சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன வார்த்தை.. ஆத்திரப்படும் சத்யா.. மீனாவிற்கு அதிர்ச்சி கொடுத்த முத்து
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜூன் 12ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் காணாமல் போயிருந்த மீனா மீண்டும் வீட்டிற்கு வந்திருந்த நிலையில் வீட்டில் பிரச்சனை வெடிக்கிறது. மறுபக்கத்தில் போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ் சொன்ன வார்த்தையால் சத்யா கோபப்படுகிறார்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் முத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு போயிருக்கும் போது அங்கே சத்யாவும் போலீஸ் புகார் கொடுத்து கொண்டிருக்க அப்போது செல்வம் சத்யாவை பார்த்ததும் நம்ம சத்யா இங்கே இருக்கிறான் என்று சொல்ல, சத்யா முத்துவை பார்த்து கோபப்படுகிறார். எங்க அக்காவை என்ன பண்ணுனீங்கன்னு சொல்லுங்க? உங்களால தான் எங்க அக்கா காணாம போயிருக்கு.

அவளை நீங்க என்ன பண்ணீங்க? என்று கேட்க, முத்து தேவையில்லாம பேசாத கை கால ஒடச்சிடுவேன் என்று திட்ட போலீஸ் எங்க முன்னாடியே இப்படி எல்லாம் பேசுவியா என்று முத்துவை திட்டுகின்றனர். பிறகு இது சாதாரண குடும்ப பிரச்சனை போல தான் இருக்கிறது. அதனால் காணாமல் போய் 24 மணி நேரம் கழித்து தான் போலீஸ் கம்ப்ளைன்ட் எடுக்க முடியும்.
நீங்க நாளைக்கு வாங்க என்று சத்யா மற்றும் முத்துவை போலீஸ் அனுப்பி வைக்க சத்யா போலீஸ் ஸ்டேஷனுக்கு வெளியே வந்த பிறகும் முத்துவிடம் உண்மையை சொல்லுங்க நீங்க எங்க அக்காவை என்ன பண்ணுனீங்க என்று கேட்க முத்து சும்மா போடா என்று சைலண்டாக பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பி வருகிறார்.
பிறகு மீனா பூ கொடுக்கும் இடங்களில் எல்லாம் முத்து விசாரிக்க எங்கேயுமே மீனா வரவில்லை என்று சொல்ல முத்து அங்கிருக்கும் ஒரு கோவில் முன்பு நின்று நல்லவங்களுக்கு எதுவும் தப்பா நடக்காதுன்னு எங்க பாட்டி சொல்லி இருக்காங்க. அதனால நம்புறேன் எனக்கு நீதான் மீனாவ திரும்பி வர வைக்கணும் அவ மேல நான் உயிரையே வைத்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு வருகிறார்.
அந்த நேரத்தில் வீட்டில் மீனா தண்ணி குடித்துக் கொண்டு இருக்க அதை பார்த்ததும் முத்து கோபத்தில் மீனாவை அடிக்க கை ஓங்க அப்போது அங்கு வரும் அண்ணாமலை என்ன பழக்கம் இது பொம்பளைய கை நீட்டி அடிக்கிறது என்று திட்ட, அதற்கு முத்து எங்க போனானு ஒரு வார்த்தை சொல்லிட்டு போயிருக்கலாமே? என்று கோபப்பட, இதற்கு விஜயா 2 அடி போடட்டும் அப்போ தான் அவ அடங்கி இருப்பா என்று சொல்ல, முத்து மீனாவே கட்டிப்பிடித்து நீ இல்லாம என் உயிரே போயிடுச்சு என்று கண்கலங்கி அழுகிறார்.
பிறகு எல்லோரும் மீனாவை பேச விடாமல் ஆளாளுக்கு கேள்வி கேட்க, கடுப்பான மீனா இப்ப நான் கொஞ்சம் பேசிக்கட்டுமா என்று சொல்லி என்னுடைய பிரண்ட் கோவில் பங்க்ஷன் கும்பாபிஷேகத்திற்கு மாலை கட்டுவதற்காக போனேன். அதையும் ஸ்ருதியிடம் சொல்லிவிட்டு தானே போனேன் என்று சொல்கிறார்.
அதாவது ஸ்ருதி ஏர் பட்ஸ் போட்டு போனில் பேசிக் கொண்டிருக்கும்போது மீனா கோயில் கும்பாபிஷேகத்திற்காக மாலை கட்டப் போவதாகவும் வர லேட் ஆகும், வீட்டில் இருக்கிறவங்க கிட்ட சொல்லிடுங்க என்று சொல்லிட்டு இருக்கும்போது ஸ்ருதி இதை கவனிக்காமல் போனில் சரி ஓகே என்று சொல்ல மீனா தனக்கு தான் சொல்வதாக நினைத்து கிளம்பி போகிறார்.

பிறகு மீனா சொன்னதை கேட்டதும் முத்து பல குரல் கிட்ட சொல்லிட்டு தான் போயிருக்க ஏண்டா பல குரல் இதை சொல்லல என்று ரவி இடம் கேட்க அதற்கு ரவி எனக்கு இப்போதான் தெரியும் என்று சொல்கிறார். அதை தொடர்ந்து வீட்டுக்கு வரும் ஸ்ருதி மீனா வந்துட்டீங்களா? முத்து உங்களை தேடிப் போனதா சொன்னாங்க, வீட்டுல சொல்லிட்டு போயிருக்கலாமே என்று சொல்ல எல்லாரும் ஷாக் ஆகின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
என் வாழ்க்கையே முடிஞ்சிடுச்சுனு நினைத்தேன்! அந்த நொடி நடந்த சம்பவம்.. நடிகர் முனிஷ்காந்த் உருக்கம்! இது பலருக்கு பாடம் -
சிறகடிக்க ஆசை அப்டேட்: சிந்தாமணி செய்த சூழ்ச்சி, ஜெயிலுக்கு போகும் முத்து- மீனா.. ஸ்ருதி செய்த சம்பவம் -
விஜயால் மது குடிக்காமல் இருக்க முடியாதா? யாரு சொன்னது? கண்முன்னே நடந்த சம்பவம்! சர்ச்சைக்கு அனு மோகன் பதிலடி -
சிறகடிக்க ஆசை: முத்து கண்டுபிடித்த உண்மை, சிக்கும் விஜயா! மீனாவுக்கு இனி தான் கம்பேக்.. செம சம்பவம் -
தமிழகத்தில் துரந்தர் 2 படத்தை தடை செய்ய நீதிமன்றத்தில் மனு.. இந்த ஒரு விஷயம் தான் பிரச்சனை! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications