சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial March 19 Episode) சிறக்கடிக்க ஆசை சீரியலில் 2026 மார்ச் 19ஆம் தேதிக்கான எபிசோடில், முத்து மீனா வாழ்க்கையில் ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கிறது. அதே நேரத்தில் மீனாவை அசிங்கப்படுத்திய விஜயாவிற்கு வக்கீல் சரியான பதிலடி கொடுத்திருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
சிறகடிக்க ஆசை சீரியலில் நேற்றைய எபிசோடில், ரோகிணியிடம் இருந்து டைவர்ஸ் கிடைக்காமல் மனோஜ் ஏற்கனவே டென்ஷனில் இருக்கிறார். அதே நேரத்தில் அவன் அம்மா விஜயா, "இவனுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி விடணும்" என்று வேற லெவலில் பிளான் போட்டு சுற்றிக் கொண்டிருக்கிறார்.
இந்த இரண்டு பிரச்சனையும் போதாதென்று தினேஷ் மீண்டும் வந்து ரோகிணியை மிரட்ட ஆரம்பிக்கிறார். "பணம் குடுக்கலேன்னா உன் ரகசியங்களை எல்லாம் முத்துவிடம் சொல்லிடுவேன்" என்று கெஞ்சவைக்கும் அளவுக்கு பிரஷர் போட்டு விட்டு போகிறார்.
சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
இந்த நிலையில் இன்றைய எபிசோடு (Siragadikka Aasai serial today episode) ஆரம்பத்தில், முத்து தன் கார் ஷெட்டில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது மீனா அங்கே வருகிறார். அதே சமயம் ஒரு கார், ஒரு வேன் வந்து நின்றது. யார் என்று பார்த்தால், முந்தைய எபிசோடில் முத்து காப்பாற்றிய மனநலம் குன்றிய சிறுவனின் பெற்றோர்கள் தான். அவர்கள் முத்துவுக்கு நன்றி சொல்ல வருகிறார்கள்.
அதோடு நின்றுவிடாமல், "நீங்க எங்களுக்கு பெரிய உதவி பண்ணீங்க, அதனால நாங்க உங்களுக்கு ஒரு வேன் வாங்கி கொடுக்கறோம்" என்று சொல்லி அந்த வேனை கீயுடன் கையிலே கொடுத்து விடுகிறார்கள். "நாங்கள் அடிக்கடி டிரிப் போவோம், அந்த வேனை யூஸ் பண்ணிக்கலாம், உங்களுக்கும் வருமானம் வரும்" என்று சொன்னதும் முத்து செம குஷியாகி போகிறார்.
முத்து போட்ட அடி
இந்த சந்தோஷம் நடக்கிற நேரத்திலேயே தினேஷ் அங்கே வந்து நிற்கிறார். அவரைப் பார்த்ததுமே ஏற்கனவே காரில் ஒருமுறை வரும்போது ஒரு பெண்ணை மிரட்டியதால் முத்து அவரை அடித்து துரத்தியது ஞாபகம் வருகிறது. அப்போது "ஒரு உண்மை சொல்லணும்" என்று சொல்லி, ரோகிணியை பற்றிய விஷயங்களை முத்துவிடம் பேச ஆரம்பிக்கிறார். ஆனால் முத்துவுக்கு அந்த விஷயங்கள் எல்லாம் ஏற்கனவே தெரியும். தெரியாதது மாதிரி நடிக்கிறார். பிறகு "உனக்கு என்ன வேணும்?" என்று கேட்க, தினேஷ் நேராக "எனக்கு பணம் வேணும்" என்று சொல்கிறார்.
அதுக்கப்புறம் தான் முத்து ரியல் கேரக்டரை காட்டுகிறார். அவனை ஒரு ரூமுக்குள் அழைத்துச் சென்று செம அடிகொடுக்கிறார். அடிபட்டு முகம் வீங்கியபடி வெளியே வரும் தினேஷ், "இனிமேல் இப்படிச் செய்ய மாட்டேன்" என்று சொல்லி அங்கிருந்து ஓடிப்போய்விடுகிறார்.
விஜயாவின் திமிரு
மறுபுறம் விஜயா, மனோஜை கூட்டிக்கொண்டு வக்கீலை பார்க்க போகிறார். அங்கேயே முத்துவும் மீனாவும் வருகிறார்கள். மீனா வழக்கம்போல அன்பாக "எப்படி இருக்கீங்க அத்தை?" என்று கேட்க, விஜயா ஒரு வார்த்தை கூட பேசாமல் சைலண்டாக நின்று விடுகிறார். பிறகு வக்கீல் சொல்லியதற்குப் பிறகுதான் "நல்லா இருக்கேன்" என்று வாய் திறக்கிறார்.
பின்னர் மனோஜ்-ரோகிணி டைவர்ஸ் கேஸுக்கு கவுன்சிலிங் நடக்கப் போகிறது, அதில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று வக்கீல் மனோஜுக்கு விவரமாக சொல்லுகிறார்.
ஏமாறும் விஜயா
இதற்கிடையில் விஜயா ஒரு ஷாக்கிங் கேள்வி கேட்கிறார் - "டைவர்ஸ் ஆகும் முன்னாடியே அவனுக்கு இரண்டாவது கல்யாணம் பண்ணலாமா?" என்று. இதைக் கேட்ட வக்கீல் நேராக, "அப்படி செய்தீங்கனா நேரா ஜெயில் தான்" என்று கடுமையாக எச்சரிக்கிறார். இதைக் கேட்டு விஜயா அதிர்ச்சியாகி விடுகிறார்.
வக்கீல் கொடுத்த அதிர்ச்சி
அதற்குப் பிறகும் விடாமல், "அப்படின்னா நிச்சயதார்த்தமாவது செய்யலாமா?" என்று கேட்க, அதற்கும் வக்கீல் நோ சொல்லி, "இப்ப எந்த விதமான ஏற்பாடுகளும் செய்யக் கூடாது" என்று ஸ்ட்ரிக்ட் வார்னிங் கொடுக்கிறார். ஆனால் "பெண்ணை பார்த்துக்கலாம்" என்று மட்டும் சொல்லி விடுகிறார். அதோடு இனியாவது நல்ல பொண்ணா பாருங்க, ரோகிணி மாதிரி பெண்ணிடம் சிக்கிக் கொள்ளாமல் இந்த மீனா மாதிரி இன்னொரு பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணிக்குங்க.. அப்பதான் உங்க வீடு நல்லபடியா இருக்கும் என்று விஜயாவை அசிங்கப்படுத்துகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி பிளான் கேட்டு அதிர்ச்சியில் விஜயா.. இனியாவது திருந்துவாரா? மனோஜ்க்கு அசிங்கம் -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணாவிற்க்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. உருக்கமான பதிவு! குவியும் கமெண்ட்ஸ் -
‘சிங்கிள் பசங்க’ நிகழ்ச்சியில் இருந்து விலக காரணம் இதுதான்.. ஒபனாக பேசிய ஸ்ருதிஹா! இவ்வளவு விஷயம் நடந்ததா? -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்: கோமதி நறுக்குன்னு கேட்ட கேள்வி! ஆடி போன பாண்டியன்.. உடையும் குடும்பம் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ













Click it and Unblock the Notifications