Siragadikka Aasai serial: ரோகிணிக்கு எதிராக மனோஜ்க்கு கிடைத்த ஐடியா.. விஜயாக்கு சிக்கல்! முத்து எடுத்த முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial March 7 Episode) சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 மார்ச் 7ஆம் தேதிக்கான இன்றைய எபிசோடில், மீனா குடும்பத்திற்காக முத்து முக்கிய முடிவு எடுத்திருக்கிறார் அதே நேரத்தில் ரோகிணியை மொத்தமாக பிரிவு எதற்காக மனோஜ்க்கு புது ஐடியா கிடைத்திருக்கிறது இதனால் என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம். பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்தது.

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
இன்றைய எபிசோடு (Siragadikka Aasai serial today episode) ஆரம்பத்தில், மனோஜ் - ரோகிணி விவாகரத்து விஷயமே மீண்டும் பேசப்படுகிறது. ரோகிணியுடன் சீக்கிரம் டைவர்ஸ் கிடைக்க என்ன செய்யலாம் என்று மனோஜ் யோசித்து கொண்டிருக்கும்போது, சந்தோஷ் ஒரு ஐடியா சொல்கிறான். "நான் ரோகிணியை காதலிக்கிறேன் என்று சொன்னால் எப்படி? அதைக் காரணமாக வைத்து நீ கள்ளக்காதல் என்று சொல்லி டைவர்ஸ் கேஸை ஸ்ட்ராங் ஆக்கிடலாம்" என்று கூறுகிறார். இதைக் கேட்ட மனோஜ் கொஞ்சம் கோபமாகிறார். ஆனாலும் சந்தோஷ் "நான் சும்மா காதலிக்கிறேன் என்று சொல்வேன், நீ அதை வைத்து கேஸை வலுப்படுத்திக்கோ" என்று விளக்குகிறான்.
அதே நேரத்தில் மீனா வீட்டில் வேறொரு காட்சி நடக்கிறது. முத்து மீனா வீட்டில் தங்கியிருப்பதால், அவருக்காக மீனா வீட்டில் ரொம்ப ஸ்பெஷலாக மீன் குழம்பு செய்து வைக்கிறார்கள். அப்போது திடீரென்று ஹவுஸ் ஓனர் வீட்டிற்கு வருகிறார். "விலைவாசி எல்லாம் ரொம்ப உயர்ந்துவிட்டது. அதனால் அடுத்த மாதம் முதல் வாடகை 3 ஆயிரம் ரூபாய் கூடுதலாக தரணும்" என்று சொல்லுகிறார்.
முத்து எடுத்த முடிவு
இதைக் கேட்ட முத்து,"ஒரே அடியாக 3 ஆயிரம் என்றால் கஷ்டம் ஆகும். நாங்க 2 ஆயிரம் ரூபாய் கூடுதலாக தருகிறோம். ஆனால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு வாடகை ஏத்தக்கூடாது" என்று கூறுகிறார். அதற்கு ஹவுஸ் ஓனரும் சரி என்று ஒத்துக்கொள்கிறார். பிறகு அவர் போனதும் மீனா முத்து தனக்காக பேசியதையும் தன்னுடைய குடும்பத்தின் மீது அவருக்கு இருக்கும் அக்கறையையும் பார்த்து முத்துவுக்கு நன்றி சொல்கிறார்.
வருத்தத்தில் அண்ணாமலை
இதே நேரத்தில் பெரிய வீட்டில் விஜயாவும் அண்ணாமலையும் மட்டும் தான் இருக்கிறார்கள். வீட்டில் முன்பு இருந்த கூட்டம் இப்போது இல்லாததால் இருவருக்கும் வெறுமை உணர்ச்சி அதிகமாக இருக்கிறது. மீனா வீட்டை விட்டு சென்றதை நினைத்து அண்ணாமலை ரொம்பவே வருத்தப்படுகிறார். சாப்பிட கூட மனம் வராமல் மாடியில் போய் பரசுவுடன் பேசிக்கொண்டு இருக்கிறார்.
வருத்தப்படும் விஜயா
வீட்டுக்குள் விஜயா மட்டும் தனியாக நடமாடிக் கொண்டே இருக்கிறார். எல்லாரும் சேர்ந்து இருந்த நாட்களை நினைத்து பார்க்கிறார். ஒரே வீட்டில் இருந்த கூட்டம் இப்போது இல்லாமல் போனதை நினைத்து மனசு கலங்குகிறது. தூக்கம் கூட வராமல் வீட்டில் இங்கும் அங்கும் நடந்துகொண்டே இருக்கிறார்.
இதற்கிடையில் மீனா - முத்து இருவரும் மொட்டை மாடியில் பேசிக்கொள்கிறார்கள். அப்போது மீனா தனது அம்மாவுக்கு ஒரு சொந்த வீடு கட்டி தர வேண்டும் என்று ஆசையை சொல்கிறாள். "மாடியில் ஒரு ரூம் கூட கட்ட முடியாமல் இருக்கிறோம்" என்று வருத்தப்படுகிறார். அதற்கு முத்து "நிச்சயம் எல்லாமே ஒரு நாள் நடக்கும். கவலைப்படாதே" என்று ஆறுதல் கூறுகிறான்.
மறுநாள் காலையில் விஜயா பார்வதி வீட்டிற்கு சென்று பேசுகிறார். "வீட்டில் யாரும் இல்லாமல் ரொம்ப வெறுமையாக இருக்கிறது" என்று தனது வருத்தத்தை பகிர்கிறார். இதனால் மீனாவை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வர விஜயா யோசிப்பாரா? அல்லது இன்னும் பெரிய பிரச்சனை வரப்போகிறதா? என்பதுதான் அடுத்த எபிசோட்களில் தெரியும்.












Click it and Unblock the Notifications