சிறகடிக்க ஆசை: விஜயா வீட்டை விட்டு போக முடிவெடுத்த ரோகிணி! மனோஜ் சொன்ன வார்த்தை.. முத்து, மீனா நாடகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஜூலை 19ஆம் தேதிக்கான எபிசோடில் ரோகிணி மாமல்லபுரத்திற்கு போவதற்காக முடிவெடுத்து இருக்கிறார். ஆனால் மனோஜ் அதற்கு சொன்ன வார்த்தையை கேட்டு ரோகிணி கோபத்தில் இருக்கிறார். அதே நேரத்தில் முத்துவும், மீனாவும் கோவில் வாசலில் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் விஜயா மீனாவிடம் டீ போட்டுட்டு வர சொல்ல, அதை பார்த்ததும் கோபமான முத்து மீனா என்ன இந்த வீட்டு வேலைக்காரியா? முதலில் காபி போட்டுட்டு வர சொல்லுறீங்க, பிறகு டீ போட்டுட்டு வர சொல்லுறீங்க? மாறி மாறி அவளுக்கு வேலை சொல்லிட்டே இருக்கீங்க என்று சண்டை போட இதனால் கடுப்பான விஜயா எழுந்து வெளியே போகிறார்.

Siragadikka aasai serial vijay tv

ஒட்டு கேட்ட ரோகிணி

பிறகு ஸ்ருதி மற்றும் மீனா இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது எங்க அம்மா ஸ்பை ஒருத்தரை நேற்று நீத்து ரெஸ்டாரண்டுக்கு அனுப்பி வச்சிருக்காங்க. அவங்க ரவி மற்றும் நீத்து பற்றி தப்பா சொல்லி இருப்பதாக மீனாவிடம் சொல்ல, மீனா இதுக்கு கூடவா ஆள் இருக்காங்க? என்று கேட்கிறேன். நீங்கள் ரவியை தப்பா நினைக்காதீங்க என்று மீனா சொல்ல, அதெல்லாம் ஒன்னும் இல்ல அவன் போனா நானும் வேற ஆளை பார்க்க போறேன் என்று சொல்ல அதை ரோகிணி ஒட்டு கேட்டுக் கொண்டிருக்கிறார்.

பிறகு ரவி அப்படி எல்லாம் பண்ணுற ஆளு கிடையாது என்று சொல்லிவிட்டு ஸ்ருதி போய்விடுகிறார். அதைத் தொடர்ந்து ரோகிணி மனோஜ் ஷோரூம் வந்து மகாபலிபுரத்தில் தனக்கு ஒரு ஆர்டர் இருப்பதாகவும் அங்கு ஒரு நாள் தங்க ஏற்பாடு செய்திருப்பதாகவும் மனோஜை கூப்பிடுகிறார். ஆனால் மனோஜ் அம்மாவிடம் கேட்காமல் வர முடியாது என்று சொன்னதும் ரோகிணி கோபப்படுகிறார். நீ உங்க அம்மா பேச்சை கேட்டு இப்படியே இருந்தா நாம ஒரே வீட்டுக்குள்ள ரூம் மெட்டாக மட்டும் தான் இருக்க முடியும். புருஷன் பொண்டாட்டியா வாழ முடியாது என்று கோபப்பட, மனோஜ் அங்கிருந்து கிளம்பி போய் விடுகிறார்.

ரோகிணி போடும் பிளான்

இவர்கள் பேசியதெல்லாம் ஷோரூமில் வேலை செய்யும் ராணி கவனித்துக் கொண்டிருக்கிறார். பிறகு ரோகிணியிடம் வந்து எங்க ஊரில் இப்படித்தான் ஒரு புருஷன் பொண்டாட்டி பாசம் இல்லாமல் சண்டை போட்டுக்கிட்டே இருந்தா ஒரு லேகியம் கொடுப்பாங்க. அதை அனுப்ப சொல்லவா? அதை சாப்பிட்டா அண்ணன் உங்க நெனப்பாவே இருப்பாரு என்று சொன்னதும் ரோகிணி அனுப்பி வைக்க சொல்லுங்க என்று சொல்கிறார்.

மறு பக்கத்தில் முத்து தன்னுடைய காரில் கஸ்டமரை அழைத்துக் கொண்டு செல்கிறார். அவர்கள் பூ வாங்க வேண்டும் என்று சொன்னதும் முத்து மீனாவின் அம்மா கடைக்கு கூட்டிக்கொண்டு வருகிறார். அப்போது சத்யா அருண் சொன்ன இடத்திற்கு இன்டர்வியூ போகிறார்.பிறகு மீனா அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்கும் போது முத்து அங்கு வர பூவை கஸ்டமருக்கு காட்டிக்கொண்டிருக்கிறார்.

வாக்குவாதம் செய்த முத்து

கஸ்டமர் பூ பிரஷ்ஷாக இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு விலை பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறார்‌. அப்போது முத்து மீனா யாரென்று தெரியாது என்பது போல பேசிக் கொண்டிருக்கிறார். மீனாவும் அதே போல பேசிக் கொண்டிருக்கிறார். அப்போ இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். விலை அதிகமாக இருக்கு என்று முத்து சொல்ல, நீங்க மட்டும் உங்க காரில் சவாரிக்கு வரவங்கள பணம் வாங்காமல் சும்மா கூட்டிட்டு போறீங்களா என்று மீனா சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இவர்கள் சண்டை போடுவதைப் பார்த்து சவாரிக்கு வந்தவர்கள் சொன்ன விலைக்கு பூவை வாங்கிவிட்டு போகிறார்கள். அப்போது சீதாவை அழைத்து வந்து கோவிலில் விட்டு விட்டு போகிறார். முத்துவை பார்த்ததும் முறைத்துகொண்டே செல்ல, அருண் போனதும் சீதாவிடம் அவன் ஒழுங்கா பார்த்துக்கிறானா? விவகாரம் பிடிச்சவன்... எதுவா இருந்தாலும் எனக்கு சொல்லு என்று சொல்லிவிட்டு, கிளம்புகிறார்.

மீனா ஆறுதல்

பிறகு சீதாவும் மீனாவும் பேசிக்கொண்டிருக்கும் போது இவங்க ரெண்டு பேரும் இப்படியே இருந்து விடுவாங்களோ என்று பயமாய் இருக்கிறது. எப்போ தான் மாறப்போகிறாங்களோ என்று தெரியவில்லை என்று சீதா சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு மீனா எல்லாம் ஒரு நாள் மாறும். சத்யா கூட முதலில் உங்க மாமாவிடம் முட்டிக்கொண்டுதான் இருந்தான். இப்ப ரெண்டு பேரும் ஒண்ணா இருக்காங்களே அது போல சரியாயிடுவாங்க என்று சொல்கிறார். கடைசியாக முத்து அண்ணாமலை அவர் வேலை செய்யும் பள்ளியில் கொண்டு விடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+