சிறகடிக்க ஆசை: மனோஜ் பற்றிய உண்மை தெரிந்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை.. விஜயா போட்ட பிளான்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜூலை 16ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் விஜயா மற்றும் மனோஜை மாட்ட வைக்க வேண்டும் என்பதற்காக முத்து செய்த பிளானில் விஜயாகவும் மனோஜும் மாட்டியிருக்கின்றனர். அது பற்றி பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மனோஜ் தூக்கமில்லாமல் தவித்துக் கொண்டு இருக்கிறார். ஒவ்வொரு முறையும் ரோகிணியை எழுப்பி என்னுடைய வாய் கோணல் ஆகிட்டா இல்ல நல்லா தான் இருக்கா என்று திரும்பத் திரும்ப கேட்க ரோகிணி கோவப்பட்டு இன்னொரு முறை எழுப்பினால் உன் வாய் கோணையாவதற்கு அந்த பழம் தேவையில்லை நானே போதும் என்று மிரட்டுகிறார்.

இதனால் பயந்துபோன மனோஜ் வெளியே வந்து பூஜை அறைக்குள் பார்த்துக் கொண்டிருக்கும் போது விஜயா மனோஜ் பின்னாடி வந்து மனோஜ் தோள் மீது கை வைக்க மனோஜ் கத்த விஜயா நான் தான் கத்தி அந்த முத்துவை எழுப்பி விடாத என்று திட்டுகிறார். உன்னால எனக்கு தூக்கம் இல்லாமல் போச்சு என்று மனோஜை பிடித்து திட்டி பார்வதிக்கு போன் போட்டு விஷயத்தை சொல்ல பார்வதி ஆமாம் முத்து சொன்னது உண்மைதான், இந்த மாதிரி சாமியார்கிட்ட எலுமிச்சை பழம் வந்துருச்சு வாங்குனா அது உண்மையா வேலை செய்யும் என்று பயத்தை காட்ட விஜயாவும் மனோஜும் அதிர்ச்சி அடைகின்றனர்.
அதோடு பார்வதி அடுத்த நாள் நாம ஒரு சாமியாரை பார்க்கலாம் என்று சொல்ல, அதற்கு விஜயாவும் சம்மதிக்கிறார். அடுத்த நாள் காலையில் மனோஜ் சீக்கிரமாக ரெடியாவதை பார்த்து ரோகினி இவ்வளவு சீக்கிரமா எங்க கிளம்பிட்டா என்று கேட்க, அம்மாவும் பார்வதி ஆண்டியும் ஒரு பங்க்ஷன்க்கு போறாங்க அவங்கள டிரா பண்ணிவிட்டுநான் தாம்பரம் வரைக்கும் போகணும் என்று சொல்ல ரோகிணி நானும் ரெண்டு கிளைண்ட பார்க்க போகணும் என்னை டிரா பண்ணிட்டு போ என்று சொல்ல மனோஜினி ஆட்டோல போயிடு என்று சொல்கிறார்.

பிறகு அண்ணாமலை விஜயாவிடம் காலையிலேயே எங்க கிளம்பிட்டா என்று கேட்க, பார்வதிக்கு உடம்பு சரியில்லை என்று சொல்கிறார். முத்து என்னாச்சு என்று கேட்க மனோஜ் வயிற்று வலி என்றும், விஜயா காய்ச்சல் என்றும் உளறுகின்றனர். அந்த நேரத்தில் ரோகிணி வந்து அத்தையும், பார்வதி ஆண்டியையும் ஏதோ பங்க்ஷனுக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னியே என்று சொல்ல வீட்டில் எல்லோரும் சந்தேகப்படுகின்றனர்.

பிறகு இவர்கள் போவதை பார்த்து மீனாவும் முத்துவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது முத்து எலுமிச்ச பழம் வேலையை காட்டுது. அதனாலதான் இவங்க இவ்வளவு அவசரமா வெளியே போறாங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். பிறகு பார்வதியோடு சேர்ந்து மனோஜும் விஜயாவும் ஒரு சாமியாரை பார்க்க போக அவர் கண்டிப்பாக அந்த எலுமிச்சம்பழம் பலிக்கும் உங்க வாய் கோணையாகவும் என்று அதிர்ச்சி கொடுக்கிறார்.
அடப்பாவிகளா! சலூனில் மாஸ்க் போட்டா ஆளே மாறி விடுவாங்களா? இது புது புரணியா இருக்கே.. சீரியல் கொடுமை
அதற்கு விஜயா நீங்கதான் காப்பாத்தணும் என்று சொல்ல பதிலுக்கு அவரும் ஒரு எலுமிச்சை பழத்தை மந்திரித்து கொடுக்கிறார். அந்த பழத்தை கொண்டு வந்து பூஜை அறையில் வைக்க சொல்லவும் மனோஜும் விஜயாவும் பயந்தபடியே அதுபோல செய்கின்றனர். அப்போது அந்த பழம் எதிர் திசையில் உருண்டோடி போய்விட இதை பார்த்து இருவரும் அதிர்ச்சி அடைந்து நிற்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications