சிறகடிக்க ஆசை: வார்த்தையை விட்ட விஜயா.. அடிதடியில் இறங்கிய முத்து,மனோஜ்.. அண்ணாமலை எடுத்த முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜூன் 24ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் அண்ணாமலை வீட்டில் மீண்டும் ரூம் பிரச்சனை வெடிக்க அண்ணாமலை பண விஷயத்தில் கணக்கு பார்க்கத் தொடங்கி இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ரவி ஸ்ருதியை தூக்கி வீட்டிற்குள் சுற்றிக் கொண்டிருப்பதை பார்த்ததும் முத்து என்னாச்சிடா பல குரல் எதுவும் கீழே விழுந்துட்டா என்று கேட்க, இல்லை என்று சொல்லி தான் போனில் பார்த்த வீடியோவை பற்றி ஸ்ருதி சொல்லி அதுபோல ரவியை செய்ய சொல்லி இருப்பதாக சொன்னதும், மீனா இதுபோல நீங்க எப்பவாவது பண்ணி இருக்கீங்களா? என்று கேட்க, மீனாவை முத்து தூக்கிக்கொண்டு 30 ரவுண்டு சுற்றுவதாக சொல்கிறார்.

அந்த நேரத்தில் அங்கு வந்த மனோஜும் அதுபோல ரோகிணியை வீட்டிற்குள் சுற்றிக் கொண்டிருக்கிறார். அப்போது அண்ணாமலையும் விஜயாவும் வீட்டிற்கு வர இதை பார்த்து கடுப்பான விஜயா நடு ஹால்ல என்னடா பண்ணிட்டு இருக்கீங்க? யாராச்சும் பார்த்தால் என்ன ஆகிறது என்று திட்டுகிறார். அதற்கு முத்து நாங்க எங்க பொண்டாட்டிங்கள தானே தூக்கிக்கிட்டு சுத்துறோம் என்று சொல்ல, விஜயா ரூம்ல என்ன வேணாலும் பண்ணி தொலைய வேண்டியதுதானே என்று சொல்ல அப்படியே ரூம் பிரச்சனை பஞ்சாயத்து வருகிறது.
மனோஜ் எனக்கு ரூம் வேணும் நான் பிசினஸ் பண்ணுகிறேன். என்னால வெளியே படுத்து கஷ்டப்பட முடியாது. எனக்கு ரெஸ்ட் எடுக்கணும் என்று சொல்ல, முத்து வேலை செஞ்சா டயர்ட் ஆகத்தான் இருக்கும் என்று பதிலடி கொடுத்ததும் ரவி இவன் மட்டும்தான் வேலை செய்கிறானா? நானும் முத்துவும் வேலை செய்யலையா? என்று கேட்க, அப்படியே பிரச்சனை வெடிக்கிறது. இதனால் முத்து எங்களுக்கு ரூமே வேண்டாம் என்று கோபத்தில் சொல்லிவிட விஜயா இப்பவாவது புத்தி வந்துச்சு என்று நக்கலாக பேசுகிறார்.
அண்ணாமலை நோட்டும் பேனாவும் எடுத்துக் கொண்டு வரச் சொல்லி எல்லாரும் எவ்வளவு பணம் வீட்டிற்கு தர போறீங்க என்று கணக்கெடுக்கிறார். மனோஜ் ரோகிணி கைகாட்டுவதை பார்த்து மூவாயிரம் என்று சொல்ல, முத்து மீனா கைகாட்டியதை பார்த்து பத்தாயிரம் என்று சொல்கிறார். ரவி நானும் பத்தாயிரம் தரேன் என்று சொல்ல மீனா நானும் வேலை பார்க்கிறேன் நானும் மாசம் 2000 தரேன் என்று சொல்ல, அதை பார்த்த ரோகிணி நான் 5000 தரேன் என்று சொல்ல, ஸ்ருதி நான் பத்தாயிரம் தரேன் என்று சொல்கிறார்.
பிறகு மொட்டைமாடியில் வீடு கட்ட அப்பா எதுக்கு பணம் கேட்கிறார்? அப்பா அம்மாவ கூட்டிட்டு தனியே போக போகிறாரா என்று மனோஜ் சொல்ல, முத்து அவரை அடிக்க ஓடுகிறார் நான் உயிரோடு இருக்கிற வரைக்கும் அப்பாவை தனியா விடமாட்டேன் என்று சொல்கிறார். ரவி பேசாம இந்த வீட்டை விற்றுவிடலாம் ஒரே அபார்ட்மெண்ட்ல நாலு பிளாட் வாங்கி விடலாம் என்று ஐடியா கொடுக்க ரூம் இல்லாத நானே வெளியே போகணும்னு யோசிக்கல நீங்க ஏன்டா இப்படி இருக்கீங்க என்று முத்து திட்டுகிறார்.
அப்போது மனோஜ் நான் சீக்கிரமா பெரிய பிசினஸ்மேன் ஆகிடுவேன். என்னால் இந்த வீட்டுல இருக்க முடியாது என்று சொல்ல முத்து மாமனார் வீட்டு பணத்தை வச்சுட்டு ஏன்டா இந்த பேச்சு பேசுற என்று கேட்க, உனக்கு பொறாமை உன் மாமனார் வீட்ல ஒன்னும் தரல அதனால நீ இப்படி பேசுற என்று மீனா குடும்பத்தை தரக்குறைவாக பேச முத்து அடிக்க ஓடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
சிறகடிக்க ஆசை: முத்துக்கு இவ்வளவு பெரிய சோதனையா? பைனான்சியர் சொன்ன கண்டிஷன்.. நெஞ்சுவலியில் அண்ணாமலை -
முத்துவின் விபரீத முடிவு.. சிந்தாமணியின் சூழ்ச்சியை முறியடிக்க முடியுமா? சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications