மீனா முகத்தில் நகையை வீசிய விஜயா.. அண்ணாமலை கொடுத்த அதிர்ச்சி.. முத்து இப்படி சொல்லிட்டாரே
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜூலை 19ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் நகையை மாற்றி வைத்ததாக மீனா மேல பழி போட்டதற்காக விஜயா மீனாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அண்ணாமலை சொன்னதற்கு மீனா முகத்தில் விஜயா நகைகளை தூக்கி வீசி இருக்கிறார்.
இந்த வகையில் இன்றைய எபிசோடில் பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடைபெற்றது. எபிசோடின் ஆரம்பத்தில் விஜயா கதவை திறக்காத காரணத்தால் மீனா பயப்பட்டு மீண்டும் மாமாவிடம் சொல்லி கதவை திறக்க சொல்லுங்க என்று முத்துவிடம் சொல்ல, அதற்கு முத்து யார் சொன்னா அவங்க வெளியே வருவாங்க என்று எனக்கு தெரியும் என்று பார்வதிக்கு போன் போடுகிறார்.

அதை தொடர்ந்து மனோஜ் ரோகிணி மீண்டும் வந்து கதவைத் தட்ட மனோஜ் எல்லாத்துக்கும் நீதான் காரணம் என்று முத்து மீது பழியை தூக்கி போட உனக்காக அவங்க அவமானப்பட்டு நிற்குறாங்க. நீ செஞ்ச திருட்டுத்தனத்திற்கு அவங்க துணை போனதனால் தானே இவ்வளவு பிரச்சனை என்று முத்து கேட்க ஆமா பொல்லாத நகை நீங்க என்ன 100 சவரனா வச்சிருந்தீங்க என்று மனோஜ் கேக்க முத்து ஒரு கிராமாக இருந்தாலும் அது என்னுடைய நகை என்று பதிலடி கொடுக்கிறார்.

ஒரு கட்டத்தில் இவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு முத்து மனோஜை போட்டு அடிக்கிறார். அப்போது உனக்கு அம்மாவ பத்தி என்ன கவலை அவங்க ஏதாவது பண்ணிக்கிட்டா கூட நீ சந்தோஷம்தான் படுவ என்று மனோஜ் சொன்னதும் ரோகிணி அவர் சொல்றதும் சரிதானே என்று மனோஜுக்கு சப்போர்ட் பண்ண, மீனா தெரியாம பேசாதீங்க அவர் அவங்க அம்மாவை வெளியில வர வைக்கிறதுக்காக என்ன பிளான் பண்ணி இருக்காருன்னு உங்களுக்கு தெரியுமா என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது பார்வதி வீட்டிற்கு வருகிறார்.
அவர் அண்ணாமலையிடம் முத்து தான் வீட்டில் நடந்த விஷயத்தை சொல்லி என்னை வர சொன்னான் என்று சொல்ல, மீனா அத்தையை புரிஞ்சு வச்சிருக்க ஒரே ஆளு இவர்தான் அதனாலதான் பார்வதி அம்மாவ வீட்டுக்கு வர சொன்னாரு என்று சொல்கிறார். பிறகு பார்வதி கதவை தட்டிக் கொண்டே இருக்க விஜயா திறந்து பார்வதியை இழுத்துக் கொள்கிறார். பிறகு இருவரும் ரொம்ப நேரமா வெளியில வராததால் எல்லோரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

விஜயாவிடம் பேசி முடித்த பார்வதி நான் வீட்டுக்கு கிளம்புறேன் என்று சொல்லி விஜயாவின் கையை பிடித்து வெளியே இழுத்து விடுகிறார். பிறகு அண்ணாமலையிடம் விஜயாவை மன்னித்து விடுங்கள் என்று பார்வதி பேச முத்து மன்னிப்பு கேட்க வேண்டியவங்க மன்னிப்பு கேட்கலையே என்று எடுத்துக் கொடுக்க, மீனா மேல பழி போட்டதற்காக அவ கிட்ட தான் விஜயா மன்னிப்பு கேட்கணும் என்று அண்ணாமலை சொல்கிறார்.
அதைக் கேட்டு விஜயா அதிர்ச்சி அடைந்து இவகிட்ட நான் இறங்கி வரணுமா முடியாது என்று கோபப்படுகிறார். அண்ணாமலை மன்னிப்பு கேட்க முடியுமா? முடியாதா? என்று கேட்க, விஜயா பெரிய சீதனத்தை கொண்டு வந்துட்டா என்று கையில் போட்டு இருந்த வளையல்களை கழட்டி மீனா முகத்தில் வீசி எறிந்து பொறுக்கிட்டு போடி என்று சொல்கிறார்.

என்னுடைய உடம்பில் உயிர் இருக்கிற வரைக்கும் விஜயா யார்கிட்டயும் இறங்கி போக மாட்டா என்று சொல்ல மீனா கண் கலங்கி அழுது கொண்டு நிற்கிறார். முத்து இது மட்டும் வேற யாராவது பண்ணி இருந்தா... என்று கோபப்பட தலையை எடுத்துடுவியா வாடா என்று விஜயா கூப்பிடுகிறார். அண்ணாமலை இதற்கு எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். இப்படியாக இன்று எபிசோடு முடிவடைகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications