் என்பது தெரியாமலேயே ஜீவாவிற்கு முத்து உதவியிருக்கிறார். அதே நேரத்தில் ஜீவாவிடம் இருந்து பணம் வாங்கியாதை ரோகிணி மற்றும் மனோஜ் வீட்டில் மறைத்திருக்கும் நிலையில் இனி ஜீவாவால் இந்த உண்மை உடைபடுமா? என்று எதிர்பார்ப்புகளும் இருக்கிறது. என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு இவ்வளவு பெரிய சோதனையா? பைனான்சியர் சொன்ன கண்டிஷன்.. நெஞ்சுவலியில் அண்ணாமலை -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications