சிறகடிக்க ஆசை: மனோஜிடம் பணத்தை வாங்கி முத்து செய்த செயல்.. விஜயாவை கேள்வி கேட்டு கிழித்த ஸ்ருதி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜூலை 23ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ஸ்ருதி விஜயாவை கேள்வி மேல் கேள்வி கேட்டு பதிலடி கொடுக்க விஜயா ஸ்ருதி மீதும் கோபப்படுகிறார். அதே நேரத்தில் மனோஜ் 2 லட்சம் பணத்தை கொண்டு முத்துவிடம் கொடுத்திருக்கிறார்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ரோகிணியும் மனோஜும் வீட்டிற்குள் வருகின்றனர். அண்ணாமலையிடம் அம்மாவை எங்கே என்று மனோஜ் கேட்க உங்க அம்மா பத்தி உனக்கு தானே தெரியும் ரெண்டு பேரும் சேர்ந்து தானே எல்லாத்தையும் பண்ணுவீங்க என்று பதிலடி கொடுக்கிறார். ரோகிணி ஆண்டி ரூம்ல தான் இருப்பாங்க போய் கூப்பிடு என்று அனுப்பி விடுகிறார்.

பிறகு முத்து, மீனா, விஜயாவையும் கூப்பிட்டு வைத்து அண்ணாமலையிடம் மனோஜ் 2 லட்சம் பணத்தை நீட்டியபடி இதற்கு தானே எல்லாரும் அடிச்சீங்க, இதுல ரெண்டு லட்சம் இருக்கு முத்து கிட்ட கொடுத்துடுங்க என்று சொல்ல, என்னுடைய நகையா எடுத்துட்டு போன யாருடன் நகையை எடுத்தியோ அவங்க கிட்டயே கொடு என்று அண்ணாமலை பதிலடி கொடுக்கிறார்.
பிறகு முத்துவிடம் பணத்தை கொடுக்க முத்து வேண்டாம் என்று சொன்னது மனோஜ் வேண்டாமா என்று சந்தோசமாக பணத்தை ரூமுக்கு கொண்டு போக முயற்சி செய்கிறார். அதைபார்த்த அண்ணாமலை அப்படியே நழுவ பார்க்காத என்று மனோஜை திட்டி, எதற்கு பண்ண வேண்டாம் என்று முத்துவிடன் கேட்க முத்து 4 லட்சத்துல 2 லட்சம் தான் இருக்கு என்று சொல்ல மீதி பணத்தை கூடிய சீக்கிரம் கொடுத்து விடுவதாக ரோகிணி சொல்கிறார்.

பிறகு மீனாவும் பணத்தை வாங்குங்க என்று முத்துவிடம் சொன்னதும் முத்து பணத்தை வாங்கிக் கொள்கிறார். அதைத்தொடர்ந்து விஜயா இந்த பணம் எப்படி வந்தது என்று கேட்க அதற்கு ரோகிணி எங்க அப்பா அனுப்பி வச்சாங்க என்று சொல்ல அண்ணாமலை உங்க அப்பா தான் ஜெயிலில் இருக்காங்களே எப்படி பணம் அனுப்புனாங்க என்று கேட்க அதற்கு ரோகிணி சமாளித்து விடுகிறார்.
அதைத் தொடர்ந்து விஜயா ரோகிணி நினைச்சா மொத்த பணத்தையும் கொடுத்திருக்க முடியும் என்று பேச அதற்கு அண்ணாமலை செய்றதெல்லாம் செஞ்சிட்டு இப்படி பேசறது தான் எனக்கு பேசக்கூட பிடிக்கல. வாயை அடக்க சொல்லு உன் புருஷன் திரும்ப இந்த மாதிரி இனி பண்ண கூடாது என்று ரோகிணியிடம் சொல்லிவிட்டு எழுந்து சென்று விடுகிறார்.
அதற்கு பிறகு முத்து பணத்தை வைத்து நகை வாங்கலாம் என்று சொல்ல, மீனா இல்ல நான் சொன்ன மாதிரி நீங்க சம்பாதிச்சு கொடுத்த நகையை தான் நான் போடுவேன். இந்த பணத்துல நீங்க நாம பேசிய மாதிரி கார் வாங்கலாம் என்று சொல்ல முத்துவும் சரி என்று சொல்கிறார். அடுத்து அண்ணாமலை ஹாலில் படுக்க முயற்சி செய்ய முத்து ரூமுக்குள் போக சொல்லிவிட்டு அம்மாவிடம் பேசுப்பா என்று சொல்ல அண்ணாமலை இந்த விஷயத்தில் தலையிடாத என்று திரும்பவும் திட்டி விடுகிறார்.
அப்போது விஜயா பாய் படுக்கையோடு வெளியே வந்து ரூம்ல எனக்கு குளிருதுடா இங்கேயே படுத்துகிறேன் என்று சொல்ல, அண்ணாமலை உள்ள எழுந்து போய்விடுகிறார். மீனா நீங்களும் உள்ளே போய் படுங்க என்று விஜயாவிடம் சொல்ல நான் வெளியே வந்ததால் தான் அவர் உள்ளே போயிருக்காரு. நீ நெனச்ச மாதிரியே நடக்குது போதுமா என்று கோபப்படுகிறார்.
அடுத்தநாள் மீனாவும் ஸ்ருதியும் காபி குடித்துக் கொண்டிருக்கின்றனர் அந்த நேரத்தில் அங்கு வரும் ரோகிணி விஜயா பற்றி பேச அதற்கு மீனா அவங்க கோபமா இருக்காங்க என்று சொன்னதும் ஸ்ருதி உங்க மேல எதுக்கு கோபப்படனும் என்று கேட்க, ரோகிணி ஓவரா பேசினாங்க இல்ல அதனால தான் என்று பதில் சொல்ல அவங்க மனோஜ் மேல தான் கோவப்படணும் மனோஜ் அந்த நகையை எடுக்காமல் இருந்திருந்தால் இவ்வளவு பிரச்சனையே வந்திருக்காது.

மனோஜ் தப்பு பண்ணும் போது அவங்கள தட்டி வச்சிருக்கணும். ஆனா அவங்களே சேர்ந்து தப்பு பண்ணிட்டு மீனா மீது கோபபட்டா சரியா என்று கேள்வி கேட்க ரோகிணிக்கும் ஸ்ருதிக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட மீனா நமக்குள்ள சண்டை வேண்டாம் என்று தடுத்து நிறுத்துகிறார். மூணு பேரும் சேர்ந்து அத்தை கிட்ட பேசலாம் என்று ஐடியா கொடுக்க மூன்று பேரும் சேர்ந்து விஜயாவிடம் பேச வர விஜயா அவர்கிட்ட நான் எப்படி பேச முடியும் அவர்தான் என்கிட்ட பேச மாட்டேன்னு இன்னும் முகத்தை திருப்பிக்கிட்டு போறாரு.

இப்ப மகாராணி இவ தானே இவ நினைச்ச மாதிரியே நடக்குது என்று மீனாவை திட்ட, ஸ்ருதி தப்பு பண்ணுனது நீங்க... மீனாவை எதுக்கு திட்டுறீங்க? நீங்க மீனா கிட்ட மன்னிப்பு கேட்டால் எல்லா பிரச்சனையும் முடிஞ்சதும் என்று கோபப்பட விஜயா இவ கால்ல போய் நான் விழனுமா என்று கோபப்படுகிறார். அதற்கு ஸ்ருதி அங்கிள் உங்க கிட்ட பேசணும்னா இது ஒன்னு தான் வழி யோசிச்சு பாருங்க என்று சொல்லிவிட்டு வெளியே போய் விடுகிறார். அடுத்ததாக முத்து செல்வத்துடன் இரண்டாவது கார் வாங்குவதற்காக ஷோரூம் வந்திருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications