சிறகடிக்க ஆசை: விஜயாவிற்கு பார்வதி வைத்த ஆப்பு.. கிளாஸ் தொடங்கிய முதல் நாளே வந்த பிரச்சனை!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜூன் 18ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் விஜயா டான்ஸ் கிளாஸை தொடங்கியிருந்த நிலையில் முதல் நாளே அவருக்கு பிரச்சனை மேல பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது. அதுவும் கூட இருக்கும் பார்வதியும் விஜயாவிற்கு பிரச்சனை கொடுத்திருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ஸ்ருதியின் அம்மா விளக்கேற்றி வைத்துவிட்டு நீங்க பரதம் ஆடி நான் பார்த்ததே இல்லை என்று சொன்னது விஜயா குரு வணக்கம் செய்து பரதநாட்டியம் ஆடி காட்ட எல்லோரும் கைதட்டி விஜயாவை பாராட்டுகின்றனர். அதைத்தொடர்ந்து எல்லோரும் கிளம்பி போனதும் விஜயா ஒரு நூறு அட்மிஷன் வந்துட்டா போதும் என்று ஆவலோடு காத்திருக்க அங்கே தண்ணீர் கேன் போட வந்தவர்களும், மளிகை சாமான் கொடுக்க வந்தவர்களும் தான் வந்து கொண்டே இருக்க விஜயா ஏமாற்றம் அடைகிறார்.

பிறகு ஒருவர் வந்து இங்கே பரதநாட்டியம் கிளாஸ் எடுக்க போறீங்களா? என்று கேட்க பார்வதி இவர் கரண்ட் பில்காரர் போல வேறு ஏதோ பில்லு கட்ட சொல்ல போறாங்களோ என்று பயந்து அப்படி எல்லாம் எதுவும் சொல்லிக் கொடுக்கல என்று சொல்ல, அவர் மகளிடம் இங்கு டான்ஸ் கிளாஸ் எடுக்கலையாம் உன்னை வேற எங்கேயாவது சேர்த்து விடுகிறேன் என்று சொல்ல, அதிர்ச்சியான விஜயா வீட்டில் இருந்து ஓடி வந்து இங்கே டான்ஸ் கிளாஸ் தான் எடுக்கிறோம். நான் தான் பரதநாட்டிய டீச்சர் என்று சொல்கிறார்.
இதற்கு முன்பு இது கமர்சியல் ஏரியா இப்போ நீங்க பீஸ் வாங்குவதால் மூன்று மடங்கு அதிகமாக கரண்ட் பில் கட்டணும் என்று அதிர்ச்சி கொடுத்துவிட்டு செல்கிறார். அதை பார்த்து பார்வதி கரண்ட் பில் அதிகமாக வருமா என்று புலம்பி கொண்டு இருக்க, விஜயா பசங்க சேர்ந்தா போதும் நிறைய சம்பாதிக்கலாம். நானே கரண்ட் பில் கட்டுகிறேன் என்று சமாளிக்கிறார்.
பிறகு ஒருவர் வந்து இங்கே பரதநாட்டியம் கிளாஸ் எடுக்க போறீங்களா? என்று கேட்க பார்வதி இவர் கரண்ட் பில் காரர் போல வேறு ஏதோ பில்லு கட்ட சொல்ல போறாங்களோ என்று பயந்து அப்படி எல்லாம் எதுவும் சொல்லிக் கொடுக்கல என்று சொல்ல, அவர் மகளிடம் இங்கு டான்ஸ் கிளாஸ் எடுக்கலையாம் உன்னை வேற எங்கேயாவது சேர்த்து விடுகிறேன் என்று சொல்ல, அதிர்ச்சியான விஜயா வீட்டில் இருந்து ஓடி வந்து இங்கே டான்ஸ் கிளாஸ் தான் எடுக்கிறோம். நான் தான் பரதநாட்டிய டீச்சர் என்று சொல்கிறார்.

அதற்கு வந்த நபர் ஆளாளுக்கு ஒவ்வொன்னா பேசுறீங்க இது சரியா தெரியல. நாங்க நல்லா கிளாஸா பார்த்து சேர்த்துக்கிறோம் என்று கிளம்பி செல்ல பார்வதி மீது விஜயா கோபப்படுகிறார். பிறகு வீட்டிற்கு வந்த விஜயா சாப்பிடாமல் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு இருக்க, அங்கு வரும் அண்ணாமலை என்னாச்சு என்று கேட்டது கிளாஸ்ல யாருமே சேரல ஒரு புழு பூச்சி கூட பரதம் கத்துக்க வரல என்று சொல்ல,
அதுக்கெல்லாமா நீ பரதம் கத்து தர என்று அண்ணாமலை கலாய்க்கிறார். பிறகு முத்து வீட்டுக்கு வந்து விஜயாவை பார்த்து என்ன நாட்டிய சிகாமணி முகத்துல சந்தோஷமே காணோம் என்று கேட்க அண்ணாமலை உங்க அம்மாவோட கிளாஸ்ல ஒருத்தர் கூட சேரவில்லையாம் என்று சொன்னதும் என்னப்பா 40 பேர் வருவாங்க 80 ஆயிரம் சம்பாதிக்கலாம் என்று பெருமையாக பேசிட்டு இருந்தாங்க என்று சொல்ல,
விஜயா இங்கே யாருக்கும் பரதத்தோட அருமை தெரியல என்று சொன்னதும் முத்து மீண்டும் விஜயாவை கலாய்த்து கொண்டிருக்கிறார். அதற்கு விஜயா உனக்கு அதுல எத்தனை பாவம் இருக்குன்னு தெரியுமா? என்று முத்துவிடம் கேட்க, முத்து நீங்கதான் இப்ப பார்க்க பாவமா இருக்கீங்க என்று கிண்டல் செய்கிறார். அதற்கு விஜயா எல்லாத்துக்கும் காரணம் மீனாதான் என்று திட்டி விட்டு போகிறார்.
பிறகு மீனா எனக்கு ஒரு நாள் பூ விற்கலாம் கூட கஷ்டமாக இருக்கும். அத்தைக்கு அப்படி தானே இருக்கும்? என்று வருத்தப்பட முத்து அவங்க கஷ்டப்படாமல் இருக்க ஒரு ஐடியா இருக்கு என்று சொல்கிறார். பிறகு மறுநாள் விஜயா பார்வதி வீட்டுக்கு செல்ல அங்கு வைக்கப்பட்ட பேனர் எல்லாம் காணாமல் போயிருக்கிறது. அது பற்றி பார்வதியிடம் விஜயா கேட்க, நேற்றே இபிகாரர் வந்து பில் அதிகமாக கட்டணும்னு சொல்லிட்டு போயிருக்காரு

இன்னைக்கு வேற யாரும் வந்து பிரச்சனை பண்ணிட கூடாதுன்னு தான் அதை எல்லாம் எடுத்து வேற இடத்தில வச்சுட்டேன் என்று சொல்ல விஜயா அப்போ இங்க டான்ஸ் கிளாஸ் எடுக்குறோம்னு யாருக்குமே தெரியாதே என்று சொல்ல, நேற்று முழுக்க வெளியே தானே இருந்தது யாருமே வரலையே.. இங்க வரணும்னு யாராவது இருந்தாங்கன்னா வருவாங்க என்று அசால்டாக பதில் சொல்கிறார்.
இதனால் விஜயா வீட்டுக்குள் வருத்தமாக இருக்கும்போது ஹாலிங் பெல் சத்தம் கேட்டதும் ஓடி வந்து விஜயா கதவை திறக்க அங்கு முத்துவும் மீனாகவும் தட்டில் பழங்களோடு காத்திருக்கின்றனர். இதை பார்த்து விஜயா அதிர்ச்சி அடைகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
என் வாழ்க்கையே முடிஞ்சிடுச்சுனு நினைத்தேன்! அந்த நொடி நடந்த சம்பவம்.. நடிகர் முனிஷ்காந்த் உருக்கம்! இது பலருக்கு பாடம் -
சிறகடிக்க ஆசை அப்டேட்: சிந்தாமணி செய்த சூழ்ச்சி, ஜெயிலுக்கு போகும் முத்து- மீனா.. ஸ்ருதி செய்த சம்பவம் -
விஜயால் மது குடிக்காமல் இருக்க முடியாதா? யாரு சொன்னது? கண்முன்னே நடந்த சம்பவம்! சர்ச்சைக்கு அனு மோகன் பதிலடி -
சிறகடிக்க ஆசை: முத்து கண்டுபிடித்த உண்மை, சிக்கும் விஜயா! மீனாவுக்கு இனி தான் கம்பேக்.. செம சம்பவம் -
தமிழகத்தில் துரந்தர் 2 படத்தை தடை செய்ய நீதிமன்றத்தில் மனு.. இந்த ஒரு விஷயம் தான் பிரச்சனை! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications