சிறகடிக்க ஆசை: வீடியோ காலால் சந்தேகப்படும் மனோஜ்.. ரோகிணியை மாட்ட வைக்க முத்து செய்த செயல்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜூன் 22 ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ரோகிணியின் மாமா விஷயத்தில் முத்து மற்றும் மீனா சந்தேகப்பட அதை சரி செய்ய வேண்டும் என்று ரோகிணி அடுத்த பிளான் போடுகிறார். என்ன நடந்தது என்பது விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் முத்துவும் மீனாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அதை ரோகிணி ஒட்டு கேட்டு வருகிறார். அப்போது முத்து ரோகிணியின் மாமா விஷயத்தில் எனக்கு ஏற்கனவே ஆரம்பத்தில் இருந்து சந்தேகம் இருக்கிறது. நாம ஊரில் ரோகிணியின் மாமாவோடு எடுத்த போட்டோவை வைத்து என்னுடைய நண்பர்களிடம் அவர் யார் என்று விசாரிக்கிறேன் என்று சொல்கிறார். இதைக் கேட்ட ரோகிணி இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்.

பிறகு அடுத்த நாள் காலையில் ஸ்ருதி மற்றும் ரவி இருவரும் லேட்டாக எழுந்தது பற்றி விஜயா கேட்டுக் கொண்டிருக்க, அதற்கு ரோகிணி நாங்க நைட் கேம் விளையாடிட்டு இருந்ததால சரியா தூங்கல என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது ரோகிணி மலேசியா மாமாவாக நடிக்கும் பிரவுன் மணியிடம் வீடியோ காலில் பேசிக்கொண்டு வருகிறார். பிறகு விஜயா, அண்ணாமலை எல்லோரும் பிரவுன் மணியிடம் போனில் பேசுகின்றனர்.
எல்லோரும் அவர் துபாயில் இருப்பதாக நினைத்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது மனோஜ்க்கு இன்னும் அஞ்சு லட்சம் அனுப்பி இருக்கிறேன் என்று அவர் சொல்ல அந்த நேரத்தில் அங்கு வந்த முத்து போனை பிடுங்கி துபாயில் நீங்க எங்க இருக்கீங்க என்று அவர் கேட்க அதற்கு அவர் பதில் சொல்ல முடியாமல் பிரவுன் மணி தடுமாறிக் கொண்டிருக்க, ரோகிணி மாமாவுக்கு வேலை இருக்கு என்று போனை வாங்கி போனை கட் பண்ணி விடுகிறார்.

பிறகு முத்துவும் மீனாவும் ரூமிற்கு போய் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது மீனா எனக்கு இப்பதான் சந்தேகம் தீர்ந்துச்சு. அவர் துபாய்ல தான் இருக்காரு என்று மீனா சொல்ல, இல்ல அவர் இங்கே தான் இருந்திருக்கிறார்... நீ பார்த்தது அவரைத்தான். இவ்வளவு நாள் போன் பண்ணாதவர் இப்ப திடீர்னு போன் பண்ணி இருக்கிறார். எனக்கு ரோகிணி மேல இன்னும் சந்தேகம் அதிகரிக்கிறது.
நீ நேற்று ரோகிணியிடம் உங்க மாமாவை பார்த்தேன் என்று சொல்ல அதைக் கேட்டு ரோகிணி முகம் மாறிடுச்சுனு சொன்னியே அது போல தான் இன்று நான் அவருடைய அட்ரஸை கேட்கும்போதும் ரோகிணியின் நடவடிக்கை சரியா இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் மனோஜ் திடீர்னு ஏன் மாமா கால் பண்ணுனார் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வரும் ரோகிணியிடம் அது பற்றி கேட்க ரோகிணி நான் தான் அவரை கால் பண்ண சொன்னேன்.
பணம் தந்த பிறகு அவர் எதுவும் பேசலன்னா வீட்ல சந்தேகப்படுவாங்க இல்ல, அதனால தான் அவரை பேச வச்சேன் என்று சமாளிக்கிறார். அப்போது உங்க அப்பா இன்னும் ஒரு மாசத்தில் வந்துருவாருல என்று கேட்க, அதற்கு ரோகிணியும் ஆமா என்று சொன்னதும் மலேசியாவில் அப்போ இன்னொரு பிரான்ச் ஓபன் பண்ணி விடலாம் என்று பேராசைப்படுகிறார்
இதைத் தொடர்ந்து ரோகிணி வீட்டிற்கு சென்று இப்போதைக்கு எல்லோரும் நம்பிவிட்டார்கள் என்று பேசிக் கொண்டிருக்கும் போது அங்கு பிரவுன் மணி வருகிறார்.

மேலும் அப்படியே நான் துபாயில் இருக்கிற மாதிரி வித்யா எடிட் பண்ணிட்டாங்க. என்னாலயே நம்ப முடியல, ஆனா ரொம்ப நாளைக்கு இந்த பொய் நினைக்காது. எப்படியும் ஒரு நாள் மாட்டா தான் போறீங்க. அதற்கு முன்பு உண்மையை சொல்லுங்க என்று ரோகிணிக்கு அட்வைஸ் செய்து விட்டு போகிறார். இதனால் ரோகிணியும் யோசித்து விட்டு மனோஜ் என் பக்கம் இருக்கணும் என்றால் அதற்கு ஒரு குழந்தை வேண்டும் என்று அடுத்த திட்டம் போடுகிறார்.
அதைத் தொடர்ந்து ஸ்ருதி ஒரு வீடியோவை பார்த்து அதில் இருப்பது போல தன்னைத் தூக்கிக் கொண்டு வீடு முழுக்க சுத்த வேண்டும் என்று சொல்ல ரவியும் வேறு வழி இல்லாமல் சரி என்று சம்மதம் சொல்லி தூக்கி சுற்றுகிறார். அந்த நேரத்தில் அங்கு வந்த முத்துவும் மீனாவும் என்னவென்று விசாரிக்க அதற்கு ஸ்ருதி நான் ரவிக்கு டாஸ்க் கொடுத்திருக்கிறேன் என்று சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
என் வாழ்க்கையே முடிஞ்சிடுச்சுனு நினைத்தேன்! அந்த நொடி நடந்த சம்பவம்.. நடிகர் முனிஷ்காந்த் உருக்கம்! இது பலருக்கு பாடம் -
சிறகடிக்க ஆசை அப்டேட்: சிந்தாமணி செய்த சூழ்ச்சி, ஜெயிலுக்கு போகும் முத்து- மீனா.. ஸ்ருதி செய்த சம்பவம் -
விஜயால் மது குடிக்காமல் இருக்க முடியாதா? யாரு சொன்னது? கண்முன்னே நடந்த சம்பவம்! சர்ச்சைக்கு அனு மோகன் பதிலடி -
சிறகடிக்க ஆசை: முத்து கண்டுபிடித்த உண்மை, சிக்கும் விஜயா! மீனாவுக்கு இனி தான் கம்பேக்.. செம சம்பவம் -
தமிழகத்தில் துரந்தர் 2 படத்தை தடை செய்ய நீதிமன்றத்தில் மனு.. இந்த ஒரு விஷயம் தான் பிரச்சனை! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications