சிறகடிக்க ஆசை: தாய் பாசத்தில் உண்மையை உளறிய ரோகிணி.. க்ரிஷ் கேட்ட கேள்வி? இனி விஜயா முடிவு?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜூன் மூன்றாம் தேதி முதல் ஏழாம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. இதில் ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த உண்மை உடைபட்டு இருக்கிறது. அதாவது ரோகிணி தான் தன்னுடைய அம்மா என்பது தெரிய வந்திருக்கிறது.
இதுவரைக்கும் தன்னுடைய பிள்ளையிடம் தன் பாசத்தை காட்டாமல் இருந்து ரோகிணி, இப்போது தன்னுடைய மகனிடம் கண் கலங்கி அழுதது பார்ப்போரை பீல் பண்ண வைத்திருக்கும் நிலையில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை பார்க்கலாம். அந்த வகையில் சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து மற்றும் மீனாவிற்கு மட்டும்தான் பிரச்சனை மேல் பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது.

அவர்கள்தான் அவமானப்பட்டு கொண்டே இருக்கிறார்கள் என்று ரசிகர்கள் அதிருப்தியை தெரிவித்து வந்த நிலையில் இப்போது ரோகிணியின் உண்மைகளும் உடைப்பட தொடங்கியிருக்கிறது. ரோகிணியின் மகன் கிரிஷிற்கு கண்ணில் அடிபட்டு இருக்கும் நிலையில் ஹாஸ்பிடலுக்கு வந்த இடத்தில் முத்து, மீனா ரோகிணியின் மகனையும் அம்மாவையும் வீட்டிற்கு கூட்டிட்டு வந்திருக்கின்றனர்.
இதை பார்த்து பதறிப்போன ரோகிணி ஒரு பக்கம் பாசத்தோடும், இன்னொரு பக்கம் பயத்தோடும் தவித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் ரோகிணி தன்னுடைய அம்மாவிடம் கிரிஷை எதற்கு இங்கே கூட்டிட்டு வந்த? நீ வீட்டிற்கு கூட்டிட்டு போயிருக்க வேண்டியதுதானே? என்று கேட்க, அதற்கு அவருடைய அம்மா அவன் கண்ணுல அடிபட்டு ரத்தம் கொட்டிச்சு உனக்கு இப்ப கூட உன்னோட சந்தோசம் தான் முக்கியமா?

பிள்ளையை பற்றி நீ நினைச்சு கூட பாக்க மாட்டியா? என்று திட்ட , அதற்கு ரோகிணி எப்படி நான் அவனை பற்றி நினைக்காமல் இருப்பேன். அவன் நான் பெத்த புள்ள அம்மா என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது தூங்கிக் கொண்டிருந்த கிரிஷ் வெளியே வந்து இவர்கள் பேசுவதை கேட்டு விடுகிறார். பிறகு ரோகிணியிடம், "அத்த... நீதான் என்னுடைய அம்மாவா?" என்று க்ரிஷ் கேட்க, ஆமா நான் தான் உன்னோட அம்மா என் பேரு ரோகினி என்று சொல்ல கிரிஷ் ரோகிணியை கட்டிப்பிடித்துக் கொண்டு இருக்கிறார் இப்படியாக ப்ரோமோ முடிவடைந்து இருக்கிறது.
இப்படியான நிலையில் இவர்கள் பேசுவதை மீனாவோ அல்லது முத்துவோ கேட்க வாய்ப்பு இருக்கிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே முத்து மற்றும் மீனா பக்கத்தில் தான் கிரிஷ் படுத்து இருந்திருக்கிறார். அதனால் கிரிஷ் எழுந்து வந்ததை பார்த்து மீனா வெளியே வந்து பார்க்கும்போது இவர்கள் பேசுவதை கேட்பாரா? என்றும் ரசிகர்கள் குழப்பத்தோடு இருக்கிறார்கள்.
அதே நேரத்தில் இந்த உண்மை விஜயாவிற்கு தெரியும்போது விஜயா என்ன ரியாக்ஷன் கொடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் உடனே வந்து விடுகிறது. அதே நேரத்தில் எப்படியும் இந்த உண்மைகள் வீட்டிற்கு தெரிய வருவதற்கு இன்னும் பல மாதங்கள் ஆகும் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது.

காரணம் ரோகினி பற்றிய உண்மை விஜயாவிற்கு தெரிந்து விட்டால் விஜயா மீனாவை விடவும் ரோகிணியை தான் அதிகமாக வெறுப்பார். அதனால் இப்போதைக்கு இந்த உண்மை வெளியே தெரிய வாய்ப்பு கிடையாது. அதனால் ரோகிணி கிரிஷிடம் தன்னைப் பற்றி சொல்வது கூட கனவாக இருக்கலாம்.. என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
Bharathiraja: "கூட இருப்பவர்களையே நம்ப முடியாது..." ரசிகர்களை கலங்க வைக்கும் பாரதிராஜாவின் கடைசி பேட்டி -
"பாசத்துக்குரிய உங்கள் பாரதிராஜா" பேசுகிறேன்.. தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய மாபெரும் இயக்குநர் -
பாரதிராஜா யார்? ஸ்டூடியோக்களில் முடங்கிய திரையுலகை கிராமத்து மண்வாசனைக்கு கூட்டிச்சென்ற கலை வித்தகன் -
பாரதிராஜாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு.. தீவிர மருத்துவ கண்காணிப்பு! இமய இயக்குனருக்கு என்ன ஆச்சு -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே!












Click it and Unblock the Notifications