சிறகடிக்க ஆசை: உண்மையை மறைச்சிட்டியே! அண்ணாமலை கேட்ட கேள்வி.. விஜயா இப்படி பேசிட்டாங்களே
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜூலை 17ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம். அதில் முத்து வைத்த எலுமிச்சை பழத்தை உண்மை என்று நம்பி மனோஜ் மற்றும் விஜயா மொத்த குடும்பத்தினர் முன்பு மாட்டியிருக்கின்றனர். ஆனாலும் கடைசியில் அவர்கள் சொன்ன வார்த்தை எல்லோரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. அது பற்றி பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் விஜயாவும், மனோஜும் ஒரு எலுமிச்சம் பழத்தை கொண்டு வந்து பூஜை அறையில் வைக்க அது உருண்டோடி போகிறது. பிறகு திகிலோடு அதை எடுத்து மனோஜ் பழம் உருண்டு போகாமல் இருக்க ஒரு பூவை எடுத்து வைக்கிறார். அடுத்ததாக வீட்டிற்கு வந்த முத்து இன்னொரு எலுமிச்சை பழம் இருப்பதைப் பார்த்து மீனாவை கூட்டிட்டு வந்து காட்ட, ரோகிணியிடம், மீனா நீங்க ஏதாவது பழம் வச்சிங்களா என்று கேட்க ரோகிணி இல்லை என்று சொல்கிறார்.

விஜயா நான் தான்டா வச்சேன் கோயிலுக்கு போயிருந்தேன். அங்கு சாமி பாதத்தில் வைத்து கொடுத்தார்கள் அந்த பழத்தை கொண்டு வந்து வச்சிருக்கேன் என்று சொல்கிறார். விஜயா மற்றும் மனோஜ் பேசியதை கேட்டு மீனாவுக்கு சந்தேகம் உறுதியாகிறது. பிறகு இரவு மனோஜ் தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருக்கின்றார். அந்த நேரத்தில் முத்து மனோஜ் கதவை யாருக்கும் தெரியாமல் தட்டிவிட்டு ஒளிந்து கொள்கிறார்.
பிறகு எலுமிச்சை பழத்தை நூலை கட்டி அங்கே இங்கே நகர்வது போல செய்ய மனோஜ் பயந்து போய் விஜயாவுக்கு போன் போட விஜயா இந்த நேரத்துல இவன் போன் பண்ணுரானே இந்த மனுஷனுக்கு தெரிஞ்சிட கூடாதே என்று புலம்பியப்படியே போனை எடுத்து நானும் தூக்கம் வராமல் தான் இருக்கிறேன் என்று சொல்ல இருவரும் ஹாலுக்கு வந்து கூட்டு சேர்ந்து அந்த எலுமிச்சம்பழத்தை தூக்கிப்போட்டு விடலாம் என்று பிளான் போட்டு பழத்தை கையில் எடுக்கவும் முத்து லைட்டை போட இருவரும் சிக்கிக் கொள்கின்றனர்.

அண்ணாமலை இடம் முத்து நான் எதுக்காக இன்னைக்கு தூங்காம காத்திரு என்று சொன்னேனு இப்போ தெரியுதா அப்பா? என்று கேட்க அண்ணாமலை இந்த நேரத்தில் என்ன பண்ணுறீங்க என்று விஜயாவிடம் கேட்க, விஜயா தூக்கம் வரல அதான் இங்க வந்து பேசிட்டு இருக்கிறோம் என்று சொல்கிறார். அவரது கையில் எலுமிச்சை பழத்தை பார்த்ததும் அது என்ன பழம் ஆன்ட்டி ஜூஸ் போடவா என்று ஸ்ருதி கிண்டல் செய்கிறார்.
முத்து நான் சொன்ன மாதிரியே ரெண்டு பேரும் மாட்டிகிட்டாங்க என்று சொல்கிறார் .விஜயா கண்ட கண்ட எலுமிச்சை பழம் எல்லாம் வீட்டுல இருந்தா நல்லது கிடையாது அதனாலதான் தூக்கி போட சொன்னேன் என்று சொல்ல அதை காலையிலேயே செஞ்சிருக்கலாமே என்று மீனா கேட்கிறார். அதோடு நீங்க வச்ச பழத்தையும் எதுக்கு கொண்டு வந்தீங்க என்று மடக்குகிறார். அதற்கு அண்ணாமலை இவ்வளவு நாளா நீ என்கிட்ட ஒரு உண்மையை மறைச்சிருக்க என்று கோபப்பட நான் என்னங்க மறைச்சேன் என்று விஜயா டிராமா போடுகிறார்.

முத்து அது ஒரு சாதாரண எலுமிச்ச பழம் தான். உங்களை கண்டுபிடிக்கிறதுக்காகத்தான் நான் அந்த பழத்தை வச்சேன் என்று தன்னுடைய பிளானை சொல்ல விஜயா அதிர்ச்சி அடைகிறார். ரோகிணி மனோஜை கூட்டிக்கொண்டு தன்னுடைய ரூமுக்கு செல்ல முத்து ஓடி சென்று மனோஜை மடக்கி பிடித்து அக்யூஸ்டே அவன் தான். அவன் மேல தான் கேஸ் நடக்கிறது மரியாதையா நடந்த உண்மையை சொல்லுடா என்று மிரட்டுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications