மனோஜிடம் உண்மையை சொன்ன ரோகிணி.. தலையில் அடிபட்டு வரும் முத்து.. எதிர்பாராமல் முடியும் திருமணம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜூலை 27 மற்றும் 28ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.
அதில் ரோகினி மனோஜிடம் நான் எல்லா உண்மைகளையும் சொல்லி விடப் போகிறேன் என்று ஃபோன் போட்டு தனக்கு ஏற்கனவே கல்யாணம் முடிந்ததும் ஒரு குழந்தை இருப்பதைப் பற்றியும் சொல்கிறார்.

இந்த நிலையில் தற்போது சில புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அதில் முத்துவின் தலையில் அடிபட்டு இருக்கிறது. இந்த நிலையில் இனி என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை என்ற சீரியல் சில மாதங்களுக்கு முன்பு ஒளிபரப்பாக தொடங்கி இருந்தாலும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே பல வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த சில சீரியல்களை டிஆர்பியில் பின்னுக்கு தள்ளிவிட்டு இந்த சீரியல் முன்னேறிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இந்த சீரியலில் சற்றும் எதிர்பார்க்காத திருப்பங்கள் அடுத்தடுத்து வர தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே ரோகிணிக்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தை இருக்கும் நிலையில் அதை மறைத்து மனோஜை காதலித்துக் கொண்டிருக்கிறார். தற்போது அதை வைத்து மேனேஜர் ரோகினியை மிரட்டிக் கொண்டிருக்கிறார். இதனால் ரோகிணி வேறு வழி இல்லாமல் இப்போது உண்மையை மனோஜிடம் சொல்லலாம் என்று முடிவு எடுத்து இருக்கிறார்.

இந்த நிலையில் ஜூலை 27 மற்றும் 28 ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ரோகிணி தன்னுடைய பிஏவிடம் நான் மனோஜிடம் எல்லா உண்மையையும் சொல்லப்போகிறேன். அதற்குப் பிறகு அவன் என்ன டிசிஷன் வேணும் என்றாலும் எடுக்கட்டும் என்று சொல்லி, போன் போட மனோஜ் போனை எடுக்கிறார். அப்போது நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லணும் என்று சொல்ல, அதற்கு மனோஜ் சொல்லு ரோகிணி என்று சொல்கிறார்.
அதைத்தொடர்ந்து ரோகிணி எனக்கு இதுக்கு முன்னாடி ஒரு தடவை கல்யாணம் ஆகிடுச்சு. ஒரு குழந்தையும் இருக்கு. பேரு க்ரிஷ். என் லைஃப் முழுக்க இனி உன்கூட வாழனும்னு நான் நினைக்கிறேன் என்று பேசிக் கொண்டிருக்கும் போது, எதிர்பக்கத்தில் போன் கட் ஆகி விடுகிறது. இதை கேட்டு ரோகிணி அதிர்ச்சியாக இருக்கும் நிலையில் தன்னுடைய பிஏவிடம் இதுக்கு மேல மனோஜின் முடிவு எதுவாக இருந்தாலும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறுகிறார்.

இப்படியாக பிரமோ முடிவடைந்திருக்கும் நிலையில் இப்போது சில புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அதில் ரோகிணியின் கழுத்தில் தாலி இருக்கிறது. அதே நேரத்தில் விஜயாவின் வீட்டில் ரோகிணியும் இருக்கிறார். அப்போது முத்துவின் தலையில் அடிபட்டு கட்டு போடப்பட்டிருக்கிறது. இதனால் ரோகிணி மனோஜிடம் சொல்லும்போது போன் கட் ஆகியிருக்கும். அதனால் ரோகிணி பேசியது மனோஜ்க்கு தெரியாமலேயே கல்யாணமும் முடிந்துவிடும்.
அதே நேரத்தில் எனக்கு சவாரி இருக்கு என்று போன முத்துவிற்கு ஆக்சிடென்ட் ஆகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இனி விஜயாவிற்கு ரோகிணிக்கு ஏற்கனவே கல்யாணம் ஆனது தெரிய வந்தால் என்ன மாதிரி பிரச்சனை வரும் என்று எதிர்பார்ப்பும் அனைவருக்கும் இருக்கிறது.
-
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
சிவகார்த்திகேயனால் 120 கோடி கடன்? தயாரிப்பாளர் கண்ணீர்... "இன்னும் 2 படம் பாக்கி இருக்கு" என உருக்கம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications