சிறகடிக்க ஆசை: ரோகிணிக்கு வந்த போட்டோ.. வாசலில் நிறுத்தி விஜயா கேட்ட கேள்வி.. ஆடி போன குடும்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜூன் 15ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் வசீகரனை முத்து போலீசில் பிடித்துக் கொடுக்கிறார். அதே நேரத்தில் விஜயா புது டான்ஸ் கிளாஸ் தொடங்குகிறார். என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் வசீகரன் சிட்டியிடம் இருந்து தப்பித்து பைக்கில் போய் கொண்டிருக்கும் போது ரோட்டில் நடந்து வந்த பாட்டி மீது மோதிவிட்டு நிற்காமல் போகும் போது முத்துவும் செல்வமும் துரத்தி போகின்றனர். அதை பார்த்த சிட்டியும் பின்னாடியே போகிறார். அப்போது ஒரு கட்டத்தில் வசீகரனை பிடித்து முத்து அடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு போலீஸ் வருகின்றனர்.

அவர்களிடம் இவனை எனக்கு ஏற்கனவே தெரியும் சார். இவன் ஒருவாட்டி என் காரில் வரும்போது ஒரு பொண்ணை பற்றி தப்பு தப்பா பேசிட்டு இருந்தான். பிறகு அவனுக்கு ஆக்சிடென்ட் ஆகிட்டு இப்போ சரியான பிறகும் இன்னொரு பாட்டி மீது வண்டிய ஏத்திட்டு நிற்காமல் வந்துவிட்டான். இவனை புடிச்சுட்டு போங்க என்று போலீஸிடம் பிடித்துக் கொடுக்க அதை சிட்டி போட்டோ எடுத்து ரோகிணிக்கு அனுப்புகிறார்.

அந்த நேரத்தில் ரோகிணியும் மனோஜும் சாப்பிட்டு கொண்டிருக்கின்றனர். மனோஜ் ரோகிணியின் சாப்பாட்டை புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது ரோகிணி வசீகரன் பிரச்சனை என்ன ஆச்சுன்னு தெரியலையே என்று கோபத்தில் இருக்கும்போது வசீகரன் ஜெயிலுக்கு போகும் போட்டோவை பார்த்து சந்தோஷப்படுகிறார்.

அடுத்த கட்டத்தில் விஜயா வீட்டிற்கு வந்த பார்வதியிடம் விஜயா வீட்டில் எல்லா வேலைகளையும் நான் தான் பார்க்கிறேன். இங்க எல்லாரும் சொகுசா இருக்கிறாங்க என்று புலம்பிக் கொண்டிருக்கிறார். அப்போது வாசலில் மீனா பூக்கடை வைத்திருக்கும் போது கூட வீட்டு வேலையெல்லாம் செஞ்சா இப்போ பூவை கொண்டு தெருத்தெருவாக கொண்டு கொடுக்கிறேன் சொல்லி காலையில் போனா மதியம் சாப்பாட்டுக்கு தான் வீட்டுக்கு வர.

நான் தான் தேவையில்லாம அந்த கடையை காலி பண்ண வச்சிட்டேன் என்று உளறிவிட பார்வதி, நீதான் அந்த வேலையை பண்ணுனியா? அப்போ இத்தனை நாளா நீ என்கிட்ட கூட சொல்லலையே என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ஒரு பெண் பூ வேணும் என்று கேட்டு வர விஜயா அந்த பெண்ணை விரட்டிவிட அவர் பூக்கட்டிய பணத்தில் எவ்வளவு பெரிய வீடு கட்டி இருக்கீங்க ஆனா இப்படி திமிரா பேசுறீங்க என்று நக்கலாக சொல்லிவிட்டு போக இதனால் விஜயா மேலும் கோபத்தில் இருக்கும்போது மீனா வீட்டிற்கு வருகிறார்.

மீனா வரும்போது கூடவே ரோகிணியும் வீட்டிற்கு வருகிறார். அப்போது விஜயா நின்னுடி நீ திட்டம் போட்டு தான் எல்லாம் செஞ்சுட்டு இருக்கியா? என்று திட்ட பதறிப்போன ரோகிணி ஆன்ட்டி நான் என்ன பண்ணினேன் என்று சொல்ல, நீ இல்லாம்மா நீ வீட்டுக்குள்ள வா ஆனா அவா வரக்கூடாது என்று வாசலில் நிற்க வைத்து மீனாவை அவமானப்படுத்தி திட்டுகிறார். உன்னுடைய போன் நம்பரை கொடுக்க சொல்லி எல்லாரும் என்கிட்ட கேக்குறாங்க நான் என்ன உனக்கு அசிஸ்டன்ட்டா என்று கேட்க,

அதற்கு மீனா நீங்க ஸ்ருதி, ரோகிணி நம்பரை வச்சிருப்பீங்க நான் ஏழை வீட்டு பொண்ணு தான அதனால என் நம்பரை வச்சிக்க மாட்டீங்க. நான் வேணா ஒரு நோட்டுல என்னுடைய நம்பரை எழுதி வைக்கிறேன். யாராவது கேட்டால் கொடுங்க என்று சொல்ல, அதற்கு கோபமான விஜயா நான் உனக்கு வேலைக்காரியா? வீட்டிலிருந்தா இப்படித்தான் எல்லாரும் வேலை சொல்லுவீங்களா? நான் நாளிலிருந்து ரோகிணி உன்னுடைய பார்லருக்கு வரேன் என்று சொல்ல ரோகிணி பதறி போய் ஆன்ட்டி நீங்க எதற்கு அங்க வரீங்க அங்க உங்களுக்கு போர் அடிக்கும் என்று சொல்கிறார்.

அப்போ நான் மனோஜ் கடைக்கு வரேன் அங்கு கல்லாப்பெட்டியில் உட்கார்ந்து இருக்கிறேன் என்று விஜயா சொல்ல, அதற்கு ரோகிணி அதெல்லாம் உங்களுக்கு செட்டாகாது உங்களுக்கு தெரிஞ்ச வேலையை பாருங்க உங்களுக்கு தான் பரதநாட்டியம் நல்லா ஆட தெரியுமே நீங்க ஒரு கிளாஸ் வைக்கலாம் என்று சொல்ல பார்வதி என்னுடைய வீட்டு மொட்டை மடியில் நான் இடம் தரேன் என்று சொன்னதும் அதை நினைச்சு விஜயா ரொம்பவே சந்தோஷப்படுகிறார்.

அதைத் தொடர்ந்து முத்து ரவி ஸ்ருதி எல்லோரும் வீட்டிற்கு அவசர அவசரமாக வர விஜயா டான்ஸ் கிளாஸுக்கு ரெடியாகி கொண்டிருக்கிறார். எல்லோரும் விஜயா கதவை பூட்டிக்கொண்டு ரூமுக்குள் என்ன செய்கிறார் என்று ஆர்வமாக காத்திருக்கிறார்கள். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+