சிறகடிக்க ஆசை: கிருஷ் என் மகன் என்று ஒத்துக்கொண்ட ரோகிணி.. மனோஜ் கேட்ட கேள்வி.. முத்து செய்த செயல்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜூன் 1ம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் கிரிஷை முத்து மற்றும் மீனா வீட்டிற்கு கூட்டிட்டு வர அதனால் ரோகிணி பிரச்சனையில் சிக்குகிறார். அதுபோல ரோகிணியின் அம்மா பேசிய வார்த்தையை கேட்டு முத்துவிற்கு சந்தேகம் வருகிறது. என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ஹாஸ்பிடலில் வைத்து கிரிஷின் அத்தை, அம்மாவையும் இந்த சின்ன பையனையும் விட்டுட்டு வெளிநாட்டில் என்ன வேலை தான் பாக்குதுன்னு தெரியல என்று முத்து திட்டிக் கொண்டிருப்பதை பார்த்து ரோகிணி கோபமாகி அடுத்தவங்க என்ன பண்ணுனா உங்களுக்கு என்ன? என்று கேட்க, முத்துவும் மீனாவும் அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு நான் போகிறேன் என்று சொல்லி அங்கிருந்து ரோகிணி கிளம்பி வந்தது ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

அப்போது டாக்டர் வந்து இன்னும் இரண்டு நாளில் கட்டு பிரித்து விடலாம் என்று சொன்னதும் இதைப் பற்றி ரோகிணி இடம் சொல்ல வேண்டும் என்று அவருடைய அம்மா தனியா போனை எடுத்துட்டு போய் பேசிக்கொண்டு இருக்கும் போது முத்து பில்லை கட்டிவிட்டு வீட்டிற்கு போவதற்கான எல்லாம் ஏற்பாடுகளையும் செய்கிறார்.
அப்போது ரோகிணியின் அம்மா நாங்க இங்கேயே இருக்கோம், இல்லன்னா ஏதாவது ஹோட்டலில் தங்கிக்கிறோம் என்று சொன்னாலும் கேட்காமல் முத்துவும் மீனாவும் வீட்டிற்கு கூட்டிட்டு வருகின்றனர். மறுபக்கத்தில் ரோகிணி ஹாஸ்பிடலில் என்ன ஆச்சுன்னு தெரியலையே என்று பதற்றத்தோடு இருக்க, அந்த நேரத்தில் மீனா வீட்டிற்கு வருகிறார். மீனாவை பார்த்ததும் மீனாவிடம் கேட்கலாம் என்று ரோகிணி யோசித்துக் கொண்டிருக்கும் போது அங்கு ரோகிணியின் அம்மாவோடு முத்து கிருஷை தூக்கிக்கொண்டு வருகிறார்.

அதை பார்த்து விஜயா இவங்கள எதுக்காக இங்க கூட்டிட்டு வரீங்க என்று திட்ட அதற்கு முத்துவும் மீனாவும் ஹாஸ்பிடலில் நடந்த விஷயங்களை சொல்லிக் கொண்டு இருக்கின்றனர். உடனே விஜயா இந்த வீட்டில் தங்கறதுக்கு எங்க இடம் இருக்கு? இது என்ன சத்ரமா? எல்லாரும் இங்க தங்க என்று திட்ட, அதற்கு அண்ணாமலை விஜயாவை திட்டுகிறார்.
அப்போது மனோஜ் நான் ரோகிணியை காணாமல் போன போது இவங்க வீட்டுக்கு போய் இருந்தோம். அப்போ இந்த அம்மா உறுதியாக ரோகிணி வருவாங்கன்னு சொன்னாங்க. அதுபோலவே ரோகிணி மீண்டும் வந்துட்டா. இந்த அம்மா ஒரு நாளைக்கு இங்கே இருந்துட்டு போகட்டும் என்று சொல்ல ரோகிணியும் இந்த ரூம்லையே தங்கட்டும் அதான் மனோஜே சொல்லுறாரே என்று சொல்ல,

விஜயா இந்த பையனை இங்க தங்க வச்சா இதை சொல்லி இந்த பையனோட அம்மா அப்பா எல்லாரும் இங்க வந்து தங்கி விடுவாங்களா? என்று கேட்க, அதற்கு மீனா இந்த பையனுக்கு அம்மா அப்பா இல்லை என்று சொன்னதும் அண்ணாமலை உங்களுக்கு ஒரு பொண்ணு இருக்குன்னு சொன்னீங்களே என்று கேட்க, அந்த பொண்ணு துபாயில் இருக்கிறா என்று ரோகிணியின் அம்மா சொன்னதும் அதை கேட்டு முத்து அதிர்ச்சி அடைகிறார்.
அதோடு முத்துவுக்கு சந்தேகமும் வருகிறது. ஆனாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் குழந்தையை ரூமுக்குள் தூங்க வைத்துக் கொண்டு இந்த அம்மா இன்னைக்கு ஒரு நாளும் இந்த வீட்லதான் இருப்பாங்க என்று சொல்லி விட்டு போகிறார். பிறகு ரோகிணியிடம் விஜயா இந்த அம்மாவ பாக்குறதுக்கு ஊமைகொட்டை மாதிரி இருந்து எல்லா விஷயத்தையும் சாதிச்சிடும் போல தெரியுது. அது முழியை பார்த்தாலே சரியா தெரியல, இந்த பையன் வேற தூக்கிட்டு வருது அது என்ன பொறப்புன்னு தெரியலையே என்று சொன்னதும் ரோகிணி அத்த நிறுத்துங்கள் என்று கத்துகிறார்.

பிறகு நீங்க பேசுறது அந்த அம்மாவுக்கு கேட்டிட போகுது என்று சமாளிக்கிறார். அதற்கு விஜயா உனக்கு நாளைக்கு வரைக்கும் டைம் தரேன். நீ தான் ஏதாவது பிளான் போட்டு இந்த பையனையும் அவங்க பாட்டியையும் இந்த வீட்டை விட்டு வெளியே துரத்தனும் என்று சொல்லிவிட்டு போக அதை நினைத்து யோசித்தபடியே ரோகிணி நிற்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
இதைதொடர்ந்து நாளைக்கு என்று வெளியான வீடியோவில், ரோகிணி தூங்கிக் கொண்டிருக்கும்போது கிரிஷ் அத்தை நீங்க ஏன் என்னை பார்க்க வரல என்று சொல்வது போல கனவு கண்டு புலம்புகிறார். பிறகு தன்னுடைய அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்கும்போது கிரிஷ் என்னுடைய பையன் தான். நான் தன் அவனை பெத்தெடுத்தேன் என்று சொல்லிக் கொண்டிருப்பதை கிரிஷ் கேட்டு விடுகிறார். இனி என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.













Click it and Unblock the Notifications