சிறகடிக்க ஆசை: நல்லது செய்த முத்துவை அசிங்கப்படுத்திய ரோகிணி.. மீனா கேட்ட சரியான கேள்வி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மே 13ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்பதை பார்க்கலாம். அதில் மனோஜ்க்காக முத்து புது பிசினஸ் தொடங்குவதற்கு ஐடியா கொடுக்க அங்கு வைத்து மனோஜை ரோகிணி அவமானப்படுத்த அதற்கு மீனா பதிலடி கொடுத்திருக்கிறார். மேலும் சில சுவாரசியமான காட்சிகள் நடந்தது அது பற்றி பார்க்கலாம்.
இந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் குடித்துவிட்டு ரகளை செய்த மனோஜை ரோகிணி அடித்துபிடித்து ரூமுக்கு கூட்டிட்டு போக மீனா முத்துவிடம் நீங்க எவ்வளவு குடிச்சீங்க என்று கேட்க, அதற்கு முத்து நான் குடிக்கல என்று சொல்ல, அதை நம்ப மறுக்கும் மீனா பொய் சொல்லாதீங்க, ஊதி காட்டுங்க என்று சொல்ல முத்து மீனாவை பிடித்து இழுத்து ஊதிக்காட்ட பிடிக்கலையா? என்று கேட்கிறார்.

குடிக்காமலேயே அவ்வளவு பிரச்சனை ஆயிடுச்சு அதனால குடிக்க தோணல என்று சொல்ல, மீனா இனிமே குடிக்க மாட்டீங்களா? என்று கேட்க அப்படியெல்லாம் சொல்ல முடியாது. இன்னைக்கு தோணல நாளைக்கு தோணலாம் என்று முத்து சொல்கிறார். அடுத்த கட்டத்தில் முத்து சவாரிக்கு செல்ல அங்கு ஒருவரை இறக்கி விட அவர் நான் என்னுடைய கடைக்கு போய் பணம் எடுத்துட்டு வரேன் என்று சொல்ல கடைக்கு போய் ஏதாவது வாங்கப் போறீங்களா? என்று முத்து கேட்க அதற்கு இல்லை இது என்னுடைய கடை தான் என்று சொல்லிவிட்டு உள்ளே செல்கிறார்.
அங்கு இரண்டு ரவுடிகள் அவரிடம் சண்டை போடுகிறார். அவர்கள் அந்த கடையை எங்ககிட்ட விற்க வேண்டும் என்று கடை ஓனரை மிரட்டி கொண்டிருக்க முத்து அந்த ரவுடிகளை அடித்து ஓட விடுகிறார். பிறகு கடைக்காரர் வாடகை பணத்தை கொடுத்துவிட்டு முத்துவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது நான் இந்த கடையை வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறவர்களிடம் விற்றுவிட்டு என்னுடைய மகன் பேரனோடு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிடலாம் என்று இருக்கிறேன் என்று சொல்ல,

அதை கேட்ட முத்துவிற்கு மனோஜ் ஞாபகம் வருகிறது. உடனே என்னுடைய அண்ணன் பிசினஸ் பண்ண வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறான். அவனுக்கு இந்த கடையை தருவீங்களா? என்று கேட்க, அதற்கு அவர் சரி கூட்டிட்டு வா என்று சொல்ல வீட்டிற்கு வருகிறார். அந்த நேரத்தில் இரவு குடித்ததால் ரவி மற்றும் மனோஜ் இருவரும் தலைவலியில் இருக்க அதைப்பற்றி அண்ணாமலை விசாரித்துக் கொண்டிருக்கும் போது முத்து வீட்டிற்கு வந்து ஹோம் அப்ளையன்ஸ் கடை ஒன்று விலைக்கு வருகிறது அதை வாங்குறியா என்று மனோஜிடம் கேட்கிறார்.
அதற்கு ரவி இது நல்ல ஐடியா என்று சொல்ல ஸ்ருதியும் இது சம்மர் டைம் நல்ல சேல்ஸ் இருக்கும் என்று சொல்ல விஜயா அது சரிப்பட்டு வராது. இவன் சொன்னா அது விளங்காது என்று சொல்கிறார். அதற்கு அண்ணாமலை முத்து எது சொன்னாலும் சரியா இருக்காதுன்னு சொல்லிடுவா.. எனக்கு என்னவோ மனோஜ்க்கு இது ஏத்த மாதிரி இருக்கும்னுதான் தோணுது என்று சொல்ல மனோஜ் உட்கார்ந்த இடத்திலிருந்து சம்பாதிக்கலாம் என்பதால் எனக்கு இது ஓகே மாதிரி தான் தெரியுது என்று ரோகிணி இடம் சொல்கிறார்.

ரோகிணி முதலில் கடையை பார்ப்போம். பிறகு முடிவு செய்யலாம் என்று என்று சொல்ல எல்லோரும் ஷோரூம் போக முடிவெடுக்கின்றனர். அப்போது மீனா முத்துவிடம் நீங்க எதற்கு இப்படி எல்லாம் பண்ணுறீங்க? நீங்க எது பண்ணினாலும் அது நமக்கு தான் பிரச்சனையா வந்து சேரும். தேவையில்லாத இந்த வேலை எதுக்கு என்று திட்டுகிறார். அதற்கு முத்து என்ன இருந்தாலும் மனோஜ் என்னுடைய அண்ணன் ஏற்கனவே பணத்தை இழந்துட்டான்.
இந்த பணத்தையும் எங்கேயாவது போய் ஏமாந்துட்டா அப்பாவுக்கு கிடைக்க வேண்டிய 27 லட்சம் கிடைக்காமலே போயிடும். அவனுக்கு நல்ல கடையா பார்த்து உட்கார வச்சுட்டா அந்த பணத்தை ஈஸியா வாங்கிடலாம் என்று சொல்கிறார். அடுத்ததாக எல்லோரும் கடைக்கு வந்து கடையை பார்க்க மனோஜ், ரோகிணி, விஜயா எல்லோரும் கடையை பார்த்து வாயை பிளக்கின்றனர்.
முத்து கடை ஓனரிடம் தன்னுடைய குடும்பத்தை அறிமுகம் செய்து வைக்க மனோஜ் கடையை சுற்றிப் பார்த்து ஓனர்சேரில் உட்கார்ந்து சந்தோஷ பட அதைப்பார்த்து ரோகிணியின் விஜயாவும் சந்தோஷப்படுகின்றனர். அடுத்ததாக ஓனர் என்னப்பா எல்லாம் ஓகேவா என்று கேட்க மனோஜ் ஓகே தான் என்று சொன்னதும் முத்து அப்போ பேசிடலாமா சார் என்று கேட்ட ரோகிணி அதெல்லாம் இனி நாங்க பேசுகிறோம் என்று முத்துவை தடுத்து நிறுத்துகிறார்.
அதோடு மனோஜ் ஓனர் சேரில் அமர்ந்திருப்பதை பார்த்து டேய் மனோஜ் போதும் வாடா என்று முத்து பேச அதற்கு ரோகிணி கோபமாகி நீங்க என்ன அவரை எப்ப பார்த்தாலும் வாடா போடான்னு பேசிட்டு இருக்கீங்க? என்று திட்ட, அதற்கு மீனா அவர் ஒன்னும் வேணும்னு வாடா போடான்னு பேசல. அவர் சின்ன வயசுல இருந்தே அப்படி பழகுனதால அப்படி பேசுறாரு என்று பதிலடி கொடுக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications