சிறகடிக்க ஆசை: குழந்தை விஷயத்தில் முத்து செய்த செயல்.. கதறி அழுத மீனா.. அருணுக்கு இனி தான் பிரச்சனை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 ஜூலை 30ஆம் தேதிக்கான எபிசோடில், குழந்தைக்காக முத்துவும் மீனாவும் பல வேண்டுதல்கள் வைத்து வருகின்றனர். அதே நேரத்தில் முத்து செய்த செயலை பார்த்து மீனாவும் கதறி அழுகிறார். அதுபோல ஆணவத்துடன் இருக்கும் அருணுக்கு முத்துவும் மீனாவும் சீதாவை வைத்து ஆப்பு வைக்கப் போகிறார்கள். என்ன நடந்தது என்று பார்ப்போம்.

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் முத்துவும் செல்வமும் முதியோர் இல்லத்துக்கு போய் அங்கே இருப்பவர்களுக்கு டிரஸ் கொடுத்து உதவுகிறார்கள். அதே இடத்திற்கு மீனா பூ வந்து கொடுக்கிறார். அப்போது அங்கே இருந்தவரிடம் மீனா பேசிக் கொண்டிருக்கும்போது, எனக்கு மட்டும் கொஞ்சம் வசதி இருந்துச்சுன்னா உங்களுக்கு முழு பூவையும் ப்ரீயா கொடுத்து விடுவேன்.

ஆனால் கொஞ்சம் பிரச்சனைகள் இருக்கிறதால தான் பாதி விலைக்கு கொடுக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது, அதற்கு அந்த நபர் பரவால்லாமா இருக்கட்டும்.. நிறைய பேருக்கு பணம் இருந்தாலும் கொடுக்கிற மனசு வரமாட்டேங்குது. உன்னை மாதிரி கஷ்டப்படுறவங்களுக்கு தான் அடுத்தவங்களுக்கும் உதவுவதற்கு மனசு வருது என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது உள்ளே ஒரு தம்பி கூட உன்னை மாதிரிதான் எல்லாருக்கும் துணிமணி எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கு என்று பெருமையாக சொன்னதும் மீனா அது யார் என்று பார்க்க உள்ளே வருகிறார்.

முத்துவுக்கு பாராட்டு

அங்கு முத்து எல்லோருக்கும் உதவிகள் செய்து கொண்டிருக்க, அவர்கள் எல்லோரும் முத்துவை பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். அப்போது முத்து நாளைக்கு என்னுடைய மனைவிக்கு ஒரு ஆபரேஷன் நடக்க இருக்கு அவளுக்கு எதுவும் ஆகக்கூடாதுன்னு நீங்க எல்லாரும் வேண்டிக்கோங்க என்று சொன்னதும் அதை கேட்டு மீனா அழுது கொண்டே முத்துவை வந்து கட்டி பிடிக்கிறார்.

Siragadikka Aasai serial Vijay TV

கதறி அழுத மீனா

அதற்கு பிறகு தான் இவர்கள் இருவரும் கணவன் மனைவி என்பது அங்கு இருப்பவர்களுக்கும் தெரிகிறது. எல்லாரும் அவர்கள் இருவருக்கும் ஆறுதல் சொல்கிறார்கள். அடுத்ததாக மீனா வீட்டில் சோகமாக உட்கார்ந்து இருக்கிறார். அப்போது அங்கு வந்த ரவி உங்களுக்கு நான் சாப்பாடு பண்ணி தரேன் என்று சமையல் வேலைகளை செய்கிறார். மீனா வழக்கம் போல தடுத்தாலும் ரவி நீங்க அமைதியா உட்காருங்க என்று சொல்லிவிட்டு சாப்பாடு செய்து கொண்டிருக்கிறார்.

விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் ஜெயமணி காலமானார்.. வருத்தத்தில் சின்னத்திரை உலகம்
அடுத்த கட்டத்தில் சீதாவை கராத்தே கிளாஸுக்கு முத்து மீனா கொண்டு வந்து விட்டிருந்த இடத்தில் ட்ரைனிங் எடுத்துக் கொண்டிருக்கிறார். அவரை பார்ப்பதற்காக மீனாவும் அங்கே போகிறார். பிறகு இருவரும் பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் அருண் இன்னொரு போலீஸ் உடன் அங்கே வருகிறார். கிளாஸ் வாசலில் கராத்தே கிளாஸுக்கு வந்தவங்க பைக்கை நிப்பாட்டி வைத்திருப்பதால் டிராபிக் ஆகிடுச்சு என்று அதை பற்றி விசாரிப்பதற்காக அருண் அங்கே வந்திருக்கிறார்.

Siragadikka Aasai serial Vijay TV

தப்பித்த சீதா

ஆனால் சீதா அருண் நம்மை தேடி வந்து இருப்பாரோ? என்று பயந்து ஒரு பொண்ணுக்கு பின்னாடி ஒளிந்து கொள்கிறார். அப்போது அருண் மாஸ்டரிடம் உங்க ஸ்டுடென்டால் தான் டிராபிக் ஆகி இருக்கு அதனால ஒரு மூணு பேர வர சொல்லி டிராபிக்ககை கிளீன் பண்ண வைங்க என்று சொல்ல, அதற்கு அந்த மாஸ்டர் நீங்களே யாரை வேணும்னாலும் கூட்டிட்டு போங்க என்று சொன்னதும் அருண் அங்கு இருந்தவர்களை பார்க்கிறார்.

நிர்வாண போட்டோ அனுப்ப சொல்லி தொந்தரவு.. காதலன் வெளியிட்ட வீடியோ! விஜய் டிவி பிரபலத்திற்கு நேர்ந்த கொடுமை
அப்போது சீதா ஒளிந்து கொள்கிறார். அதை கவனிக்காத அருண் வேற ஒரு மூணு பெண்களை கூட்டிக்கொண்டு போகிறார். அந்த சமயத்தில் மீனாவை பார்த்ததும் நீங்க என்ன இங்க வந்து இருக்கீங்க? என்று கேட்கிறார். அதற்கு மீனா நான் இங்கு பூ கொடுக்க வந்தேன் என்று சமாளிக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது. நாளைக்கு தான் மீனாவுக்கு ஆப்ரேஷன் நடக்கப் போகிறது. அதனால் டாக்டர் என்ன சொல்லப் போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+