சிறகடிக்க ஆசை: ஜீவா பெயரை சொல்லி மாட்டும் மனோஜ்.. ரோகிணிக்கு இந்த அவமானம் தேவையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மே 14ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் மனோஜ் ஷோரூம் வாங்குவதற்காக முடிவெடுத்திருக்கும் நிலையில் அதற்கு யார் பெயரை வைக்கலாம் என்று பெரும் பஞ்சாயத்து நடக்க, முத்துவிடம் ரோகிணி மற்றும் மனோஜ் மாட்டியிருக்கின்றனர்.

இந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மீனா சமையலை முடித்து வைக்க விஜய்யா எல்லோரையும் கூட்டிட்டு வா என்று சொல்ல, முத்து வேண்டாம் நீ உட்கார்ந்து சாப்பிடு என்று சொல்ல அதற்கு விஜயா இவ உட்கார்ந்து சாப்பிட்டா எல்லோரும் சாப்பிட வந்தபோது அவங்களுக்கு பரிமாறுவது யாரு என்று சொல்ல அதற்கு அண்ணாமலை அவர்களுக்கு தேவைனா? அவங்க எடுத்து போட்டு சாப்பிடுவாங்க என்று விஜயாவை திட்டுகிறார்.

Siragadikka aasai serial May 14th promo and episode full update

பிறகு மனோஜ் மற்றும் ரோகினி சாப்பிட வந்ததும் கடை பற்றிய பேச்சு வர கடைக்கு யார் பெயரை வைக்கலாம் என்று டிஸ்கஷன் நடக்கிறது. அப்போது மீனா பாட்டி பெயரை வைக்கலாம் என்று ஐடியா கொடுக்க அதற்கு மனோஜ் மற்றும் ரோகினி அது நல்லா இல்ல பழைய பெயராக இருக்கு என்று மறுத்துவிட விஜயா உன்னிடம் யாராவது இங்கு ஐடியா கேட்டாங்களா இன்று திட்ட அதற்கு கோபமான அண்ணாமலை இது மனோஜ் உடைய ஷோரூம் அதனால் அவனுக்கு பிடித்த பெயரை வச்சுக்கட்டும் என்று சொல்ல,

விஜயா தன்னுடைய பெயர்தான் வைப்பாங்க என்று ஆவலோடு காத்திருந்து ஏமாற்றம் அடைகிறார். அப்போது மனோஜ் இப்ப வரைக்கும் எந்த பேரை வைக்கணும்னு முடிவு பண்ணல. இனி யோசிக்கணும் என்று சொன்னதும் விஜயாவின் முகம் மாறுகிறது இதை முத்து கவனிக்கிறார். பிறகு ரூமுக்குள் மனோஜ் மற்றும் ரோகிணி இருவரும் கடைக்கு என்ன பெயர் வைக்க என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது மனோஜ் உங்க அப்பா பெயரை வைப்போமா? என்று கேட்க,

அதற்கு ரோகிணி அப்போ எங்க அப்பா பணத்தை தந்திருந்தா தானே அவர் பெயரை வைக்க என்று சொன்னதும் மனோஜ் அப்போ ஜீவா தான் பணத்தை தந்தது அதனால ஜீவா பெயரையா வைக்க முடியும் என்று கேட்டதும் ரோகிணி கோபமாகி அப்போ உனக்கு இன்னும் அந்த ஜீவா மேல காதல் குறையலையா? என்று திட்டுகிறார்.

பிறகு ஆண்டி பெயரையே வைக்கலாமா என்று ரோகினி சொல்ல மனோஜ் வேண்டாம், அம்மா பேரு அவ்வளவு லக்கி இல்ல. பார்லருக்கு அம்மா பெயரை தான் வச்சோம். அது பாதியிலேயே போயிடுச்சு. முத்துவோட பூ கடைக்கும் அம்மா பேரு தான் வச்சோம் அதையும் கார்ப்பரேஷன் காரங்க தூக்கிட்டு போயிட்டாங்க என்று சொல்ல, அந்த நேரத்தில் அந்தப் பக்கமாக வந்த முத்து இவர்கள் பேசியதை ரெக்கார்ட் செய்து விடுகிறார்.

பிறகு ரூமுக்குள் வந்து அம்மா பெயரை தான் நீங்க வைக்கணும் என்று சொல்ல, அதற்கு ரோகிணி மற்றும் மனோஜ் இருவரும் கோவப்படுகின்றனர். அதற்கு முத்து அம்மா உன் மேல உயிரையே வச்சிருக்காங்க. நீ பண்ண எல்லா தப்பையும் மறந்துட்டு உனக்காக நின்னு இருக்காங்க. அவங்களை நீ வருத்தப்பட வைக்கிறா என்று சொல்லி நீ அம்மா பெயர் வைக்கலன்னா அம்மாவ பத்தி பேசின இந்த ரெக்கார்டை எல்லாருக்கும் போட்டு காட்டிடுவேன் என்று ரெக்கார்டை ப்ளே பண்ண இருவரும் அதிர்ச்சியாக இருக்கின்றனர்.

அந்த நேரத்தில் முத்து அம்மா பெயரை வைக்க வேண்டும் என்று சொல்லி முத்து மற்றும் ரோகிணியை மிரட்டிக் கொண்டிருப்பதை வெளியே நின்று மீனா கேட்டு விடுகிறார். பிறகு மீனா வெளியே வந்ததும் உங்க அம்மா மேல நீங்க இவ்வளவு பாசமா இருக்கீங்க ஆனா அவங்க உங்க மேல ரொம்ப கோவப்படுறாங்க. அவங்க கோபப்படுவதற்கு காரணம் என்ன? சின்ன வயசுல அப்படி என்னதான் நடந்தது என்று கேட்க முதலில் உண்மையை முத்து சொல்ல வருகிறார்.

ஆனால் வழக்கம் போல இந்த முறையும் சொல்லாமல் விட்டுவிட்டு எனக்கு காபி வேண்டும் தலை வலிக்கிறது என்று சொல்ல அதற்கு மீனா நீங்க ஏன் என்கிட்ட மறைக்கிறீங்க? இன்னும் என்னை முழுசா பொண்டாட்டியா ஏத்துக்கலையா? என்று கேள்வி கேட்க, அதற்கு முத்து நான் வெளியே போய் காபி குடிச்சுக்கிறேன் என்று கோபப்பட்டதும் மீனா நானே கொண்டு வரேன் என்று வெளியே வருகிறார்.

அதற்கு பிறகு அண்ணாமலை கதவை பூட்ட போக ரவி அந்த நேரத்தில் வீட்டிற்குள் வந்து நான் பூட்டிக்கிறேன் என்று சொல்லி ரூமுக்கு போக அங்கு ஸ்ருதி ரவி டி-ஷர்ட் மற்றும் லுங்கியை கட்டிக்கொண்டு டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கிறார். அதுபோல ரவியையும் தன்னுடைய நைட்டியை போட்டுக்க அப்பதான் நீ என்னை லவ் பண்றேன்னு அர்த்தம் என்று சொல்ல ரவியும் வேறு வழியில்லாமல் போட்டுக் கொள்கிறார்கள். பிறகு ஸ்ருதி இந்த டிரஸ்ஸில் போய் டீ கொண்டுட்டு வரணும் என்று சொல்ல முதலில் மறுக்கும் ரவி பிறகு சரி என்று டீ போட போகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+