சிறகடிக்க ஆசையில் மாறிய கதைக்களம்.. இதை கவனிச்சீங்களா? இது நல்ல முடிவு இல்லையே! இன்றும் இப்படியா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜூன் 19ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதே நேரத்தில் இந்த சீரியலில் ரோகிணிக்கு சாதகமாக கதை போய்க் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மீனா எல்லா இடத்திலும் அவமானப்பட்டு கொண்டே இருக்கிறார். கதாநாயகனாக இருக்கும் முத்துவும் தியாக சுடராக மாறிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் வீட்டு வாசலில் மீனாவும் முத்துவும் நின்று கொண்டு பரதம் கற்று கொள்ள இருப்பதாக சொல்ல விஜயா பரதத்தை நீங்க எல்லாம் கத்துக்க முடியாது. இது பூ கட்டுறது மாதிரியும் கார் ஓட்டுவது மாதிரியே ஈஸியானது கிடையாது. இது ஒரு கலை என்று பேச அதற்கு முத்துவும் மீனாவும் பூவையும் காரையும் கை காலை வச்சுதான ஓட்டுறோம். பரதத்தையும் கை காலை வச்சி தான் ஆட போறோம் என்று சொல்கின்றனர்.

அதோடு நாங்கள் ஆடி காட்டுகிறோம் பாருங்க, அப்புறம் சொல்லி கொடுங்க என்று சொல்லி டான்ஸ் ஆட பார்வதியும் கூட சேர்ந்து ஆடினதும் விஜயா பாட்டை நிறுத்தி இதிலேயே தெரியுது உங்களுக்கெல்லாம் பரதம் வராது என்று திட்டி வெளியே போக சொல்ல, அதற்கு முத்து நீங்க ஆட வராதுன்னு எப்படி சொல்லலாம்? நீங்க சொல்லி கொடுங்க அதுக்கு அப்புறம் ஆட வரலைன்னா விட்டுடலாம் என்று சொல்ல விஜயாவும் மீனாவும் சேர்ந்து பரதமாடுகின்றனர்.
அப்போது விஜயாவுக்கு கழுத்து சுளுக்கு பிடித்ததும் அப்படியே நின்றுவிட, பார்வதி நீங்க வீட்டுக்கு போங்க நான் சுளுக்கு சுந்தரியை கூட்டிட்டு வரேன். அவங்க நல்லா சுளுக்கு எடுப்பாங்க என்று அனுப்பி வைக்க விஜயா காரை விட்டு இறங்க மாட்டேன் யாராவது பார்த்தா என்ன ஆகிறது என்று சொல்ல முத்துவும், மீனாவும் போர்வையை விரித்து விஜயாவை மறைத்தபடி வீட்டிற்குள் கூட்டிக்கொண்டு செல்கின்றனர்.
இதை எடுத்து அண்ணாமலை இதுக்குத்தான் ஓவரா ஆடக்கூடாது என்று கலாய்க்கிறார். அதற்கு விஜயா வழக்கம் போல மீனாதான் இதற்கு காரணம் என்று மீனாவை கூப்பிட்டு வைத்து திட்டுகிறார். இப்போ உனக்கு சந்தோசமா நானும் ஒரு தொழில் செய்து பிழைச்சிடுவேனு உனக்கு பொறாமை அதான் என்னை இப்படி உட்கார வச்சுட்டா என்று மீனாவை திட்டுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
சிறகடிக்க ஆசை சீரியலில் காமெடி மற்றும் செண்டிமெண்ட் காட்சிகள் இருந்தாலும் ஆரம்பத்தில் இருந்து மீனா மற்றும் முத்து எல்லா இடத்திலும் அவமானப்பட்டு கொண்டே இருக்கிறார்கள். ஆனாலும் மீண்டும் மீண்டும் விஜயாவிடம் அவமானப்படுவது போலவே கதை போய்க் கொண்டிருப்பதால் இந்த சீரியலிலும் கிரின்ச் கூடிக்கொண்டே இருக்கிறது.
ஒவ்வொரு முறையும் ரோகிணி வீட்டில் மாட்டாமல் தப்பித்து விடுகிறார். அதுபோல என்ன நடந்தாலும் அதற்கு காரணம் மீனாதான் என்று விஜயா சொல்லிக் கொண்டிருப்பதும் மீனா அவமானப்பட்டாலும் வீட்டு வேலைகளை மீண்டும் மீண்டும் செய்வதை பார்க்கும் போதும் கடுப்பாக இருக்கிறது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
முத்துவின் விபரீத முடிவு.. சிந்தாமணியின் சூழ்ச்சியை முறியடிக்க முடியுமா? சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications