வெள்ளித்திரையில் சிறகடிக்க ஆசை “மனோஜ்”.. ஜோடி நடிகை யார் தெரியுமா? செம என்டர்டைன்மென்ட் இருக்கு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் கேரக்டரில் நடிக்கும் நடிகர் ஸ்ரீ தேவா வெள்ளி திறையில் நடிகை திவ்யா துரைசாமியோடு சேர்ந்து புது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
சில வாரங்களுக்கு முன்பு ஸ்ரீ தேவா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புது கெட்டப்பில் தன்னுடைய புது தொடக்கம் என்று ஒரு போஸ்ட் போட்டு இருந்தார்.

அதே நேரத்தில் சிறகடிக்க ஆசை சீரியலில் இவருடைய கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இந்த சீரியலில் இவர் எந்த வேலையும் சரியாக செய்யாத சோம்பேறியாக இருந்தாலும் அந்த கேரக்டராகவே மாறி இருக்கும் மனோஜுக்கும் அதிகமான ரசிகர்கள் உருவாகி இருக்கின்றனர். சிறகடிக்க ஆசை சீரியல் தான் விஜய் டிவியின் டிஆர்பி யில் முதல் இடத்தில் இருந்து வருகிறது.
அதனாலேயே இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்திருக்கின்றனர். அதில் மனோஜ் கேரக்டரில் நடிக்கும் ஸ்ரீ தேவாவை பலர் திட்டி வந்தாலும் அவருடைய கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு கொண்டிருக்கிறது. பல நேரங்களில் பாவமான நபராகவும், சில நேரங்களில் சோம்பேறியாகவும், அதிகமாக முத்து கலாய்க்கும் நபராகவும் இருக்கும் மனோஜ் பற்றி தான் இப்போது சீரியல் சாட்சிகள் இருக்கிறது.

இந்த நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூட நான் கொஞ்சம் பிரேக் கிடைச்சாலும் சும்மாவே இருக்க மாட்டேன். ஒரு நாளைக்கு எத்தனை பேரை சந்திக்க முடியுமோ அத்தனை பேரையும் சந்திச்சு வாய்ப்பு கேட்பேன். வாய்ப்பு கேட்டு நாம போய் நிற்கிறது அவமானமாக எனக்கு தெரியவில்லை. இங்கு நம்ம முகம் ஞாபகத்துல இருந்தா மட்டும்தான் நமக்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பாங்க.
ஆரம்பத்தில் நான் சீரியல் வாய்ப்புக்காக ரொம்பவே கஷ்டப்பட்டேன். ஆனால் பெரிய அளவில் எனக்கு வாய்ப்பு கிடைக்காததால் சீரியலே வேண்டாம், சினிமா போதும் என்கிற இடத்தில் இருந்த போது தான் எனக்கு சிறகடிக்க ஆசை சீரியல் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் இதை பண்ணனுமா? வேண்டாமா? என்கிற தயக்கத்தில் தான் இருந்தேன்.
ஆனால் மூன்று வருஷம் நான் பட்ட கஷ்டத்திற்கான பலன் இந்த சீரியல் மூலமாக இப்ப எனக்கு கிடைச்சி இருக்கு. இதுபோல அடுத்தடுத்து கிடைக்கும் வாய்ப்புகளிலும் தொடர்ந்து மக்களை எண்டர்டெயின் பண்ணுவேன் என்று கூறியிருந்தார். அதுபோல சிறகடிக்க ஆசை சீரியல் குழுவினரோடு எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களையும் ஸ்ரீ தேவா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இது அதிகமான வரவேப்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் இவ்வாறு சினிமாவில் நடிக்க இருக்கும் செய்தியை கேட்டு ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள். ஆரம்பத்தில் இருந்து பல சீரியல்களுக்கான ஆடிஷனுக்கு போய் நிராகரிக்கப்பட்ட ஸ்ரீ தேவா துணிவு திரைப்படத்தில் சின்ன கேரக்டரில் நடித்திருந்தார். ஆனால் அதற்குப் பிறகுதான் இவருக்கு சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்து இப்போது அவர் நினைத்தபடியே சினிமாவிலும் நடிக்க இருக்கிறார். அது குறித்த அதிகாரப்பூர்வமான அப்டேட்டை அவர் விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் முதல் நடிகை வாணி போஜன், ப்ரியா பவானி சங்கர் என்ன பல நடிகர்கள் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் இப்போது சிறகடிக்க ஆசை சீரியல் ஸ்ரீதேவா இணைந்து இருக்கிறார்.
-
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications