சிறகடிக்க ஆசை: கடைசி நேரத்தில் அலர்ட்டான மனோஜ்.. ஆனால் உண்மை உடைந்தது.. மாட்டிக்கிட்ட விஜயா

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 10ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரைக்கும் ஆன ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் நகை பற்றிய உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக முத்து எடுத்த முயற்சியில் மனோஜ் கடைசி நொடியில் தப்பி விடுகிறார். ஆனால் விஜயா மாட்டியிருக்கிறார் அது பற்றி பார்க்கலாம்.

அந்த வகையில் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஏற்கனவே ஒவ்வொரு முறையும் ரோகிணி மாட்டாமல் தப்பிப்பது போல இந்த முறையும் மனோஜ் மற்றும் விஜயா வீட்டில் மாட்டாமல் தப்பித்து விடுவார்களா? என்று கேள்விகளும் ரசிகர்களுக்கு இருக்கிறது. ஆனாலும் முத்துவும் மீனாவும் கவரிங் நகை எப்படி வந்தது என்பதை பற்றி கண்டுபிடிக்காமல் விடமாட்டோம் என்று சபதம் எடுத்து தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

Television Siragadikka aasai serial

வழக்கம் போல குடும்ப பிரச்சனையை போலீசுக்கு கொண்டு போக வேண்டாம் என்று அண்ணாமலை தடுத்திருக்கிறார். ஆரம்பத்தில் நகை மாறிய விஷயத்தை உடனே வீட்டில் அப்பாவிடம் சொல்ல வேண்டும் என்று முத்து சொன்னபோது மீனா தடுத்துவிட்டார். இப்போது அண்ணாமலை அதே செயலை செய்து இருக்கிறார். இவர்கள் இருவரின் அசட்டுத்தனத்தை வைத்து விஜயா மற்றும் மனோஜ் தப்பித்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

Television Siragadikka aasai serial

ஆனால் முத்து மற்றும் மீனாவிற்கு உதவுவதற்காக இந்த வீட்டில் தான் நகை காணாமல் போயிருக்கும் என்று எனக்கு தோணுகிறது என்று ரவியும் சொல்லி இருக்கிறார். இதனால் முத்துவும் மீனாவும் ஸ்ருதியை வைத்து மனோஜின் நகை ரகசியத்தை அம்பலப்படுத்தி விடலாம் என்று நினைத்திருந்தனர். ஆனால் இன்று வெளியான ப்ரோமோவில் கடைசியில் இது ஸ்ருதியின் குரல் என்று மனோஜ் கண்டுபிடித்துவிட்டார்.

பாம்பின் காது பாம்பறியும் என்று சொல்வார்களோ அதுபோலத்தான் இன்று தப்பு செய்யும் மனோஜுக்கு தன்னிடம் நடிக்கும் ஸ்ருதியின் நாடகம் தெரிய வந்துவிட்டது. ஏற்கனவே மனோஜ் பலரிடம் ஏமாந்து போயிருந்தாலும் இன்று ஸ்ருதியிடம் ஏமாறாமல் அலர்ட் ஆகிவிட்டார். அதைத் தொடர்ந்து விஜயாவிடம் ஸ்ருதி போன் செய்ததை சொல்லி ஆனால் தான் கவரிங் நகை வாங்கவே இல்லை என்று பேசியதை சொல்ல விஜயா முத்து இனி அடுத்த முடிவு எடுப்பதற்குள் நாம அந்த நகைகளை மீண்டும் செய்து வைத்து விட வேண்டும் அதற்கான பணத்தை ரெடி பண்ணு என்று விஜயா சொல்ல மனோஜ் அதிர்ச்சியில் இருக்கிறார்.

Television Siragadikka aasai serial

மறுபக்கத்தில் முத்து மீனாவிடம் மனோஜ் நம்மிடம் சிக்காமல் போனால் என்ன அம்மா என்ன கள்ளத்தனம் பண்ணினாலும் அது ஒருவருக்கு கண்டிப்பா தெரியவரும் என்று சொல்லி பார்வதி வீட்டிற்கு சென்று இருக்கின்றனர். பார்வதியிடம் நாங்கள் பாட்டியின் பிறந்தநாளுக்கு ரெட்டைவட சங்கிலி வாங்கலாம் என்று நினைத்தோம். அதற்காகத்தான் மீனாவின் நகைகளை கொண்டு போனோம் என்று சொல்ல, பார்வதி அதுதான் கவரிங் நகை ஆச்சே என்று உளறி விடுகிறார்.

Television Siragadikka aasai serial

அது உங்களுக்கு எப்படி தெரியும் என்று முத்த கேட்க, பார்வதி ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் விஜயா வாசலில் வந்து நின்று பார்வதி என்று கத்துகிறார். ஆனால் உண்மையை பார்வதி உளறிய பிறகு விஜயா வரப்போகிறாரா? அல்லது பார்வதி உண்மையை சொல்வதற்கு முன்பே விஜயா வந்து அலர்ட் செய்துவிட்டாரா? என்று தெரியவில்லை. முத்துவும் மீனாவும் நகை விஷயத்தில் உண்மையை கண்டுபிடிப்பார்களா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+